What's new

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு !!!

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – விதிமுறைகள் மாற்றம்!

இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ரேஷன் கார்டு தொடர்பான விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இனி தகுதியற்றோர் ரேஷன் பொருட்களை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஊரடங்கு மாதங்களில் அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணங்களை பெற்று மக்கள் பயனடைந்தனர். இந்த குடும்ப அட்டை தரநிலை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சலுகையாக இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் ஏராளமான பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்துடன் உங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடையுள்ள நிலையில் தற்போது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது காலக்கெடு ஜூன் 30, 2022 வரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இலவச ரேஷனை தகுதி இல்லாத பல லட்சம் பேர் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தது. தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க அவர்களின் ரேஷன் கார்டை ரத்து செய்ய வேண்டும் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 100 சதுர மீட்டர் பரப்பளவில் ஃபிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் தங்களது ரேஷன் கார்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கவில்லை என்றால், ஆய்வுக்குப் பிறகு அத்தகையவர்களின் அட்டை ரத்து செய்யப்படும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

🥰
 
Last edited:
Top