What's new

அவர்கள்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
நீங்களும் நானும்
உணவகம் தொடங்கிய பின்னர்,
அவர்கள் உயர்தர சைவ உணவகமாகிப் போனார்கள்.

நீங்களும் நானும் படிக்கத் தொடங்கிய பின்னர், அவர்கள் உயர்தரக் கல்வி எனப் பேசினார்கள்.

நீங்களும் நானும்
அரசியல் பேசத் தொடங்கிய பின்னர்
அவர்கள் அரசியல் ஒரு சாக்கடை என்றார்கள்.

நீங்களும் நானும் ஊடகங்களில்
போய் அமர்ந்த போது, விபச்சார ஊடகம் என்றார்கள்.

இசையே இறைவடிவம் என்றவர்கள்
நீங்களும் நானும் இசைக்கும் போது
டப்பாங்குத்து எல்லாம் இசையா என்றார்கள்.

நீங்களும் நானும் படம் இயக்கியபோது,
சினிமாவே கெட்டு போச்சி என முடித்து
கொண்டார்கள்.

நீங்களும் நானும் மருத்துவம் படிக்க சென்றபோது,
இவர்கள் எல்லாம் மருத்துவம் படிச்சி என்னாக
போகிறது என்றார்கள்....
நீட் என்றனர்.

அவர்கள் மட்டும் ஆசிரியராக இருந்த போது
மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள். நாமும்
ஆசிரியராக தேர்வானபோது வக்கத்தவனுக்கு
வாத்தியார் வேலை என்றார்கள்.

கஷ்டப்பட்டு நாம் நமக்கான சட்டங்களை
இயற்றிய போது தீர்ப்பு
சொல்லும் இடங்களில் அவர்கள்.....

நீங்களும் நானும் அரசு வேலையில் அமர
தொடங்கிய பின்னர் அவர்கள் அதை
தனியார் துறையாக மாற்றினார்கள்.

இது எதுவுமே புரியாமல் சாதி, மதம், இனமென
சண்டையிடும்போது இவன்களுக்கு இதே வேலையா
போச்சி, எல்லாத்தையும் நாமளே வச்சிப்போம் என
மறுபடியும் சட்டம் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதில் நீங்களும்... நானும்....நாமும்.... யார்?
அவர்கள் யார்?

புரிந்து கொண்டால் நமது சந்ததிக்கு
ஒருநல்ல எதிர்கால சொத்தை விட்டு செல்வோம்.

இல்லையேல், நமது முப்பாட்டனின் இடுப்பு துண்டை
அவர்களுக்கு உறுதிபடுத்திவிட்டு செல்கிறோம்...!!
 
ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845

நிதர்சனமான உண்மை👏👏
 
Top