What's new

இப்படிக்கு இறுதி பக்கம்

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
கனவே கனவே..

அவள் பெயர் மேகா, அவள் அதிகம் யாரிடமும் பேசமாட்டாள்‌. அன்னை இல்லை, தந்தை மட்டுமே உலகம் என வளர்கிறாள்.

அவளுக்கு நெருங்கிய தோழி/ தோழன் என்றால் அவள் எழுதும் "டைரி " மட்டும்தான். தன்னிலமை, தவிப்பு, தனிமை என்று எதையும் ஒன்றும் மறைக்காமல் மறக்காமல் தன் " டைரி" இடம் சொல்லி விடுவாள். யாரையும் நம்பாதவள் தன்னுடைய "டைரி" தவிர.. டைரி மட்டும்தான் அவள் வாழ்வின் அங்கம்..

இப்படி நகர்ந்து கொண்டே சென்ற அவள் நாட்களில் ஒரு புது வித நாட்கள் அவளிடம் வந்து சேர்ந்தது.

அதே ஊரில் மலை அடிவாரத்தில் ஒரு கல்லூரி..அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டுஅவள் சேர்ந்தாள்..
பெண்கள் விடுதியில் தங்கி படித்தாள்.

கல்லூரி விட்டு நடந்து செல்ல வேண்டும் விடுதிக்கு. நடந்து செல்லும் பாதையில் இரு பாதை பிரியும் . ஒன்று ஆண்கள் விடுதி செல்லும் பாதை .. இன்னொன்று பெண்கள் விடுதி செல்லும் பாதை..
அங்குதான் அவனும் வேறு ஊரில் பள்ளி படிப்பை முடித்து விட்டு சேர்ந்தான். இந்த இரு பாதைக்கு இடையில் ஒரு பெரிய மரம் இருக்கும்..அந்த மரத்தடியில் ஒரு Bench போன்ற இருக்கை இருக்கும்..
அங்குதான் மேகா அதிகம் உட்கார்ந்து தனிமையை எழுதுவாள்.

அதே கல்லூரியில் வேறு ஒரு ஊரில் இருந்து பள்ளி படிப்பை முடித்து வந்து சேர்ந்தான் வினோத்.
புது இடம் , புது கல்லூரி என அவனுக்கு தயக்கம். யாரிடமும் பேசுவதிலும் அவனுக்கு தயக்கம்..
கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டால் திக்குவாய் பேச்சுதான் அவனுக்கு வரும். அதை நண்பர்கள் கேளி செய்வார்கள் என்று அதிகம் யாரிடமும் இவன் பேசுவதில்லை..

இருபாலர் படிக்கும் கல்லூரி.. வெவ்வேறு கோணங்களில் வாழும் மாணவர்கள்.. என்றுமே தனிமையை விரும்பும் மேகா. எதையுமே சேர்த்துக்கொள்ளமால் விலகி இருக்கும் வினோத்..

மாதம் ஒருமுறை மேகா தந்தை வந்து பார்த்துவிட்டு மகளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்து விட்டு செல்வார். அவர்கள் இருவரின் சிறிய உரையாடலும் அந்த மரத்தின் அடியில் உள்ள இருக்கையில்தான்.

வினோத் படிப்பில் படுச்சுட்டி. ஆனால் அதை காட்டிக்கொள்வதில்லை. அலட்டிக்கொள்ளவதுமில்லை.
தான் உண்டு தன் வேலை உண்டு என்றே நகரும் அவன் நாட்கள்..

சில மாதங்கள் செல்ல மற்ற மாணவர்கள்போல் அல்லாமல் வினோத் தனியே இருப்பதை மேகா கவனித்தாள். ஒருவேளை இவனும் நம் போல் தனிமையை விரும்புபவனா? என அவளுக்குள் ஒரு கேள்வி. ஆனால் கேட்கமாட்டாள்..

ஒருநாள் கல்வி நேரம் முடிந்து இருவரும் விடுதிக்கு நடந்து செல்லும் வேலையில் வினோத் மேகாவை கடந்து சென்றான்..

மேகா -"வினோத்"

வினோத் திரும்பினான்..

மேகா- " உங்கள் புத்தகத்தில் இருந்து இந்த காகிதங்கள் கீழே விழுந்தது" , என கீழே கிடந்த காகிதங்களை எடுத்துக் கொடுத்தாள்‌.

வினோத் - " Thanks " என நடந்தான்.

மேகா இதையும் அவளுடைய "டைரியில்" குறிப்பிட்டு இருந்தாள்.

மலை அடிவாரத்தில் மரத்தடியில் அழகிய தென்றல் காற்றுடன் மனம் விட்டு பேச டைரியை விரும்புவதே அவளின் தனிப்பட்ட விருப்பம்..

டைரியில் ஆங்காங்கே சிறு சிறு கவிதைகள் என நிரம்பி டைரியும் வண்ணக் கோலத்தில் இருக்கும்..

முதலாமாண்டு முடிந்தும் வினோத்திற்கும் மேகாவிற்கும் எந்த வித மாற்றங்களும் இல்லை.

இரண்டாம் ஆண்டு நடந்து கொண்டிருந்த வேளையில் ஒரு பேச்சு போட்டி தேர்வுக்காக பெயர்கள் தரவேண்டும்..8 பேர் குழுவாக, 6 பெயர்கள் வந்தாலும் 7 வதாக மேகா வேண்டா வெறுப்பாக தன் பெயராக இணைத்துக்கொண்டாள். 8 வதாக யார் என எதிர்பார்க்கும் நேரத்தில் யாரும் பெயர் அறிவிக்கவில்லை..

ஏமாற்றத்துடன் சற்று திரும்பும் நேரத்தில் " வினோத்" என்ற பெயர் அறிவிக்கப்பட்டதும் அவளுக்கு தெரியாமல் ஒரு சிறு புன்னகை அவள் முகத்தில்..

இந்த போட்டிகள் வேறு கல்லூரியில் நடைபெறும்.ஜோடி ஜோடியாக தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.. 3 ஜோடிகள் தேர்வு ஆகிய பின் நான்காம் ஜோடி வேறு வழி இல்லாமல் " வினோத் - மேகா"

வினோத் - " மேகா "

மேகா - " சொல்லுங்க வினோத்"

வினோத் - " எனக்கு கொஞ்சம் திக்குவாய், சரியா பேசவராது. "Emotional ஆகிட்டா ஓவரா திக்கும். நான் பேச ஆசைப்படுறேன். அதுக்குதான் என் பேர் கடைசியா கொடுத்தேன். உனக்கு ஜெயிக்கணும் இந்த போட்டியில நினைச்சா வேற ஆள Choose பண்ணிக்கோ "

மேகா- " நான் ஜெயிக்கணும் ஆசைல இல்ல வினோத். வெளி உலகத்தை பார்க்கணும் பேர் கொடுத்தேன்."

வினோத் - "அப்போ உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே"

மேகா- " நமக்கு தெரிஞ்சது பேசுவோம்..எதுவா இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்"

வினோத் -" நீ சொல்லு, நான் அதையே பண்ணிக்கிறேன்"

இந்த நிகழ்வு எல்லாம் அவள் டைரியில் எழுதி வைத்துக் கொண்டு இருந்தாள்..

போட்டிகள் ஆரம்பம் ஆகின.
அனைத்து கல்லூரிகளின் பங்களிப்பு வந்துக்கொண்டிருந்த நேரத்தில் " தாய்மை வெல்லும்- இதை பேச வந்திருக்கும் மாணவர்கள் வினோத்- மேகா" என்று மைக் உச்சரித்தது..

முதல் பாதி மேகா சிறப்பான கைத்தட்டல் உடன் பேசிக்கொண்டு முடித்தவுடன் வினோத் பிற்பாதியை பேச ஆரம்பித்தான்..

பேசிக்கொண்டே இருந்த சமயம், வினோத் தன் தாயை நினைத்து உணர்ச்சியால் பேச தடுமாறி திக்குவாய் ஆனான்.இதை மேடையின் கீழே இருந்து கவனித்த மேகா வேகமாக மேலே சென்று தண்ணீர் கொடுத்துவிட்டு மீதமுள்ளதை அவள் பேச ஆரம்பித்தாள்.. மனதில் எதும் இல்லாமல் சிறப்பாக பேசி முடித்து வைத்தாள்..

கீழே இறங்கி மேடையின் பின்புறம்,

மேகா- " வினோத், ஏன் என்ன ஆச்சு..நல்லாத்தானே Practice பண்ணீங்க, ?

வினோத் - " ம், கொஞ்சம் Emotional ஆயிட்டேன். அம்மா நியாபகம்"

மேகா - " அம்மாகிட்ட பேச வேண்டியதுதானே "

வினோத் -" இருந்தா பேசி இருக்க மாட்டேனா" என்று சொல்லி அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்

மேகா தன் போல் தாய் இல்லாதவன் என்பதை உணர்ந்தாள்..

பரிசளிப்பு விழா நடந்தது..வினோத் - மேகா ஜோடிக்கு ஆறுதல் பரிசு கிடைத்தாலும் அதுவே அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

அந்த நாள் மேகா தன் "டைரியில்" தன் தாயை நினைத்து ஒரு பக்கமும் வினோத்திற்காக ஒரு பக்கமும் நிறைவு செய்தாள்..

அங்கிருந்து இருவருக்கும் ஒரு சிறுதுளி நட்பு துளிர்விட்டது..அதன் தூரம் வகுப்பறையில் நுழையும் போது ஒரு பார்வை சிறு புன்னகையுடன் பயணிக்கும் தூரம் ஆகும்..

மதிய உணவு இடைவேளை..

இருவரும் தனித்தனியே அந்த மலை அடிவார பாதையில் நடந்து செல்லும் பொழுது மேகா மரத்தின் அடியில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள்..

தூரமாக வந்துக்கொண்டிருந்த வினோத் கவனித்தான்..அவன் கால் பாதை மரத்தை நோக்கி நகர்ந்து சென்றது..

வினோத் -" சாப்பிட போகலயா"

மேகா - " போகனும்"

வினோத் - " அப்புறம் இங்க உட்கார்ந்திருக்க"

மேகா-" எப்பயும் இங்க உட்கார்ந்துட்டுதான் போவேன். பழகிடுச்சு"

வினோத் -" சரி, சாப்பிட்டு வந்து உட்காரலாமே"

மேகா-" இல்ல இருக்கட்டும்..நீ போய் சாப்பிடு " என்றாள்..

வினோத் -"ம் சரி. "

வினோத் நடந்து ஆண் விடுதிக்கு செல்வதை கவனித்துக்கொண்டு இருந்தாள்.

தன் கையில் இருந்த புத்தகத்தை இருக்கையில் வைத்துவிட்டு வினோத் உடன் பழகுவது சரியா? என கேட்டுக்கொண்டாள்..

தினசரி அவள் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை வினோத் கவனித்தாலும் கடந்து சென்று விடுவான்..

மாத இறுதி மேகா தந்தை மகளை காண வந்தார்..

மேகா - " அப்பா நான் வீட்டுக்கு வந்துடட்டும்மா"

அப்பா- " ஏம்மா ஏதாச்சும் பிரச்சினையா"

மேகா - " அதெல்லாம் இல்லப்பா..எப்போ மாச கடைசி வரும், உங்கள எப்போ பார்ப்பேன் , அப்படினு Daily தோணுதுபா"

அப்பா-" இன்னும் ஒரு வருஷம் தான்டா கண்ணு. அப்புறம் அப்பா கூட இருக்கலாம்..இப்போ நல்லா படிடா"

மேகா - " ம் . சரிப்பா , வாப்பா சாப்பிடலாம்"என்று விடுதிக்கு அழைத்து சாப்பாடு பரிமாறினாள்.

எதிரே மேகா வர

வினோத்-" அப்பா வந்தார் போல"

மேகா - " ஹே உனக்கெப்படி தெரியும்.

வினோத் - " இல்ல நீங்க பேசுறது பார்த்துட்டு இருந்தேன்" என்ன சொன்னாங்க அப்பா"

மேகா -" இங்க இருக்க பிடிக்கல சொன்னேன். "

வினோத் - " ஏன் என்னாச்சு"

மேகா-" தெரியல , ஆனால் பிடிக்கல"

வினோத் - " சொல்லுறேன் தப்பா நினைச்சுக்காதே. இங்க நான் பேசுற ஒரே ஆள் நீதான். அந்த போட்டிக்கு அப்புறம்தான் நீ எனக்கு தெரியும். அதிகம் பேசுனதில்லை. ஆனா உன்கிட்ட பேசுறது கூட நான் வேற யார்கிட்டயும் பேசுறது இல்லை. என்ன நீ போயிட்டா இந்த இடத்தை நான் புடிச்சிப்பேன். இன்னும் ஒரு வருஷம் தான், சீக்கிரம் போய்டும். கவலைபடாதே"

மேகா- "இதான் அப்பாவும் சொன்னார்.

வினோத் - " தைரியமா இரு , பார்த்துக்கலாம்"

நாட்கள் நகர வினோத் மற்றும் மேகா பேச ஆரம்பித்தனர். அவர்களுக்கு நட்பு உருவானது. இருவரும் தனிமை மறந்து சிரிக்க கற்றுக்கொண்டனர்..

அவளின் டைரி பக்கங்கள் அழகிய நினைவுகளுடன் நிரம்பிக்கொண்டிருந்தன.

மேகா மெல்ல மெல்ல வினோத்தை ரசிக்க ஆரம்பித்தாள்..

அவனின் பேச்சு, தனிமை, தவிப்பு எல்லாம் அவன் பக்கம் ஈர்த்தன..

வினோத்திற்கும் அந்த துணையில் ஒரு நிழல் துணை வருவது பிடித்திருந்தது..
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
வகுப்பறையில்..

வினோத் -" மேகா படிச்சு முடிச்சு பிரிஞ்சிடுவோம்..அப்போ மறந்திடுவியா"

மேகா -" மறக்க மாட்டேன். ஆனால் உன் memories இருக்கும்.. ஒரு நல்ல memories " நீ மறந்திடுவ நினைக்கிறேன்..

வினோத் -" எப்படி சொல்றது. எதும் நம்ம கையில் இல்ல..So ஒரு முடிவ முன் கூட்டியே சொல்ல முடியாது.. இருந்தாலும் ஒருநாள் உன்ன பாக்க வருவேன்.."

மேகா - " சரி அந்த நாள் என் Birthday வ இருக்கனும் ."

வினோத் - " அய்யோ உன் Birthday எப்போ "

மேகா - "April 27 - " உனக்கு ?

வினோத் -" October -14" இவ்வளவு நாள் இன்னைக்கு தான் Birthday தெரிஞ்சிக்கிறோம்.."

இந்த உரையாடல்கள் முடிந்து விடுதி சென்றதும் தன் "டைரியிடம் " அழ ஆரம்பித்தாள்..

ஏனோ வினோத் மறந்திடுவியா? என்ற கேள்வி அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

அவள் டைரியில் அந்த நாள் பக்கத்தில்.


" இறைவா.. வேண்டாம் என்று ஒதுங்கி வாழ வந்த எனக்கு வேண்டும் என்று ஒரு நட்பை கொடுத்தாய்.

நட்பாய் தொடருமா ? இல்லை தவிப்பாய் முடியுமா?

நாட்கள் கடந்து பதில்கள் வேண்டாம்.. இன்றே பதிலை பதிவிடு "

என்று இருந்தது.. ஒரு துளி கண்ணீர் துளியுடன் அந்த பக்கம் ஒட்டி இருந்தது..


கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வந்தது..அவள் டைரியின் கடைசி பக்கமும் முடிவுக்கு வந்தது..

அந்த கடைசி பக்கத்தில் கீழ்க்கண்ட வார்த்தைகள்..

"
எனக்கு வினோத் ஏன் பிடிச்சது தெரியல.. நாளைல இருந்து அவன பார்க்க முடியாது. எனக்கு இருக்கிற அந்த தவிப்பு அவனுக்கு இருக்குமா? என்ன நினைச்சு பார்ப்பானா? இல்ல Work, life , marriage னு மறந்து போய்டுவானா? இல்ல இந்த வயசுல இதெல்லாம் சகஜம்னு சகஜமா எடுத்துக்கணுமா?

இது காதல் இல்லை மட்டும் தெரியுது.. ஒரு வேளை காதலா இருந்தா? அப்பா ஏத்துப்பாரா?

அப்பாக்கு அந்த வலி தர முடியாது. அப்போ இது காதல் இல்லை.

ஒரு வேளை அப்பாக்கும் வினோத் பிடிச்சிருந்தா? இல்ல இது வாய்ப்பு இல்லை..இது காதல் மாதிரி தெரியல?

அப்போ நான் என்ன எதிர்பார்க்கிறேன்? இந்த எதிர்ப்பார்ப்போட எதுல முடியும்?

எனக்கு வினோத் வேண்டாம்.. அவன் கூட வாழ ஆசையெல்லாம் இல்லை..ஆனா அவன ஒரு வாட்டி பார்க்கணும், Birthday அன்னைக்கு வறேன் சொன்னான்.. ஒரு வேளை உண்மை அப்படி எடுத்துக்கிட்டு காத்திருக்கலாமா? சரி பார்ப்போம்"


என பல கேள்விகளுடன் அந்த டைரியின் கடைசி பக்கத்தை முடித்தாள்.

கல்லூரி காலம் முடிந்தது..பிரிந்து சென்றனர்..

Apr-27 என்ற நாள் வந்தது..பல மாதங்கள் வினோத்தை பார்க்கவில்லை.. காலையில் வேகமாக அப்பாவிற்கு காபி போட்டு கொடுத்துவிட்டு குளித்துவிட்டு புதிதாக ஒரு சுடிதார் அணிந்து கொண்டு எப்படியும் வேகம் வேகமாக ரயில் நிலையம் சென்றாள்.

எப்படியும் திருவண்ணாமலை ரயிலில்தான் அவன் வந்து இறங்குவான்.கண்டிப்பாக பார்க்க வருவான் என்று முனுமுனுத்துக்கொண்டே மேகா ஆட்டோவில் செல்கிறாள்..

ரயில் நிலையம் வந்தடைந்தது. தன் கையில் உள்ள டைரி அவனிடம் தர வேண்டும் என்ற ஆசை,தவிப்பு எல்லாம் சேர்த்து ரயில் நிலையம் அடைந்தாள்..

திருவண்ணாமலை ரயில் தாமதமாக வர இவள் நகத்தை கடித்து கொண்டே இருந்தாள்.. ரயில் வந்தடைந்தது.. அவனிடம் எப்படி பேச வேண்டும் என பயிற்சி எடுத்துக்கொண்டே தவிப்பாய் இருந்தாள்..

ரயில் வந்தடைந்தது.. ஒவ்வொரு பெட்டி பயணிகள் இறங்க இறங்க மேகா மனம் பதைத்துக் கொண்டே இருந்தது..

பாதி பெட்டிகள் பயணிகள் கடந்த பிறகு வினோத் வரமாட்டானா? என்று பதட்டம் ஆகி மெல்ல நடக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரும் அவள் பார்வையில் வினோத்தா ஆக இருக்குமோ என்ற தவிப்பாய் மாறியது..

கடைசி பயணி இறங்கியதும் ஏமாற்றம் அடைந்தாள்.

வினோத் வரவில்லை.. காற்று வேகமாக வீசிக்கொண்டு இருந்தது. மேகா கல்லானாள். அப்படியே ஒரு இருக்கையில் அமர்ந்து கண்ணீர் விட்டாள்..‌காற்றில் டைரி பக்கங்கள் அங்கும் இங்குமாய் ஆடிக்கொண்டிருந்தின.

" Excuse me " என்ற குரல் ,

" வினோத் " என சட்டென்று திரும்பினாள்..

" இங்க உட்கார கூடதும்மா அந்தப் பக்கம் போய் உட்காருங்க " என்றது ஒரு காவலர் குரல்‌..

அந்த ஒரு நொடி வினோத் என்று கூப்பிட சந்தோஷமும் மேகாவிற்கு ஏமாற்றமாய் போனது..

ஒரு மணி நேரம் காத்திருக்கலாம்..ஒரு வேளை என்னை பார்க்கமால் சென்றிருக்கலாம். ஒரு வேளை வேறு ரயிலில் வரலாம் என தனக்கு எதுவெல்லாம் சாதகமாக இருக்குமோ அதையெல்லாம் தன் பக்க கேள்விகளாய் கேட்டுக்கொண்டாள்..

ஆனால் முடிவு வினோத் வரவில்லை.. ஏமாற்றத்துடன் வீட்டிற்க்கு அழுதுகொண்டே செல்ல தயாரானாள்..

வரும் வழியில் தன் தந்தை முன் அழக்கூடாது என் ஒத்திகை பார்த்துக் கொண்டே வீட்டிற்கு வந்தாள்..

தன் டைரியை வீட்டின் ஓரத்தில் வைத்துவிட்டு முகம் கழுவிக்கொண்டு தந்தையிடம் வந்தாள்..

அப்பா-" ஏன்யா பொறந்த நாள் அதுவுமா சோகமா இருக்க?

மேகா - " இல்லப்பா , மனசு சரியில்லைப்பா"

அப்பா- " ஏன்யா என்னாச்சு, அப்பாகிட்ட சொல்லுமா"

மேகா -" அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா" நான் வெளியே வேற போயிட்டேன். சாப்பிட்டியாப்பா?

அப்பா -" இல்லைமா.. நீ வருவ சேர்ந்து சாப்பிடலாம் நினைச்சேன் கண்ணு". கொஞ்சம் தண்ணி கொண்டுவாம்மா?

மேகா " சரிப்பா"

அப்பா -" கண்ணு வினோத் "

மேகா அதிர்ச்சியுடன் திரும்பினாள்..

அப்பா - " கண்ணு வினோத் னு ஒரு தம்பி வந்துச்சு. உன் கூட படிச்ச தம்பியாமே.. உன்னை பார்க்க வந்துருக்கு தம்பி.. Birthday Cake வாங்க கடைக்கு போயிருக்கு "

ஆனந்தத்தில் அப்பாவை அணைத்துக் கொண்டு அழுதாள்.முத்தமிட்டாள். மகளின் தாக்கம் தந்தைக்கு புரிந்தது..

அப்பாவிற்கு தண்ணீர் கொடுத்துவிட்டு வேகமாக டைரி உடன் கடைக்கு ஓடினாள்..

அதற்குள் வினோத் Cake வாங்கிக்கொண்டு நடந்து வந்திருக்கொண்டிருந்தான்..

அவனை பார்த்த மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து கதறி அழுதாள்..வினோத் என்ன சொல்லவது என தெரியாமல் நின்றான்.

மேகா -" இப்படி நொடிக்கு நொடி சாகடிப்பியா"?

வினோத் - புரியல"

மேகா - " I love you "

வினோத் திக்கிக்கொண்டு

"மே மே மே கா லவ் யூ யூ யூ டூ"" என்றான்..

மேகா தவித்த அந்த ஒருநாள் இடைவெளியில் வினோத் தன் காதலை மேகா தந்தையிடம் கூ
றி ஒப்புதல் வாங்கிவிட்டான்..

டைரி சிரித்தது..

டைரி சிரித்துக் கொண்டே மேகாவிடம் ஒரு கேள்வி கேட்டது..

" கடைசி பக்கத்தில் அவனுடன் வாழ ஆசை இல்லை என்று சொன்னாயே " என்று

மேகா சிரித்து கொண்டே" அந்த பக்கத்தை கிழித்து விடு " என்றாள்.
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
மேகா சிரித்து கொண்டே" அந்த பக்கத்தை கிழித்து விடு " என்றாள்.
Loved it.
And the narrative was soooo very interesting that I couldn’t stop reading until finished.
வெறும் வாசிப்பிலே இவ்வளவு எதிர்பார்பும் இன்பமும் விளையுமென்றால் அங்கே நின்று அனுபோகிப்பவர்க்கு எவ்வளவு இன்பம் உள்ளே வெடிக்கும்! அழகோ அழகு. அன்பான படைப்பு.
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
Loved it.
And the narrative was soooo very interesting that I couldn’t stop reading until finished.
வெறும் வாசிப்பிலே இவ்வளவு எதிர்பார்பும் இன்பமும் விளையுமென்றால் அங்கே நின்று அனுபோகிப்பவர்க்கு எவ்வளவு இன்பம் உள்ளே வெடிக்கும்! அழகோ அழகு. அன்பான படைப்பு.
மிக்க நன்றி, உங்கள் கருத்துக்கள் மேலும் படைப்புகள் படைக்க வைக்கும்
 
Top