What's new

உண்மையான அன்பு

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
இப்போ தான் ஒரு Youtube Video பாத்தேன்

அதில் ஒரு பையன் ஒரு பொண்ண Love பன்றான்

ஆனா அந்த பொண்ணு வீட்டுல 19 வயசிலேயே அவளை கல்யாணம் பன்னி வச்சிட்டாங்க

சில வருடங்கள் சென்றது

அந்த பெண் திருமணம் செய்து கொண்டே MSC Degree படித்து முடித்து விட்டாள்

அந்த பையன் 7வது வரை மட்டுமே படித்து இருக்கிறான்

இப்பொழுது அந்த பெண்ணிற்கு விவாகரத்து ஆகி விட்டது

அந்த பையனை மறுமணம் செய்ய விரும்புகிறாள்

ஆனால் அந்த பையன் நல்லவன் இல்லை

2வது திருமணம் செய்வதை பற்றி யோசிக்கிறான்

மேலும் அந்த பெண் வேற Caste என்றும் சொல்கிறான்

இவை அனைத்தும் ஒரு Television Live Castல் Psychiatrist க்கும் அந்த பையனுக்கும் நடந்த ஒரு Telephone உரையாடலில் அறிந்து கொண்டேன்


அதற்கு அந்த Psychiatrist சொன்ன தீர்வு என் வாழ்க்கையோடு ஒத்து போகிறது

அவர் சொன்னது உனக்கு அந்த பெண்ணின் மீது உண்மையான அன்பு இருந்தால் அவளை 2வது திருமணம் செய்ய தயங்கி இருக்க மாட்டாய்

அவள் என்ன Caste என்று யோசித்து இருக்க மாட்டாய் என்று அந்த டாக்டர் அவனிடம் சொன்னார்

சரி இதுக்கும் என் வாழ்க்கைக்கும் என்ன சம்மந்தம்?

நான் Tamil Chatல் ஒரு பெண்ணை காதலித்தேன்

4 மாதங்கள் Telephoneல் உரையாடினோம்

அதன் பிறகு அந்த பெண் என்னை Breakup செய்து விட்டாள்

அதற்கு அவள் சொன்ன காரணம் இரண்டு

ஒன்று நான் MTech படித்துள்ளேன் நீ Degree கூட முடிக்கல

இன்னொன்று நீ வேற Caste நான் வேற Caste, So set ஆகாது

அதுவும் இல்லாமல் உன்னை போன்று ஒரு Lower Caste பையன் கூட பேசினது தப்புன்னு சொன்னாள்

அவள் சொன்னது எனக்கு அப்போ புரியலை

இப்போ புரியுது

அந்த பெண்ணிற்கு என் மீது உண்மையான அன்பு இருந்து இருந்தால், இந்த படிப்பு and Caste எல்லாம் ஒரு தடையாக இருந்து இருக்காது

Because Love is Blind
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
நான் கொஞ்சம் உண்மையை பேசலாம் என்றிருக்கிறேன். காட்டமாக இருந்தால் பொறுத்துக்கணும்

இந்த உண்மைக்காதல்னா எதையும் பாக்க கூடாது அப்படிங்கிற உருட்டு ஒரு 20 வருஷமா தமிழ் சினிமாவில உருவாக்கப்பட்டு இன்னும் உருட்டிக்கிட்டு இருக்கானுங்க. தமிழ் சினிமா காதலில் மட்டும் ஒரு தராதரம் கிடையாது. ஆண்களெல்லாம் தருதலைகள் பொறுக்கி புளிச்சத்தண்ணி குடித்தது ஊர் மேய்ந்து திரிவான். கல்வியிலோ தொழிலிலோ தோற்றப்பொலிவிலோ ஒரு மண்ணும் இருக்காது. ஆனால் பாருங்கள் எக்கசெக்கமாக படித்து பெரிய பணக்கார வீட்டு பெண்ணாக இருப்பாள். இந்த தறுதலையை வலிய வந்து விழுந்து விழுந்து காதலிப்பாளாம். இதுக்கு பேர் தான் உண்மைக்காதலாம். இல்லாட்டி பொய்க்காதலாம்.

கேனைகளே. உளவியலில் விளையாடுகிறார்கள் பொறுப்பற்ற இயக்குனர்கள். தமிழ்நாட்டில் தறுதலைகளின் எண்ணிக்கை அதிகம். அவர்களும் இளமைப்பருவத்தை கடந்து போகத்தான் வேண்டும். அந்த இளம் தருதலைகள் தான் இவனுங்களோட டார்கெட் ஆடியன்ஸ் அப்போது ஏற்படும் எதிர் பால் ஈர்ப்பு என்பது தான் இந்த புது இயக்குனர்களின் முதலீடு. இயலாத தருதலைகள் சினிமா இருட்டில் ஆறுதல் அடைகிறார்கள். அது உண்மையிலிருந்து ஒரு விடுதலை தருகிறது. தோற்றமோ கல்வியோ தொழில் திறமையோ இவையெல்லாம் ஒருங்கே சேர்ந்த status ஓ தேவையில்லை. இருந்தாலும் பார் இவனுக்கு வாய்ததுபோல் நமக்கும் வாய்ப்பாள் என்று. இவன் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொண்டு பெண்பிள்ளைகள் வந்துவிட வேண்டும் என்றும் எதிர்பார்க்க தொடக்கி விடுகிறான். இது பெண்கள் மீது திணிக்கப்படட வன்முறை.

முன்பெல்லாம் கதை சொல்பவர்கள் இயக்குனர்கள். அவர்கள் தமது கதையை சொல்ல சினிமாவை எடுத்தார்கள். இப்போ தொடர்ந்து இந்த மாதிரியே கதைக்களத்தை பார்த்தால் இவனெல்லாம் கூட்டிக்கொடுக்கும் ஆளோ என்பது போல் தோன்றுகிறது. திரையின் வசனமும் பாடலில் வர்ணனையும் காதலன் காதலி போல இல்லை. கடத்திக்கொண்டு போகிறவன் புத்தி நோக்கிலே கதையும் வசனமும் நகர்கிறது. ஒழுக்ககேடு கதாநாயகிகளுக்கு காதல் என்று போதிக்கப்படுகிறது. ஓரளவு வெற்றியும் பெற்றுவிடடார்கள்.

இதுனால எத்தனை பேர் வாழ்க்கை சீரழிஞ்சசுதுன்னு ஒரு கணக்கு எடுக்க வழி இல்லை. ஆனாலும் கேள்விப்படுகிறோம் நேரங்கெட்ட நேரத்திலே வயது முதிர்ச்சி இல்லாமல் வெந்தும் வேகாமல் ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்வது. கொஞ்ச்ச காலத்தில் கரைந்து போகும் மோகம் தணிந்தபின் இயல்பிலேயே இருவருக்கும் பொருத்தமின்மை வெளிப்படும். அது பின் உடம்பாடிலாத வாழ்க்கை.

காதல் என்றால் ஒரு முதிர்சசி வேண்டும். உங்கள் கேசில் அவள் படிப்பு பார்த்தாள் சாதி பார்த்தாள் என்று குற்றம் சாட்டுகிறீர். அவள் என்னவோ பார்க்கிறாள். அது அவள் உரிமை. அவளுக்கு தீர்மானிக்கும் சுதந்திரம் இல்லையா? பிராக்ட்டிக்கலாக இருந்திருக்கிறாள் அந்த பெண். இதே கருமாந்திர குப்பைகள் அந்த பெண்ணை குழப்ப பார்த்திருக்கிறது. இன்னொரு பையனை அவளுக்கு பிடித்திருக்கலாம். யார் கண்டது?

நான் தெரியாமல் தான் கேட்க்கிறேன் ஏன் இந்த எதையும் பார்க்காத காதல் ரிவர்ஸில் வேலை செய்வதில்லை? ஒரு கோட்ப்பாடு என்றால் corollary ம் அதே விதி பொருத்தும் இல்லையா? அவர்களுக்கும் அப்படியே எதிர்பார்க்கும் உரிமை இருக்கிறதல்லவா? நல்ல ஐ ஐ டியில் படித்து பெரிய தொழிலதிபர் வீட்டுப்பையன் ஏன் ஒரு படிக்காத / அழகில்லாத சாதாரண தோற்றமுள்ள பெண்ணை, இன்னும் கொஞ்சம மசாலா சேர்த்தால் ஒழுக்கம் இல்லாமல் தமிழ் சினிமா ஹிரோ போல் குடித்து பொறுக்கி மேய்ந்து அலையும் பெண்ணை துரத்தி துரத்தி காதலித்து கல்யாணம் செய்தே தீருவேன் என்ற கதை திரைக்கு வரவே இல்லை? வராது. ஏன் தெரியுமா? அது ஓடாது. ஏனென்றால் பெண்களில் இப்படி பொறுக்கி தறுதலைகள் இல்லை. படிக்காத பெண்கள் வேண்டுமானால் உண்டு. ஒழுக்கமில்லா பெண்கள் குறைவு / இல்லை.

Is it logical? Psychologists may give further insights about the role of empathy in behavioral patterns. A dark movie hall is a perfect setting to slip into a dream state and be away from the pricking reality. Addiction is a compulsive behavior that keep the yearning alive. Feeding the addicted mass with the supply to satiate their desire is mafia. The definition of mafia is limited supply source. Though many can participate in supply, the entry is restricted by force.
 

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
என்னோட வாழ்க்கை எப்போ சினிமா விமர்சனமா மாறிச்சி 🤔🤔

அன்பே சிவம், அன்பை தவிர இவ்வுலகில் வேற எதுவும் பெரிதல்ல
 
Top