What's new

உரையாடல்

Loubri

Active member
Joined
Jun 5, 2023
Messages
26
Points
33
உன்னிடம் பேச நினைத்த மறுநொடி
எங்கிருந்து தான் எழுகிறதோ
இத்தனை படபடப்பு...

உள்ளங்காலில் தொடங்கி
உடலெங்கும் பரவி
உச்சந்தலை தொடுகிறது
ஒரு வித புல்லரிப்பு...

இது போதாதென்று
இயல்பை மறந்து
இருப்பு பாதை இரயிலென
இதயத்தின் துடிதுடிப்பு...

உன்னிடம் மட்டும் ஏன் இத்தனை பயம்?
அன்று தொடங்கி இன்று வரை
அரைகுறையாய் பேசிமுடித்து
இன்னும் நன்றாக பேசியிருக்கலாம்
என்றே கழிகிறது என் உரையாடல்கள்...
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
உச்சந்தலை தொடுகிறது ஒருவித புல்லரிப்பு... it's a feel ... ❤️
 
Top