What's new

*ஊடுருவல்*

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
*ஊடுருவல்*
உள்ளடக்கம்:1
வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில்
இதழ் ஒடிந்த பூக்கள்..
முகவரி தொலைத்த பறவைகள்..
வாழ்க்கை என்னும் வேக குதிரையின்
கடிவாளம் தவறவிட்ட ஜீவன்கள்..
இவர்கள் பாதையில் கற்கள்..
சிற்சில வறுமை என்னும் முள் கிரீடம்..
இவர்கள் முதுகில்
யானைகளை ஏற்றி விளையாடின
ஆதிக்க குரங்குகள்..
நிகழ் காலத்துடன் போராடும்
தோல் போர்த்திய எலும்பு கூடுகள்..
மரணத்திற்கு காத்திருக்கும்
செல்லா காசுகள்,
பார்க்கலாம் காலனுக்காவது
கருணை இருக்கிறதா என்று...

முதுகுக்கு பின்னால்
முனுமுனுக்கும் கூட்டம்..
புன்னகைத்து கொண்டேன்..
அவர்களுக்கு ஒரு அடி
முன்பு நான் இருப்பதால்தானே...

எதையும் தாங்க பழகி இருந்தேன்
எதையும் எதிர்க்க துணிந்து இருந்தேன்
எதையும் தடுக்க பயின்று இருந்தேன்
இருப்பினும்
கால சுழற்சியில் ஒரு சூழ்நிலை கைதி நான்..

என் எண்ணங்கள் வார்த்தையாவது இல்லை
எப்போதும் வார்த்தைகளை அடக்கி,
மறுபடியும் எண்ணங்களாக்கி
மனதில் ஆழ குழி தோண்டி
புதைத்து கல்லறை கட்டுகிறேன்..
என் எண்ணங்கள் என்று உயிர்த்தெழுமோ?

என் எண்ணைகளை என் மனதினால்
என்றுமே பிரசவிக்க இயலாதென்று
உணர்த்தியது காலம்..
இதோ
மறுபடியும் புதுபிக்கிறேன்
என் எண்ணங்களுக்கு கட்டிய கல்லறையை...

சூறாவளியின் மையத்தில் நான்
சுனாமியின் சுழற்சிக்குள் நான்..

நினைப்பதை எல்லாம்
செய்யவிடுவதில்லை காலம்..
தான் நினைப்பதைத்தான்
நம்மேல் புகுத்துகிறது..

காலத்தை இழுத்துப்பிடித்து
காட்சிகளை மாற்ற
திறமை உண்டு எனக்கு
கோள்களின் கோளாட்டத்தை
கற்றதனால
காலத்தின் கணக்குகளை
கவனித்தபடி
நகர்கின்றன எனது நாட்கள்..

குழந்தை குணம் மாறி போச்சு..
வியாபார வாழ்கை ஆச்சு..
அன்புக்கு மதிப்பு போச்சு.
காசுதான் கடவுள் ஆச்சு..
சிரிப்புக்குள்ளும் வேஷம் ஆச்சு..
பந்தபாசம் எங்கே போச்சு..
நெஞ்சமெல்லாம் வஞ்சம் ஆச்சு..
நேசம் மறந்து நாள் பல ஆச்சு..
வாழ்க்கை ரொம்ப அவசரமாச்சு..
நல்லதெல்லாம் செத்து போச்சு..
எல்லாமே நவீனமாச்சு..
இந்த மனிதம் தான் எங்கே போச்சு??

குருடர்கள்
நிறங்களை பற்றி
விவாதிப்பதில்லை..
செவிடர்கள்
இனியகுரல் தேடி
ஓடுவதில்லை..
ஊமைகள்
மொழி மோகம்
கொள்ளவதில்லை..
ஒருவேளை..
நம்மை குறை இன்றி படைத்தது
இறைவனின் பிழையோ?

இப்போதெல்லாம்
நான் அழுவதில்லை..
ஏற்றுகொள்கிறேன் வாழ்க்கையை..
எதிர்பார்கிறேன் மாற்றங்களை..

வாழ்க்கை பயணம்..
நீண்டு நெளிந்த பாதையில்

எத்தனை புன்னகைகள்..
எத்தனை கண்ணீர்த்துளிகள்..
எத்தனை கோவங்கள்..
எத்தனை வெறுமைகள்..

மறந்து போன முகங்கள்..
மறக்க நினைக்கும் முகங்கள்..
நம்மையே கொஞ்சம்
மறக்க செய்யும் முகங்கள்..

எத்தனை உணர்வுகள்..
எத்தனை நெகிழ்ச்சிகள்..
எத்தனை உறவுகள்..
எத்தனை பிரிவுகள்.

முடியாததேதும் இல்லை
கிடைக்காத பொருட்கள் இல்லை
வெறுக்கின்ற உள்ளம் இல்லை
பொய் முக மனிதர் இல்லை..

கரைந்து போன நிமிடங்களுக்கு
கடத்தி போன தருணங்களுக்கு
மறுபிறவி கொடுக்கும் கடவுள்
கற்பனை..

இருந்தாலும்..
இது தீர்வு அல்ல..
இது தொடர்ந்தால்...
இது தொடர்ந்தால்...

இப்படியே உறங்கி போவேன்..
விடியல் மறந்து போகும் என் இரவு..
இது முடிவு இல்லை
இது மயக்கம்..

விழித்து கொண்டேன்..
கடந்து போன நிமிடங்கள் நினைத்து..
கடக்க வேண்டிய காலம்
வீணடிதேனோ..

விழித்து கொண்டேன்..
இது தீர்வு அல்ல..
இது தொடர்ந்தால்..
இப்படியே உறங்கி போவேன்..

கற்பனை சிறை உடைக்க
வலிய நெஞ்சம் வேண்டும்..
நிஜத்தை பிரித்துணர
நீடிய சாந்தம் வேண்டும்..

விழித்து கொண்டேன்..
இனி கற்பனை உலகம் வேண்டாம்..
இது உறக்கம் இல்லை
ஒருவகை மரணம்...

பிறந்து விட்டதற்காய்
வாழ்க்கை இல்லை...
வாழ்வதற்கே
பிறந்திருக்கிறோம்..
பாதைகேற்ற பயணம்
வேண்டாம்..
பயணதிற்கேற்ற
பாதை செய்வோம்..
🥰🙏🙏🙏🙏🙏🥰
 
Top