- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,931
- Points
- 133
"தோசை மாவு பிரிஜ்ஜில் இருக்கு. எடுத்து ஊத்திக்கோங்க"
"சரி"
"ஊத்தி முடிஞ்சதும் மீதி மாவ மறக்காம மறுபடியும் பிரிஜ்ஜில் வச்சிருங்க."
"சரி"
"சட்னி நாளைக்கு காலை வரைக்கும் வரும். அதனால அதையும் மறக்காம பிரிஜ்ஜில் வச்சிருங்க."
"சரிம்மா"
"கொடியில துணி காயுது. நாளைக்கு காலைல மறக்காம எடுத்திருங்க."
"காலைல ஒருவாட்டி ஞாபகப்படுத்து."
"அயர்ன் துணியெல்லாம் கட்டைப் பைல எடுத்து வச்சிருக்கேன். நாளைக்கு அந்தப் பாட்டி வந்ததும் கொடுத்திருங்க"
"சரிம்மா"
"லைட்டை போட்டுட்டு, ஃபேனைப் போட்டுட்டு ஆஃப் பண்ணாம சுத்தாதீங்க. போன மாசம் கரண்ட் பில் எவ்வளவு வந்ததுன்னு தெரியுமில்ல?
"தெரியும்மா."
"ஏதாவது புதுசா சமைக்கிறேன்னு கிச்சன் பூரா மெஸ் ஆக்கிடாதீங்க. வந்து கிளீன் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்."
"சரி"
"ரெண்டே நாள்ல எல்லா கொழுப்புத்தனத்தையும் பண்ணிடனும்னு திரியாதீங்க."
"சரிம்மா"
"நான் இல்லேன்னு தெரிஞ்சதும் மேல் வீட்டுக்காரி வந்து வழிஞ்சுகிட்டு இருப்பா. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்களும் அவகிட்ட பல்லைக் காட்டிக்கிட்டு நிக்காதீங்க."
"சரிம்மா, சரிம்மா..."
"எல்லாத்துக்கும் சரிம்மா சரிம்மான்னு மண்டையை ஆட்டிட்டு வீட்டுக்கு போனதும் பேஸ்புக்ல ஜனகராஜ் படம் போட்டீங்க இருக்கு வேடிக்கை.."
“சரி, நான் அப்படி செய்ய மாட்டேன்”

Last edited: