What's new

எது சந்தோஷம்?

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
வாரத்தில் ஆறு நாளு அசராம
உழச்சிப்புட்டு
ஞாயித்து கிழமயிலே நானும்தான்
வீடு வந்தேன்
எத்தனையோ களைப்புகள் எனக்குள்ள இருந்தாலும்
என் மகளை அழச்சிக்கிட்டு வெளியில நான் போனேனே..
இருசக்கர வண்டியில முன்னாடி aஏத்திக்கிட்டு
அவ பேசும் பேச்செல்லாம் மறுக்காம
கேட்டேனே
என்னோட இளவரசி அவளத்தான்
கூட்டிகிட்டு
நகர்வலமா நினைச்சுக்கிட்டு நானும் தான் போனேனே..
அவ கேட்ட எல்லாமே வாங்கி தர
என்னால
முடியாது என்றாலும் முகம் சுளிக்க
மாட்டாலே.

சித்தம் கலங்கி நானே சில நேரம்
இருக்கயிலே
முத்தம் ஒன்னு தந்து மொத்தமுமே
மாத்திடுவா
வாழ்க்கையில ஆனந்தம் இதுதானா
எனக்கேட்டா
ஆனந்தம் இது இல்ல பேரானந்தம்

என்பேனே..

இன்று என் மகளுடன் செலவிட்ட நேரத்தில் என் மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்கிறேன்
அன்புடன் The Popeye..🚬🚬
 
Last edited:
Top