- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
பட்டு போல மேனியில
பவளம் போல கண்ணிருக்க
எட்டெடுத்து நீ நடக்க
அன்னமது தோற்று நிற்கும்
மயில் தோகை போல குணம்
மென்மையாக தான் இருக்கும்
மழை நேர மேகமாக
கருங்கூந்தல் பறந்திருக்கும்
உருட்டி விட்டு சோலி
சிரிப்புல தான் கலந்திருக்கும்
தூத்துக்குடி முத்தாக
பல்வரிசை அமைஞ்சிருக்கும்
இப்படித்தான் அவளையுமே
வர்ணிக்க வாய் வலிக்கும்
எவ்வளவு சொன்னாலும்
எல்லாம் தாண்டி தான் அவ அழகிருக்கும்
பவளம் போல கண்ணிருக்க
எட்டெடுத்து நீ நடக்க
அன்னமது தோற்று நிற்கும்
மயில் தோகை போல குணம்
மென்மையாக தான் இருக்கும்
மழை நேர மேகமாக
கருங்கூந்தல் பறந்திருக்கும்
உருட்டி விட்டு சோலி
சிரிப்புல தான் கலந்திருக்கும்
தூத்துக்குடி முத்தாக
பல்வரிசை அமைஞ்சிருக்கும்
இப்படித்தான் அவளையுமே
வர்ணிக்க வாய் வலிக்கும்
எவ்வளவு சொன்னாலும்
எல்லாம் தாண்டி தான் அவ அழகிருக்கும்