What's new

கடலில் கலக்கிறேன்..

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,895
Points
133
ஆழ அழகியல் சொல்லும் கடலும்,
அதிலே உறங்கும் முத்தும் என் பிள்ளை என்பேன்..
கதிரவன் தூங்கிட நினைத்தால்,
கவர்ந்து அதை சுமக்கும் ,
கடல் மடியும் தாயின் மடி என்பேன்.

கடலுக்கு அடியில் ஒரு சொர்க்கம் என்றால்
கடலுடன் வாழ்வதும் சொர்க்கம் அன்றோ?
நிலம் தொட நினைக்கும் அலைகள் எல்லாம்
நீந்தி பாதங்கள் தொடுவதும் அழகோ..

அலை அலையாய் வந்திறங்கும்
வரிகளுக்கு எல்லாம் விளக்கம் தருவேன்,
கண் மறந்து கவிதைகள் எழுதி
கடல் அலைக்கு பரிசளிப்பேன்..

அலை சொல்லும் மொழி எல்லாம்,
எந்தன் தாய்மொழி என உரைப்பேன்..
அதனுள் கரைந்திடும் என் வாழ்க்கை,
அகிலம் போற்றும் அன்பென்பேன்.

ஓய்வலையே ஓய்வலையே,
உனக்கு என்றும் ஓய்வில்லையே..
கலங்காமல் நான் நின்று,
கலங்கரை விளக்காய் உன்னை காதலிப்பேன்..

உன்னோடு பயணிக்கும்
ஒரு ஒரு நொடியும்,
ஒவ்வொன்றாய் நான் இங்கு ரசிப்பேன்,
உந்தன் சுவாசத்தில் வரும் காற்றை,
உயிரோடு கலந்திட நான் சுவாசிப்பேன்..

மஞ்சள் வெயில் மாலையில்,
மனதில் இரவி நிறைகின்றான் ..
உன் மேல் ஒரு தலை காதல் கொண்டு,
உன் பின்னால் அவனும் மறைகின்றான்..
கண் கொள்ளா காட்சி என காண இங்கு,
கடற்கோடி காதலும் கேட்பதுண்டு..
நிலவோடு நீ பேசும் இரவினிலே,
நீ தந்த காதல் தவிப்பினிலே..
காணாமல் அவனும் செல்கின்றான்..
காதல் வலியில் காலை வரை தவிக்கின்றான்.


நீ கருவறையில் சுமக்கும் சிப்பிகள் எல்லாம்,
பனிக்குடத்தில் முத்தாய் மாறுவது ஏன்?
நீ தத்தெடுத்து வளர்த்த சங்குகள் எல்லாம் சந்தங்கள் அமைப்பது ஏன்?
நீதான் வளர்ப்பு தாயென மீன்கள் எல்லாம் உன்னுடன் நீந்துவது ஏன்?


என்னை மாற்றும் கடல் அலையே..
என்னுள் மாற்றமாய் வந்தவளே..
என்னை மறக்கும் ஒரு பொழுது,
உன்னை காணிடும் மறு பொழுது..
எந்தன் கவலைகள் நீங்கிடுதே..

என் கண்ணீரும் உன்னுள் உப்பாய் மாறிடுதே..
photo-1593269616982-ff99e05ffe62.jpeg
 
Last edited:

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
ஆழ அழகியல் சொல்லும் கடலும்,
அதிலே உறங்கும் முத்தும் என் பிள்ளை என்பேன்..
கதிரவன் தூங்கிட நினைத்தால்,
கவர்ந்து அதை சுமக்கும் ,
கடல் மடியும் தாயின் மடி என்பேன்.

கடலுக்கு அடியில் ஒரு சொர்க்கம் என்றால்
கடலுடன் வாழ்வதும் சொர்க்கம் அன்றோ?
நிலம் தொட நினைக்கும் அலைகள் எல்லாம்
நீந்தி பாதங்கள் தொடுவதும் அழகோ..

அலை அலையாய் வந்திறங்கும்
வரிகளுக்கு எல்லாம் விளக்கம் தருவேன்,
கண் மறந்து கவிதைகள் எழுதி
கடல் அலைக்கு பரிசளிப்பேன்..

அலை சொல்லும் மொழி எல்லாம்,
எந்தன் தாய்மொழி என உரைப்பேன்..
அதனுள் கரைந்திடும் என் வாழ்க்கை,
அகிலம் போற்றும் அன்பென்பேன்.

ஓய்வலையே ஓய்வலையே,
உனக்கு என்றும் ஓய்வில்லையே..
கலங்காமல் நான் நின்று,
கலங்கரை விளக்காய் உன்னை காதலிப்பேன்..

உன்னோடு பயணிக்கும்
ஒரு ஒரு நொடியும்,
ஒவ்வொன்றாய் நான் இங்கு ரசிப்பேன்,
உந்தன் சுவாசத்தில் வரும் காற்றை,
உயிரோடு கலந்திட நான் சுவாசிப்பேன்..

மஞ்சள் வெயில் மாலையில்,
மனதில் இரவி நிறைகின்றான் ..
உன் மேல் ஒரு தலை காதல் கொண்டு,
உன் பின்னால் அவனும் மறைகின்றான்..
கண் கொள்ளா காட்சி என காண இங்கு,
கடற்கோடி காதலும் கேட்பதுண்டு..
நிலவோடு நீ பேசும் இரவினிலே,
நீ தந்த காதல் தவிப்பினிலே..
காணாமல் அவனும் செல்கின்றான்..
காதல் வலியில் காலை வரை தவிக்கின்றான்.


நீ கருவறையில் சுமக்கும் சிப்பிகள் எல்லாம்,
பனிக்குடத்தில் முத்தாய் மாறுவது ஏன்?
நீ தத்தெடுத்து வளர்த்த சங்குகள் எல்லாம் சந்தங்கள் அமைப்பது ஏன்?
நீதான் வளர்ப்பு தாயென மீன்கள் எல்லாம் உன்னுடன் நீந்துவது ஏன்?


என்னை மாற்றும் கடல் அலையே..
என்னுள் மாற்றமாய் வந்தவளே..
என்னை மறக்கும் ஒரு பொழுது,
உன்னை காணிடும் மறு பொழுது..
எந்தன் கவலைகள் நீங்கிடுதே..

என் கண்ணீரும் உன்னுள் உப்பாய் மாறிடுதே..
View attachment 18290
நினைவுகள் என்பது கடல்
அலை போல....

அருகில் வரும் போது
அதை விட்டு விலக
தோன்றும்....

தொலைவில் இருக்கும்
போது ரசிக்க

தோன்றும்....

pngegg (20).png


slazzer-edit-image.png
 
Top