What's new

கதை சொல்லவா...

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133

மாலையிடும் சொந்தம்

முதல் அத்தியாயம்

'எனக்கே எனக்கான வைபவ நிகழ்வுகளில்,
என்னையே வேடிக்கை பார்க்கிறேன்....'

கூடத்தில் இருந்த பழைய கால மர ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள் சஞ்சனா...

யாருக்கெல்லாம் பத்திரிக்கை வைக்க வேண்டுமென மாமியார் அதிகாரத்தை, மருமகளிடம் காட்டிக் கொண்டிருந்தார் அவளின் பாட்டியம்மா..அப்பாவைப் பெற்றவர்...

பழைய காலத்து வீடு... நவீன வசதிகளுடன் மராமத்து பணிகள் அவ்வப்போது செய்யப்பட்டு அழகாக இருந்தது......

இன்னும் சில வாரங்களில் சஞ்சனாவின் திருமணம்... அவனைப் பார்த்த, பேசிய அந்த நிகழ்வு நினைவடுக்கில் மறுபடியும் காட்சியாக ஓடியது...

மாப்பிள்ளை வீட்டார் கோயம்புத்தூரில் ஜவுளி வியாபாரம் ...நம்மள மாதிரியே ஊரில் நல்ல பேர், வசதி..நம்ம சின்ன பாப்பாக்கு தோதான இடம் என ஆரம்பித்த பேச்சு, திருமண நிச்சயத்தில் முடிந்திருந்தது...

சஞ்சனாவின் குடும்பம், தலைமுறை தலைமுறையாக கும்பகோணத்தில் ஹோட்டல் நடத்தி வருபவர்கள்... ஓட்டல் காரங்க வீடு என்றால் அங்கே பிரபலம்...பாட்டியம்மாவின் பெயரில் தான் உணவங்கள் இயங்கின..

பெண் பார்க்கும் படலம் கோயிலில் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தனர்.. ஒரு ஞாயிற்றுக் கிழமையில் அங்கிருந்த ராமசுவாமி கோயிலில் குடும்பங்கள் சந்தித்துக் கொண்டனர்..

பொண்ணும் பையனும் தனியா பேசிக்கட்டும் என்றார் பையனின் அப்பா...

சஞ்சனாவுக்கு சிறியதாக ஒரு பயம்...அவள் வளர்ந்த சூழல் அப்படி...

ஓரிடத்தில் அவள் அமர்ந்திருக்க அவன் நேர் எதிரே தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தபடி பேசினான்...

நவ நாகரீக தோற்றம் முகத்தில் தெரிந்தது..
கோயில் என்பதால் மடித்து விடப்பட்ட சட்டை, வேட்டியில் வந்திருந்தான்.. அலை அலையாக கேசம்... தீர்க்கமான கண்கள், கூர் நாசி... வசீகரிக்கும் தோற்றமென தோன்றியது...

அவளின் படிப்பு, வேலை பற்றி விசாரித்தான்.. அவனுடைய தகவல்களையும் பகிர்ந்தான். தந்தையின் தொழிலில் ஈடுபடாமல் வேறு நிறுவனம் வைத்திருந்தான்..

'உங்களுக்கு சம்மதம் தானே சஞ்சனா???'

அவன் கேட்டான்..இவள் தலையை ஆட்டினாள்...

'உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க..'

கேட்டு அவன் மொபைலில் அழைப்பு விடுத்து பதிவு செய்து கொண்டான்..

'ஏதாவது பேசணும்னு தோனுச்சுனா, call பன்னுங்க..'

அதற்கும் தலையாட்டினாள்...

மென்சிரிப்புடன், 'போலாமா ? தேடுவாங்க..' என்றான்..

திருமணம் நிச்சயிக்கப்பட்டது சில நாள்களில்...

தொடரும்....

வெண்ணிலா
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
மாலையிடும் சொந்தம்

அத்தியாயம் - 2


சஞ்சனாவுக்கு ஏனோ முழுமனதாக எதிலும் ஈடுபட முடியவில்லை..

அவன் ஒரு முறை அழைத்துப் பேசியிருந்தான்... அவ்வப்போது புலனத்தில் (whatsapp) குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டனர்..

சாரங்கபாணி கோயில் சென்றிருந்தாள் ..மாலையில் கூட்டம் அவ்வளவாக இல்லை....பெருமாள்தான் அவளின் மானசீக நண்பன்...நெருக்கமானவன்..

சுந்தரருக்கு ஈசன் போல, சஞ்சனாவிற்கு பெருமாள் ... சக மார்க்கம்(தோழன்)

இதைச் செய், அதைச் செய் என்று சராசரி பக்தையைப் போன்ற கோரிக்கைகள் வைக்க மாட்டாள்...நண்பனாக பேசுவாள்...உள்ளத்தின் வழியே தகவல்கள் பரிமாறுவாள்..கருத்துகள் கேட்பாள்...அடிக்கடி நேரிலும் பல மணி நேரம் வந்து பார்ப்பாள்...

சயனத் (படுத்திருக்கும் கோலம்) திருக்கோலத்தில் அவன் அவளை பாரத்து புன்னகைத்தான்...

'இந்த கல்யாணம் நெருடலாகவே இருக்கிறதே..ஏதாவது வழி காட்டு' என்றாள்..

சிவப்பு மலர் ஒன்றை அளித்து, பூரண சம்மதம் என காட்டினான்..

சந்நிதியின் வெளியில் படிக்கட்டுகளில் சிறிது அமர்ந்திருந்தாள்...

மனம் தெளிவாக இருந்தது...

வீடு திரும்பியபோது பஜ்ஜி வாசம் வரவேற்றது....அக்கா , அத்தான் வந்திருந்தார்கள்...வீடே கலகலவென இருந்தது...பாட்டியம்மாவும் அத்தானும் பேசிக்கொள்வது அப்படி... சஞ்சனாவின் அக்கா உள்ளூரிலேயே உறவினில் திருமணம் செய்திருந்தாளள்...அடிக்கடி வருவார்கள்..

அக்கா மெல்லிய உடல் வாகு...நல்ல உயரம்..அப்பாவின் சாயல்... பாட்டியம்மாவின் செல்லம்...

சஞ்சனா அப்படியே அம்மாவின் சாயல்...சராசரி உயரம்...மெல்லிய உடல்வாகு என்று சொல்லிவிட முடியாது..

சஞ்சனாவின் அம்மா மராத்திய வம்சா வளி.. சிறிது வசுந்தரா தாஸ் சாயலில் முகம் என்று சொல்லுவார்கள் ..முக்கியமாக கண்கள்...
பெண்கள் கல்லூரியில் படித்ததால் அதிகமான காதல் கோரிக்கைகள் வாய்ப்பில்லாமல் போனது..

வீட்டில் எல்லாருமே கல்யாண வேலைகளில் தான் மூழ்கியிருந்தார்கள் கல்யாண பெண்ணைக் கூட அதிகம் கண்டு கொள்ளவில்லை...

அக்கா மட்டும் கிளம்பும்போது கேட்டாள்.

'அவரோட பேசறியா.. ஏதாவது வாங்கனும்னா சொல்லு..வார இறுதியில் போலாம்'

அன்றிரவு அவனிடமிருந்து செய்தி சத்தம்...

'சஞ்சனா...' - அவன்

'ஹலோ..' - இவள்

'எப்படியிருக்க...' (எப்போது ஒருமைக்கு மாறினான் எனத் தெரியவில்லை)

'நல்லா இருக்கேன்...'

'நாள் எப்படியிருந்தது...' - அவன்

'நல்ல நாள் தான்.. கோயிலுக்கு போயிருந்தேன்.. ' - இவள்

'நல்லது...' - அவன்

'தூங்கலயா..' - இவள்

'இன்னும் கொஞ்ச நேரத்தில் ..' - அவன்

'நீங்க எப்படி இருக்கீங்க.. ' - இவள்

'நல்லா இருக்கேன்... சிரிப்பு பொம்மை 😃 ஒன்று அதனுடன்...

'நல் இரவு...இனிப்புக் கனவுகள் .. ..'- அவன்

'நல் இரவு ... இனிய கனவுகள்... '- இவள்..



தொடரும்...

வெண்ணிலா
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133


மாலையிடும் சொந்தம்

அத்தியாயம் - 3


அடுத்து வந்த நாள்களில்
அவன் அதிகம் பேசவில்லை...
தினமும் காலை வாழ்த்தும் இரவு வணக்கமும் மறக்காமல் அனுப்பினான் சில விசாரிப்புகளோடு...பணி நிமித்தமாக பூனா செல்வதாகச் சொல்லியிருந்தான்.

சஞ்சனாவின் தோழியொருத்தி அழைத்திருந்தாள்.. நேரில் வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தாள்...

வார விடுமுறையில் தோழியை சந்திக்கச் சென்றாள்... அவளின் அண்ணன் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார்.. சஞ்சனாவிற்கு சில மிட்டாய்கள் அளித்தனர்...அங்கும் இவளின் கல்யாண பேச்சு தான்..

தோழியின் அம்மா கேட்டார்,

'வேலைக்கு வேண்டாம்னு எழுதிக் குடுத்துட்டியா நீனு..'

'இன்னும் இல்ல ஆன்டி.. சொல்லியிருக்கேன்... ,பரீட்சை முடியும் வரை போகலாம்னு...'

சஞ்சனா அங்கிருந்த தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தாள்..

இரவில் அவன் அழைத்திருந்தான்...

'எப்படியிருக்க சஞ்சனா..'

'நல்லா இருக்கேன். நீங்க ஊருக்கு திரும்பிட்டீங்களா..? எப்படி இருக்கீங்க..?

'காலைல தான் வந்தேன்..'

'ம்ம்..'

'அப்றம் என்ன விஷேசம் ..'

'ஒன்னுமில்லையே..'

'ஹா ஹா... அப்டியா..'

'ம்ம்..'

'நம்ம கடையிலேயே கல்யாண ஜவுளி எடுத்துக்கலாமா..? இல்ல அங்கே திருபுவனம் இல்லனா காஞ்சிபுரம் விருப்பப் படறாங்களா? '

நம்ம என்பதை அழுத்திச் சொன்னானோ...ஏதோ ஓர் உரிமை தோன்றியது அதில்...பிடித்திருந்தது ...

'வீட்டில் கேட்டுட்டு சொல்லவா'

'உனக்கு எப்படி பிடிக்கும்.. ?
, இங்க நம்ம ஊர்ல சிறிய பார்டர் அதிக சரிகையில்லாமல் விரும்புவாங்க... சில மாதிரிகள் அனுப்பறேன்.. பிடிச்சிருக்கா பாரு... '

'சரி'

தந்தையின் தொழிலில் ஈடுபடவில்லைதான். ஆனாலும் நிறைய தெரிந்து வைத்திருந்தான்.

'ம்ம்...எனக்கும் கொஞ்சம் எளிமையா தான் பிடிக்கும்...அதிகம் கனமில்லாமல்..'

'ம்ம் ஹூம் ... நல்லது...'

'சரி வீட்ல கலந்து பேசிட்டு சொல்லு... நெய்ய குடுத்துடலாம்...'

'ம்ம்...'

'உங்களுக்கு என்ன மாதிரி எடுக்கறீங்க... '

'நம்ம கடையிலேயே எடுத்திடலாம்.. ..., வரவேற்பிற்கு உன்னோட தேர்வு தான்... உனக்கு எது பிடிக்கும்...'

'மான்யவாரில் ஷெர்வானி வாங்கலாமா...? உங்க உயரத்துக்கு நல்லா இருக்கும்ல...

'கண்டிப்பா... அதுதான் சொல்லிட்டேனே.. உன்னோட விருப்பம் தான்... '

'ஆமா நான் உயரமா...எப்போ கவனிச்ச..'

'நான் உங்க பக்கத்துல நின்னப்போ தெரிஞ்சது'

'ஓகோ...'

உளறிட்டமோ....சைட் அடிச்சதா நினைத்திருப்பாரோ..

நாள்கள் வேகமாக நகர்ந்தன..பாட்டியம்மா தான் எல்லாரையும் ஏவிக் கொண்டிருந்தார்..

அவன் அனுப்பிய பட்டுப்புடவை மாதிரிகளில் எதை தேர்ந்தெடுப்பதென குழப்பம்..அவ்வளவு அழகாக சிறந்ததை அனுப்பியிருந்தான்...

ஏக மனதாக ஒரு தங்க நிறம் கலந்த தாமரை வண்ண புடவையைத்
தேர்ந்தெடுத்தனர்... அன்னப்பறவைகள் ஆங்காங்கே அமர்ந்திருந்தன...அவற்றில் சில கற்கள்..

அந்த வாரத்தில் ஊரிலிருந்து சஞ்சனாவின் தாய் வழி பாட்டியம்மா வந்திருந்தார். கல்யாணத்திற்கு முன்கூட்டியே வந்துவிட்டார்.

பாரம்பரிய வழக்கம் மாறாமல் அவர் மட்டும் மராத்திய பாணியில் புடவை அணிந்திருப்பார்.

தொடரும்..

வெண்ணிலா
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Vidhu 😍ivlo detailing include pandradhu romba nalla irukku... Endha avasramum illama porumaiyya nagarum kadhai... A good read... Keep writing da
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Vidhu 😍ivlo detailing include pandradhu romba nalla irukku... Endha avasramum illama porumaiyya nagarum kadhai... A good read... Keep writing da
Thanks anna
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133


மாலையிடும் சொந்தம்

அத்தியாயம் - 4

பாட்டியம்மா வந்ததிலிருந்து சஞ்சனாவிற்கு ஏதோ ஒரு நிறைவு...

அழகான ஒற்றைக் காப்பு பரிசாக வாங்கி வந்திருந்தார். உருண்டையான தங்க காப்பில், சில வண்ணக் கற்கள் நடுவில் பதிக்கப்பட்டிருந்தன. கம்மல் திருகாணி போன்று ஒரு அமைப்பு. திருகி அணிய வேண்டும் . மிகவும் பிடித்திருந்தது அந்த நவீன வடிவ காப்பு.

கையில் அணிவித்து அழகு பார்த்தார். காலில் விழுந்து வணங்கிக் கொண்டாள்.

வார இறுதியில் அக்கா அத்தானுடன் கடைவீதி சென்றாள். அவளிடம் கேக்காமலேயே வாங்கிக் குவித்தனர்.

'பெங்களூரில் பெண்கள் நவநாகரீகமாக இருப்பாங்க சஞ்சனா. சல்வார் , பைஜாமா மட்டும் போடாதே. நாம தனியா கடைக்கு மறுபடியும் போலாம் இன்னும் சில உடைகள் வாங்க..அத்தான விட்டுட்டு . அமேஸான் ல கூட போட்டுக்கலாம்..'

'சரி.., பழகிக்கறேன்...'

அவன் பெங்களூரில் வசித்து வந்தான்.

அதன் பின்னர் வந்த ஓர் நாளில் குல தெய்வம் கோயிலுக்குச் சென்று வந்தார்கள் . அத்தையம்மாவும் மாமாவும் கூட கோயிலுக்கு வந்திருந்தார்கள்.

அத்தை மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தான். கல்யாணத்திற்கு எப்படியும் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தான். சஞ்சனாவின் தோழன் அவன்.

குலதெய்வத்திடம் மனமுருக வேண்டினாள்.

அவனிடமிருந்து புலன செய்திகள் அதிகம் வரவில்லை. மறுபடியும் வெளியூர் சென்றிருந்தான்.

'மும்பையில் லெகங்கா வாங்கிடவா சஞ்சனா. புகைப்படம் அனுப்பறேன். பாத்துட்டு சொல்லு... அனுப்பிடறேன் வாங்கி..'

ஒரு ஆரஞ்சும் பொன்னிறமும் கலந்த வேலைப்பாடமைந்த உடையை தேர்ந்தெடுத்தாள்.

அவனுக்கு அளவு கேட்டு இவளே தேர்வு செய்த நீல வண்ண ஷெர்வாணி ஆர்டர் செய்திருந்தாள்.

திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. சொல்ல இயலாத ஓர் உணர்வு.. பயமோ பரவசமோ ஏதோ ஒன்று மனதில்.

முக புத்தகத்தில் அவனிடமிருந்து நட்பழைப்பு. உறுதி செய்வதற்கு முன் சில புகைப்படங்களை, பதிவுகளை தனக்கு மட்டும் தெரியும்படி மாற்றினாள். கள்ளத்தனம் வந்தது இப்போதே.

அவனின் பக்கத்தை அன்று முழுக்க ஆராய்ந்ததில் நாள் ஓடிவிட்டது இரவு தூக்கத்தையும் தூக்கிக் கொண்டு.

புகைப்படங்கள் அதிகமில்லை.. ரசித்துப் பார்த்த சில இடங்கள். சஞ்சனா போல சுயமிகள் (selfie) இல்லை . அரிதாக சில பதிவுகள். அறிவியல் , தொழில் நுட்பம், சமூகம் சார்ந்தவை.

குறுந்தாடியில் அழகாக கம்பீரமாக இருந்தான்... திரும்பத் திரும்ப அந்த சில பதிவுகள்,புகைப்படங்களை பார்த்தாள்.

வழக்கமாக வாங்கும் நகைக்கடையில் சில புதிய அணிகலன்களும், பழைய நகைகள் சிலவற்றை உருக்கி மாற்றியும் செய்யச் சொல்லியிருந்தார்கள்.

வருங்கால நாத்தனார் அழைத்திருந்தார். கோயம்புத்தூரில் நடைபெறும் வரவேற்பிற்கு ஒப்பனை அலங்காரம் எப்படி செய்யலாமென கேட்டு.

'உங்க விருப்பம் எப்படி அக்கா??

'உனக்கு எப்படி பிடிக்கும்...? ' நீளமான முடி உனக்கு.. அதற்கு ஏற்றாற் போல செய்யலாம் ...'

அழகுக் கலை நிபுணரிடம் பேச வைத்தார்.

அன்றிரவு அவன் பேச்சு வாக்கில் சொன்னான்.

'சிலருக்கு ஒப்பனை தேவையில்லை சஞ்சனா..., மெலிதான அலங்காரம் போதும் உனக்கு...'

கவனித்திருக்கறான் போல். மனதில் பதித்துக் கொண்டாள்

சஞ்சனாவின் ஊர் வழக்கப்படி மாப்பிள்ளை ஊரில்தான் கல்யாண முகூர்த்தம் நடக்கும். பெண்ணின் ஊரில் வரவேற்பு நடக்கும்.

அவனின் தந்தை கேட்டுக் கொண்டதால் மாப்பிள்ளை ஊர் வழக்கப்படி வைத்துக் கொண்டார்கள்..

கும்பகோணத்தில் மண்டபத்தில் திருமணம். அந்த வார இறுதியில் ஞாயிற்றுக் கிழமையில் கோயம்புத்தூரில் மாலையில் வரவேற்பு என ஏற்பாடாகியிருந்தது.

சித்தி சித்தப்பா , வாண்டுகள், அத்தையம்மா மாமா என நெருங்கிய உறவுகள் எல்லாருமே வந்து விட்டனர். வீட்டில் சமையல் வாசனை , பேச்சு சிரிப்பு சத்தம், அலங்காரமென ஒரே அமர்க்களம்.. அக்கா தான் அதிகம் அலைந்து கொண்டிருந்தாள்..., அத்தானையும் உட்கார விடாமல்..

அவ்வப்போது அத்தை மகன் பேசினான் வீடியோ அழைப்பில்..

'மெகந்தி போடறப்போ அங்க இருப்பேன் அம்மு...'

'ம்ம்..'

'உன் ஆத்துக்காரர் என்ன சொல்றார்??'

'அவர் பணியில் நேரமில்லாமல் இருக்கிறார்...அதிகம் பேச முடியல...'

'அப்டியா!!.. '

'அம்மு அறையில் இரவில் லைட் எரியுதாமே.. தூங்கறதில்லனு கேள்விப்பட்டேன்...'

'அவங்க அப்படி பேச மாட்டாங்க...'

'இப்போவே அந்த பக்கம் சாஞ்சிட்டியா...என்ன ஒரு சப்போர்ட்!! ம்ம் நடத்து.. '

'நீனு அடி வாங்கப் போற..'

சத்தமாக சிரித்தான்..

ரெண்டு நாளில் கல்யாணம்.

இரவு பத்து மணி இருக்கும். அவன் வீடியோ அழைப்பு விடுத்திருந்தான். அவசரமாக தலை முடியை சரி செய்து கொண்டாள்.. அழைப்பை ஏற்றாகி விட்டது.

'சஞ்சனா ..'

'சொல்லுங்க... எப்படி இருக்கீங்க ..'

'பாத்தா எப்டி இருக்கேன்? '

'மாப்பிள்ளை மாதிரி"

'ஹா ஹா ...மாப்பிள்ளைதான் இப்போ..'

சிரித்தாள்..

'அழகா இருக்கே சஞ்சு. கொஞ்சம் ஃபோன முகத்தை விட்டு தூரமா தள்ளிப் புடி... '

சஞ்சனா சஞ்சுவாக சுருங்கியிருந்தது ..

இரவு உடையில் சங்கோஜமாக இருந்தது..

'என்ன சாப்ட...??

'நாள் எப்படி..??'

'எல்லாரும் என்ன செய்றாங்க...??'

பேசிக் கொண்டே போனதில் கடிகாரம் நள்ளிரவு 12 மணியைக் காட்டியது .

'சரி தூங்கு... கல்யாணப் பொண்ணுக்கு கருவளையம் வந்துடப் போகுது...'

'நீங்க ..?'

'எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு... அரை மணி நேரம் ஆகும்..'

'மாப்பிள்ளைக்கு வராதா கருவளையம்.... ??'

'ஹ ஹா..என்னை யாரு பாக்க போறாங்க.. பொண்ணு மேல தான் பார்வை இருக்கும்.. வராது... தூங்கு...'

'ம்ம்...'

'நல் இரவு..'

' இனிய கனவுகள் ....'

தொடரும்....

வெண்ணிலா
 
Top