What's new

களவாடிய பொழுதுகள்...!💜

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
அவனுடனான என்னுடைய பொழுதுகள்..!
அறிமுகம் செய்து கொண்ட காலை பொழுதுகள்...
தொலைவில் இருந்தும் இதயத்தை பரிமாறிய மாலை பொழுதுகள்...
காலம் நேரம் மறந்து கதை பேசிய இரவு பொழுதுகள்...

என்னை மறந்து அவன் குறுஞ்செய்தியில் சிரித்த பொழுதுகள்...
சிறு ஊடலிலும் அமைதி காத்து பேசிய இனிய பொழுதுகள்... சிந்தனைக்குள் அவனை சிறைவைத்த பொழுதுகள்...

நினைவு முழுவதும் அவனை நினைக்க வைத்த பயண பொழுதுகள்...

நிஜத்தில் அவன் வரவை எதிர் பார்த்து காத்திருக்கும் பொழுதுகள்...

என்னிடம் களவாடிய ஓவ்வொரு மணிதுளிகளுக்கும் அவன் ஒருவனே சொந்தக்காரன்...!
💜✨
IMG_20230201_225356_762.jpg
 
Top