What's new

கவிதைனு சொல்லிக்கவா 3

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
சுகமான சுமை நீயடி


அழகிய சுமையே....
சுமையெனும் சுகமே.....

அழுத்தச் சுவடுகள்
அமைக்கின்றேன்....

கடலின் அலைகள்
கரைத்து கரைத்து....
அழித்து.... மறைத்திட.....

மறவாது .... அலுப்பின்றி....
காதலெனும் ஆழத்தால்
நிறைத்து நிறைத்து...
பதிக்கின்றேன்.....

சுகமான சுமையின்
சுவடுகளை.....

மீண்டும் மீண்டும்..
.

download (20).jpeg
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133


மாறும் நிறங்கள்



20240402_103435.jpg



நாணத்தால்
வெட்கிச் சிவந்ததோ ...


நடுக்கத்தால்
சிலிர்த்து வெளிரியதோ ....

வாடி உதிர்ந்து விடுவோம்
என அறியாத ....
உணராத ...

நிறம் மாறும்
பச்சோந்தி இலையில்....
சில நாள் வீற்றிருக்கும் ....

பூரித்து பூத்து நிற்கும் ....
இன்றைய அழகிய பூ ....
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
download (1) (18).jpeg

நீராகிறாய்...
கரைகிறேன் காணாமல்
உன்னில் கலைந்து....

நிலமாகிறாய் ...
உறைகிறேன் கனமாகி
உன்னில் கலந்து....

காற்றாகிறாய்....
பறக்கிறேன் உயர உயர..
உன்னால் மிதந்து...

நெருப்பாகிறாய்....
குளிர்கிறேன் விறுவிறுத்து
உன்னுள் இயைந்து...

ஆகாயமாகிறாய் ...
தேடலாகிறேன் எல்லையற்று....
உன்னால் இயங்கிட ....
 
Top