ஒவ்வொருமனிதனுக்கும்
மூன்று வாழ்க்கைகள்
உண்டு. தனிப்பட்ட சொந்த
வாழ்க்கை,
பொது வாழ்க்கை,
மற்றும் அவரே அறியும்
ரகசியமான வாழ்க்கை.
மூன்றாவது சொல்லப்பட்ட இந்த ரகசியமான வாழ்க்கையின் சந்தோஷங்கள், துயரங்கள், கொண்டாட்டங்கள், அச்சங்கள், அளவற்ற மகிழ்ச்சி போன்ற அனைத்துமே, அவரவருக்கு மட்டுமே சொந்தமானது.
எதுவொன்றின் பொருட்டும் அவைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை..
அவரவரின் மன உலகுக்குள் மட்டுமே எப்போதும் பயணிக்கிறது,
நினைத்துச் சிரிக்கிறது,
பரிதவித்து அழுகிறது,
ஒரு மனிதனுக்கு பொறுமையும் மௌனமும் மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல்கள். பொறுமை மனதளவில் வலிமையாக்கும்.மௌனம் உணர்வு ரீதியாக வலிமையாக்கும்.
மனம் பக்குவப்பட்டால், பாதை தெளிவாகும். பாதை தெளிவானால், பயணம் எளிதாகும், பயணம் எளிதானால் வாழ்க்கை இனிதாகும்.
நம் மனம் எப்போதும் நம்மைவிட அடுத்தவர்களுக்காகதான் அதிக நேரம் செலவிடுகிறது.
மனம் தன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளாதவரை, அது மேலும் மேலும் துன்பத்தை உருவாக்கும். மனதைப் புரிந்துகொள்வதுதான் அமைதியின் தொடக்கம்.
வயது என்பது உடலுக்கு தான். மனதுக்கு அல்ல. மனதை இளமையாக வைத்து கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.
#வாழ்த்துகள்.