What's new

காப்புக்கட்டுதல் பற்றி சிறு விளக்கம்!!!🥰❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காப்புக்கட்டு பற்றி சிறு விளக்கம்

1. ஆவாரம் பூ
2. பீளைப்பூ
3. வேப்பிலை
4. தும்பை செடி
5. நாயுறுவி செடி
6. தலைப்புள்
என 5 வகையான செடிகள் காப்புகட்டிற்கு பயண்படுத்த வேண்டும்.

ஆனால் தற்காலங்களில் 3 வகை மட்டுமே பயண்படுத்துகிறார்கள்

தைமாதம் முதல் உத்ராயணத்தில் ஏற்ப்படும் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும்.

மார்கழிமாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுசானத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள்.

மார்கழிமாதம் வைகுண்டம் செல்ல வேண்டிய முன்னோர்கள் இங்கேயே தங்கிவிடாமல் இருக்க அவர்கள் வாசனையை நீக்க அவர்கள் பயன்படுத்திவந்த பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்.

மேலும் பருவ நிலை மாற்றத்தால் நோய் தொற்று வராமல் இருக்க வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி
பயன்படுத்தாத பழைய பொருட்களை எரிப்பார்கள்
காப்பு கட்டுவார்கள் இது போகி பண்டிகையாகும்.

1) ஆவாரம் பூ
தைமாதம் மகர மாதம் தட்சிணாயணம் முடிந்து உத்திராயணம் ஆரம்பமாகும் காலம் சூரியன் வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்றம் வரும். பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும் .
சூரியனின் தீட்சன்யம் அதிகமாக பூமியில் விழும் இதற்கு கரிநாள் என பஞ்சாங்கத்தில் போடப்பட்டிருக்கும். இந்த வெப்பத்தின் தாக்கம் பல நோய்களை கொண்டுவரும்.

நமது கிராம்ப்புறங்கில் நடைபயணம் செய்பவர்கள் இந்த வெப்ப தாக்கம் வராமல் இருக்க ஆவாரம் பூவை தலை பாகைக்குள் வைத்து கட்டிக்கொண்டு செல்வார்கள் சில கிராமங்களில் சமையல் அறையில் அதிக உஷ்ணம் வராமல் இருக்க ஆவாரம் பூவை கொத்தாக் வைத்திருப்பார்கள்.
உஷ்ணதாக்கத்தால் உடல் சமநிலை இழக்காமல் இருக்க ஆவாரை பயன்படும்
( மேலும் மகர சங்கராந்தி நுழையும் காலம் இம்மாத சங்காரகனால் அதிகபாதிப்பு தைமாத்தில் வரும் இதனை தடுக்கவும் ஆவாரை பயன்படும்)

2) பீளைப்பூ
இது உடலில் உள்ள நீர்சத்துக்களையும் தாதுக்களையும் சமநிலையில் வைக்கும்
உஷ்ணத்தால் கிட்னி பாதிக்கப்படாமல் பாதுகாக்கும்.

3) உஷ்ணத்தால் சருமம் பாதிக்கப்பட்டு அம்மை தோல்நோய்கள் வராமல் இருக்க வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

4) நாயுருவி
வெப்பத்தால் பக்கவாதம் ( sunstroke) வராமல் இருக்க நரம்புமண்டம் பாதிக்கப்படாமல் இருக்க புதனிற்குறிய நாயுருவி காப்புக்கட்டிற்கி பயன்படுத்தப்படுகறது.

5) தும்பை செடி
நல்ல எதிர்ப்புசக்தியையும் ரத்தத்தில் மற்றும் உடலில் உள்ள முக்கிய நீர் பகுதி இதயத்தை நுரையீரலை கபாலத்தை நாசியை சூழ்ந்துள்ள நீர்ப்பகுதிகளில் நோய்தொற்று வராமல் பாதுகாக்கவும் மயக்கம் வராமல் பாதுகாக்கவும் பிதுர்களின் தோஷம் வராமலும் தடுக்கிறது.
( மரபணு நோய்)

6) தலைப்புள் கணம்புள் என்றும் சொல்வார்கள்.
( கணம்புள் நாயனார் தன் இருப்பிடத்தை குளிர்விக்க இதனை பயன்படுத்தினார்)
இது வீட்டிற்குள் உஷ்ண பாதிப்பை தராமல் உள்வெப்பநிலையாக ( AC போல்) வைக்க காப்புகட்டப்படுகிறது.

அனைவரும் காப்புக்கட்டுங்கள்.
நம்முன்னோர்கள் நமக்கு வழங்கிய ஆரோக்ய வாழ்வின் பாரம்பர்யத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

*அனைவரும் நல்ல ஆரோக்யத்துடன் இருங்கள்... 😃🙏

🥰🥰🥰🥰🥰
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,300
Points
153
காப்பு கட்டுதல் இனிதே நிறைவுற்றது! 🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காப்பு கட்டுதல் இனிதே நிறைவுற்றது! 🥰🥰🥰🥰
இங்கும் 🥰❤ காப்புகட்டுதல் இனிதே நிறைவுற்றது 🥰🙏 @Aadhini
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காப்பு கட்டுதல் இனிதே நிறைவுற்றது! 🥰🥰🥰🥰
இனிய தை 🌾🧉🌾பொங்கல் 🌾🧉🌾திருநாள் நல்வாழ்த்துக்கள் 🥰🙏 என் அன்பு தோழியே @Aadhini
 
Top