What's new

செவிலியர்..

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
வெண்ணிற சீருடை அணிந்தே..
கண்ணிலே கருணை பொழிந்தே..
மக்களை காக்கவே துணிந்தே..
தன் மகத்துவம் ஓர் இனம் தருதே..

மண்ணிலே பெரிய நோய்கள்..
பல மாந்தரை கவ்வி பிடிக்க..
நித்தம் நித்தம் புதிதாய்..
நம் இரத்தம் குடிக்க பிறக்கும் ..

எத்துனை நோய் வந்த போதும் ..
சக்தியொன்றை நமக்களித்து ..
நித்தமுமே நம்மை காக்க ..
ரத்தமென அவர் பாய்வார் ..

நித்திரைகள் தினம் தொலைத்தே..
புத்தராய் ஆசைகள் துறந்தே..
வித்தகன் போல பணியில்..
முத்திரையும் அவர் பதிப்பார்..

உத்தமர் காந்தி நேரு என,
எத்தனை பேரை புகழும்,
சத்தியம் காக்கும் உலகம்
இத்தகையோரை மறக்கும்

கத்திரி வெயிலும் ஒன்றே
கடல் சுற்றிடும் புயலும் ஒன்றே
எந்த சூழலிலும் அவர்தாம்
ஏற்றமுறு பணி தொடர்வார்

போரொன்று வந்தால் கூட
புறமுதுகு காட்டி ஓட
போர்வீர்னை போல அவரும்
போர்களத்தில் வீர்னை காப்பார்.

நேரம் காலம் எனவே
ஏதும் இல்லா நிலையில்
நல்லோர் தீயோர் என்று
பாரா நல் மனம் கொள்வார்

மக்கள் உயிரை காக்க
மகத்தாய் சேவை புரியும்
அத்துணை புகழுக் குறிய
செவிலியர் யாவர்க்கும் வணக்கம்.

செவிலியர் பற்றி எழுதும்
எம்மொழிக் கதுவே சிறப்பு
அவர் புகழ் புரியா பிறர்க்கு
மண்ணில் இடமும் எதற்கு?

தொழு நோய் வந்தவர் தம்மை
துரத்தி அடிக்கும் நம்மில்
கருணை கொண்டு அவரை
கரு போல் தன்னில் சுமந்து

வெறுப்பை உமிழும் மனிதர்
தனில்..
செவிலியர் தான் புனிதர் !!
அன்பை எங்கும் விதைக்கும்

அவர்தாம் கடவுள் என்பேன்!!

(முன்னரே அன்னை தெரசா பற்றி எழுத எனக்கு ஆசை . ஆனால் அப்பொழுது எல்லாம் எழுத முடியாத இது இன்று அரட்டையில் தோழி நியா(niya) அவர்களை காணும் பொது எழுத தோன்றியது. நன்றாக இருப்பின் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை அளியுங்கள்.)

செவிலியர் பணியை சிறப்பாய் மேற்கொள்ளும் தோழி நியா அவர்களுக்கும் அவர் போல அப்பணியில் இரவு பகல் பாராமல் மக்களை காக்கும் ஏனைய செவிலியர்களுக்கும் என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்)

அன்புடன் The Popeye
 
Last edited:
Top