What's new

தினம் ஒரு தகவல்!!!

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தினம் ஒரு தகவல்

இந்தியாவின் தலை எழுத்தை மாற்றிய அந்த வருடங்கள்

1498 - வாஸ்கோடகாமா இந்தியா வருகை.

1600 - இந்தியாவில் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவ்வாறு அனுமதி அளித்தவர் ஜஹாங்கீர் ஆவார்.

1615 - ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை.

1757 - பிளாசி யுத்தம்.

1770 - வங்காளப் பஞ்சம், சன்னியாசி எழுச்சி.

1779 - கட்டபொம்மன் தூக்கு.

1806 - வேலூர் கோட்டை புரட்சி.

1857 - முதல் இந்திய சுதந்திரப் போர்.

1858 - பிரிட்டிஷாரின் நேரடி அதிகாரம்.

1877 - விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டல்.

1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்.

1905 - கர்சன் பிரவுவால் கொண்டு வரப்பட்ட வங்காளப் பிரிவினை.

1906 - முஸ்ஸீம் லீக் உதயம்.

1908 - திலகர், வஉசி கைது.

1911 - டெல்லி தர்பார், டெல்லி இந்தியாவின் தலைநகரானது, ஆஷ் கொலை, வங்கப் பிரிவினை ரத்து போன்ற பல சம்பவங்கள் இந்த ஆண்டில் நடந்தது.

1913 - கதர் கட்சி உதயம்.

1914 - முதல் உலகப் போர் ஆரம்பம்.

1915 - காந்தியின் இந்திய வருகை.

1916 - லக்னோ ஒப்பந்தம், கதர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடுதல்.

1918 - முதல் உலகப்போர் முடிவு.

1919 - ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரௌலட் சட்டம்.

1920 - கிலாபாத், ஒத்துழையாமை இயக்கம் துவக்கம். கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உதயம்.

1921 - மாப்ளர் எழுச்சி.

1922 - சௌரி சௌரா மக்கள் எழுச்சி, ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்படல்.

1925 - கான்பூர் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு.

1927 - சைமன் குழு புறக்கணிப்பு (அதில் இந்தியர் யாரும் இல்லாததால்).

1928 - சைமன் கமிஷன் வருகை, லாலா லஜபதிராய் இறப்பு.

1929 - டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங்கின் குண்டு வீச்சு, லாகூர் காங்கிரஸில் முழு சுதந்திரத்திற்கான தீர்மானம், ஆர்வாம் பிரபு உடன்படிக்கை

1930 - உப்பு சத்தியாக்கிரகம், முதல் வட்ட மேஜை மாநாடு, சட்டமறுப்பு இயக்கம், சிட்டகாங் புரட்சி.

1931 - பகத்சிங் தூக்கிடப்படல், காந்தி இர்வின் ஒப்பந்தம், இரண்டாம் வட்டமேஜை மாநாடு (காந்தி பங்கேற்பு) போன்ற அனைத்தும் இந்த வருடத்தில் நிகழ்ந்தது.

1934 - அகில இந்திய கிஸான் சபை, அகில இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயம்.

1935 - இந்திய அரசாங்க சட்டம் கொண்டு வரப்பட்டது.

1937 - பார்வர்டு பிளாக் கட்சி உதயம்.

1939 - செப் 1 ஆம் நாள் இரண்டாம் உலகப் போர் துவக்கம்.

1940 - தனிநபர் சத்தியாக்கிரகம்.

1942 - கிரிப்ஸ் துதுக்குழு இந்தியா வருகை, வெள்ளையனே வெளியேறு தீர்மானம்.

1943 - நேதாஜி இந்திய ராணுவம் அமைத்து சுதந்திர இந்தியா பிரகடனம் செய்தல்.

1946 - கப்பற்படை எழுச்சி.

1947 - இந்தியா சுதந்திரமடைதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனித்தனியாக டோமினியன் அந்தஸ்து பெற்றது.
🥰
 
Top