What's new

தொழிலாளர் தினம்.

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
மே தினம் என்று இன்றைய நாளை பெருமையுடன் அனுசரித்து கொண்டாடி வருகிறோம். அதாவது முன்பெல்லாம் வேலைக்கு எல்லை வரையரை இல்லாமல் இருந்ததினால் எஞ்சிய நேரமே ஓய்வாக கிடந்திட அல்லது அந்த உழைப்பின் பயனைத் துய்த்து வாழ்ந்திட என்ற சமன்பாடு.

அளிப்பதற்கு உழைப்பைத் தவிர வேறெதுவும் இல்லாதோர் மிகுந்திருந்ததால் தொழில் முனைவோர் விதித்த நேரத்திற்கு உழைத்து பிழைத்திடும் நிர்பந்தம், பின்பு 8 மணிநேரம் மாத்திரமே நாளொன்றுக்கு என்று சட்டமாக இயற்றிய வெற்றி நாளாய்.

அஃதிருக்கட்டும், இச்சட்டம் வேலை - ஒய்வு சமநிலை என்ற அடிப்படையில் எல்லோருக்கும் பொருந்த வேண்டும் அல்லவா? இங்கே இந்தியாவில் தொழிலாளர்களுக்கு மாத்திரமே இந்த 8 மணிநேர எல்லை பொருந்தும் என்றும் அலுவலகத்தில் பணியில் இருக்கும் மனிதருக்கு பொருந்தாமல் போனது ஏன்?

அவர்களுக்கெல்லாம் வாழும் உரிமை (work life Balance) பொருந்தாததன் காரணம் என்ன?

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆண்டு முழுவதற்கும் 80 முதல் 100 நாட்களுக்குள் வேலை செய்துவிட்டு மிஞ்சிய நாட்களில் வித விதமாக திருவிழாக்கள் என்றும் பண்டிகைகள் என்றும் சுகித்து வாழ்ந்திருந்த ஒரு சமுதாயத்தை இன்று வருடத்திற்கு 10 நாள் சி எல் என்றும அதற்கு மேல் ஈ எல் என்றும் அது போக பத்தே பத்து நாள் போனால் போ என்று இங்கொன்றும் அங்கொன்றுமாக விரவி விடுமுறை நாட்கள் என்றாக்கி, இறுக்கி கட்டிவிட்டு 8 மணிநேர வெற்றியை கொண்டாடுவதா? என்கிருந்து எங்கு வந்துள்ளோம்?

நாட்டின் உள் தேவைக்கு போதாதென்று ஓடாய் தேந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவேணுமாம் யாருக்கோ துய்க்க. சர்வதேச பண சந்தையில் பண மாற்ற விகித்தில் சங்கிலியை கண்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தாலும் அடிமை முறை அமலில் இருக்கிறது. உண்மைச் சுதந்திரம் இந்தச் சங்கிலிகள் உடைக்கப்படும் பொழுதே.

மெல்லென சிறிது வருந்தி உழைத்துவிட்டு எஞ்சிய மிகுதியான காலத்தை மகிழ் போகத்தில் துய்த்து வாழும் நாள் உண்மையில் உழைப்பாளர் கொண்டாடத் கக்க வெற்றிநாள்.
 
Top