சற்றும் எதிர்பாரா நேரம்
முற்றும் என சொல்லி
பற்றி பிடித்த கரத்தை
விட்டு சென்றவள் நீ
அடி என எனக்கு
அது தோன்றவில்லை
இடிஎன நினைத்து
கண் தூங்கவில்லை
புலர்ந்த பொழுதில்
விடிந்தது காலை மட்டும் அல்ல
என் கலக்கமும் தான்
எல்லாமே இங்கு
என்றேனும் முடிவு பெறும்
எனும் எண்ணம்
அப்பொழுதோடு என்னுள் விடிய
திக்கி திணறிய நொடிகளை
கக்கி துப்பியே
என் கண் விழித்தேன்
நீ தூக்கி எறிந்த பின் துவண்டு விழ
நான் காகிதம் அல்ல
எட்டி திக்கும் சுற்றி திரிந்து
அன்பு மழை பொழியும் மேகம்
முற்றும் என சொல்லி
பற்றி பிடித்த கரத்தை
விட்டு சென்றவள் நீ
அடி என எனக்கு
அது தோன்றவில்லை
இடிஎன நினைத்து
கண் தூங்கவில்லை
புலர்ந்த பொழுதில்
விடிந்தது காலை மட்டும் அல்ல
என் கலக்கமும் தான்
எல்லாமே இங்கு
என்றேனும் முடிவு பெறும்
எனும் எண்ணம்
அப்பொழுதோடு என்னுள் விடிய
திக்கி திணறிய நொடிகளை
கக்கி துப்பியே
என் கண் விழித்தேன்
நீ தூக்கி எறிந்த பின் துவண்டு விழ
நான் காகிதம் அல்ல
எட்டி திக்கும் சுற்றி திரிந்து
அன்பு மழை பொழியும் மேகம்