What's new

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
நதியினில் நீந்தும் மீனாய்
என் விதியதை கடக்கவே விழைகின்றேன்

தரையினில் தேங்கிய படகாய்
தடமின்றி நானே தேங்கி நின்றேன்

நகரவே முடியா பறவை
சிறகினை விரித்து பறந்திடுமோ?

சொல்ல முடியா வலிகள்
சொன்னால் பிறருக்கு புரிந்திடுமோ?

என்றென நானுமே எண்ணி
என் நாட்களை இங்கே கடத்தி வந்தேன்

தனிமையில் தானே நானும்
இதை என்னியே தினம் தினம்
அழுது வந்தேன்

ஓர் நாள் நானும் வானை
வெறுமையில் தானே பார்த்திருந்தேன்

தேய்ந்து போன வெண் நிலவும்
வளர் பிரையென இன்றே வளர்வதையே.

அன்றே என் மனம் மெதுவாய்
என்னிடம் தானே பேசியது

அந்த நிலவினை போன்றே
நீயும் மீண்டு வா என்றே

அக்கணம் முதலாய் நானும்
என்னை மெல்லவே சீர் திருத்தி

இன்று இவ்விடம் நானே
எனக்கு நிகராக நிற்கின்றேன்.

இன்று நானும் என் விதியை
ஓங்கி உறக்கவே கேட்கின்றேன்

என்ன நினைத்தாய் என் விதியே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?



(என்னை நான் செதுக்கிய தருணத்தை இங்கே எழுதுகிறேன்)

அன்புடன் The Popeye
 
Last edited:
Top