What's new

நாம ஏன் Chat பன்றோம்?

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
பொதுவா இந்த Chat Site எல்லாம் நான் Serious ah எடுத்துகிறது இல்லை

இருந்தாலும் சில நண்பர்கள் அதற்கு Addict ஆகி விடுகிறார்கள்

அவர்களுக்காக தான் இந்த பதிவு

Positives of Online Chat - 1. Temporary happiness 2. Timepass 3. Great for Introverts 4. Fantasy World

Negatives of online chat - 1. Waste of Time 2. Anonymous people playing basketball in our life 3. Late Night Sleep 4. No True Love 5. No Honesty

Conclusion - Online chat ஆல் நமக்கு பல தீமைகள் நடக்கின்றன

தேவையில்லாத வாக்குவாதம், Unwanted Verbal Fights

ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இல்லாமல் Anonymous ஆக பேசிக் கொள்வது

ஒரு கட்டத்தில் நிம்மதி என்ற ஒன்றே இருக்காது

ஒரே மாதத்தில் பல காதல் தோல்விகள் ஏற்படலாம்

எனவே Chat செய்வதை நிறுத்திவிட்டு, எல்லோரும் நிஜ வாழ்க்கையில் நண்பர்களை தேடுங்கள்

பெண்களுக்கு சில பேர் பிரச்சனை தருவதாக கேள்விப்பட்டேன்

அவர்களுக்கு நான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன் 😡😡

இதனால் நான் சொல்ல வருவது என்ன வென்றால்

Onlineல் யாராவது நம்மை திட்டினால் அவர்களை உடனே Block செய்து விட்டு நம் அடுத்த வேலைகளை பார்க்க வேண்டும்

அதையே நினைத்து நம் நிம்மதியை கெடுத்து கொள்ள கூடாது என்பதை ரகசியமாக தெரிவித்து கொள்கிறேன்
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133

அதையே நினைத்து நம் நிம்மதியை கெடுத்து கொள்ள கூடாது என்பதை ரகசியமாக தெரிவித்து கொள்கிறேன்.

பகிரங்கமாகவே தெரிவிக்கலாம், தவறில்லை.
 
Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
அதையே நினைத்து நம் நிம்மதியை கெடுத்து கொள்ள கூடாது என்பதை ரகசியமாக தெரிவித்து கொள்கிறேன்.

பகிரங்கமாகவே தெரிவிக்கலாம், தவறில்லை.
நன்றி
 
Nehaa

Well-known member
Joined
Jan 21, 2023
Messages
505
Points
113
பொதுவா இந்த Chat Site எல்லாம் நான் Serious ah எடுத்துகிறது இல்லை

இருந்தாலும் சில நண்பர்கள் அதற்கு Addict ஆகி விடுகிறார்கள்

அவர்களுக்காக தான் இந்த பதிவு

Positives of Online Chat - 1. Temporary happiness 2. Timepass 3. Great for Introverts 4. Fantasy World

Negatives of online chat - 1. Waste of Time 2. Anonymous people playing basketball in our life 3. Late Night Sleep 4. No True Love 5. No Honesty

Conclusion - Online chat ஆல் நமக்கு பல தீமைகள் நடக்கின்றன

தேவையில்லாத வாக்குவாதம், Unwanted Verbal Fights

ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இல்லாமல் Anonymous ஆக பேசிக் கொள்வது

ஒரு கட்டத்தில் நிம்மதி என்ற ஒன்றே இருக்காது

ஒரே மாதத்தில் பல காதல் தோல்விகள் ஏற்படலாம்

எனவே Chat செய்வதை நிறுத்திவிட்டு, எல்லோரும் நிஜ வாழ்க்கையில் நண்பர்களை தேடுங்கள்

பெண்களுக்கு சில பேர் பிரச்சனை தருவதாக கேள்விப்பட்டேன்

அவர்களுக்கு நான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன் 😡😡

இதனால் நான் சொல்ல வருவது என்ன வென்றால்

Onlineல் யாராவது நம்மை திட்டினால் அவர்களை உடனே Block செய்து விட்டு நம் அடுத்த வேலைகளை பார்க்க வேண்டும்

அதையே நினைத்து நம் நிம்மதியை கெடுத்து கொள்ள கூடாது என்பதை ரகசியமாக தெரிவித்து கொள்கிறேன்
Rightly said!! 👌
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
பல பெண்கள் இணையத்திற்கு வருவது
நட்பை தேடியோ... அன்பை தேடியோ இல்லை... கொஞ்சமாவது மன அழுத்ததில்
இருந்து விடுபடவே...
அவர்களை உங்கள் செயல்கள் பேச்சுக்கள் மற்றும் அவதூறுகளால் மேலும் மனஅழுத்தத்திற்கு ஆளாக்காதீர்கள்...
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
பல பெண்கள் இணையத்திற்கு வருவது
நட்பை தேடியோ... அன்பை தேடியோ இல்லை... கொஞ்சமாவது மன அழுத்ததில்
இருந்து விடுபடவே...
அவர்களை உங்கள் செயல்கள் பேச்சுக்கள் மற்றும் அவதூறுகளால் மேலும் மனஅழுத்தத்திற்கு ஆளாக்காதீர்கள்...
Applicable for Men too
 
O

Ohmylove

Guest

தீதும் நன்றும் பிறர் தர வாரா!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
மூதுரை - திருக்குறள்!! என்ன தொடர்பு?!
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
மூதுரையா யாரது?
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன ;

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதெனின மகிழ்ந்தன்றும் இலமே ;முனிவின்

இன்னாதென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானது

கல் பொருது மிரங்கு மல்லற் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !

புறநானூறு : 192

என்பது பாடல்.
 
தமிழ் வாத்தியாரா நீங்க?
 
O

Ohmylove

Guest
Ithul

கணியன் பூங்குன்றனார் than ithu eluthinar..
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Ithul

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

கணியன் பூங்குன்றனார் than ithu eluthinar..
பொருள் விளக்கம் :
முதல் வரி "யாதும் ஊரே

யாவரும் கேளிர் "

அனைவரும் அறிந்த ஒரு வரி.

எளிமையான பொருள்.

எல்லா ஊரும் எமது ஊர்தான்.

எல்லா மக்களும் எமது உறவுகள்தான்

என்ற சீரிய கருத்தைத் தாங்கி வரும் வரி.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

என்பது இரண்டாவது வரி.

இதுதான் இக்கட்டுரைக்கான மையப்பொருள்.

தீமையோ... நன்மையோ எதுவானாலும் பிறரால்

நமக்கு வந்துவிடப் போவதில்லை.

நடப்பது எதுவானாலும் அதற்கு

நாம்தான் காரணம்.

நாம் மட்டுமே காரணம் என்கிறது

இரண்டாவது வரி.

எவ்வளவு அருமையான கருத்து பாருங்க...

நல்லது வந்தால் நான்...நான்..

என்னால்தான் இவை எல்லாம் நிகழ்ந்தது

என்று ஆயிரம் முறை சொல்லி சொல்லிப்

பெருமிதம் கொள்வோம்.

ஒரு தீயது நடந்து விட்டது என்றால்....

அவ்வளவுதான் .எதிராளியை நோக்கி

முதல் ஆளாக கை நீட்டி குற்றப்படுத்தத்

தவறமாட்டோம்
. உன்னால்தான்

இப்படி எல்லாம் நிகழ்ந்துவிட்டது

நீதான் எல்லாவற்றிற்கும் காரணம்

என்று அது மறக்கும்வரை

குற்றப்படுத்திக் கொண்டே இருப்போம்.

இதற்கு நீங்களும் நானும் விதிவிலக்கு அல்ல.

ஆனால் கணியன் பூங்குன்றனார் என்ன

சொல்கிறார் பாருங்கள்.

நமக்கு ஒரு நல்லது நடந்தால்

அதற்குக் காரணம் நாம்தானாம்.

அதே போல ஒரு தீங்கு வந்து விட்டாலும்

அதற்கும் நாம் மட்டும்தான் காரணமாம்.

இரண்டுக்கும் நாம்தான் காரணமா?

அது எப்படி ?....

ஒரே ஆள் நன்மைக்கும் தீமைக்கும்

காரணமாக இருக்க முடியும்?

எனக்கு நானே தீங்கு செய்து

கொள்வேனா? மனம் எகிறுது இல்லையா!

ஏற்க மனம் மறுக்கிறதல்லவா!

நன்மைக்குப் பொறுப்பேற்க தயாராக

இருக்கிறோம்.

தீமைக்கு யார் காரணம் என்ற கேள்வி

எழும்போதுதான் இந்தத் தடுமாற்றங்களும்

தப்பிக்க வழி தேடல்களும் முன்

வந்து நம்மைத் தடுமாற வைக்கிறது.

நானல்ல....நானல்ல ...நான்

காரணமல்ல என்று கையை

உதறிவிட்டு ஓட்டம் பிடிக்க வைக்கிறது.

யாராவது என்னால்தான் துன்பம்

வந்தது என்று ஒத்துக் கொள்வார்களா?

அப்படி ஒருவர் ஒத்துக்கொண்டால்

அவர் மகானாக அல்லவா இருக்க

வேண்டும் என்று கேட்கத் தோன்றும்.

என்ன சொல்லி தப்பிக்க நினைத்தாலும்

தப்பிக்க முடியாதுங்க.

உங்களுக்கு வரும் துன்பத்திற்கு

காரணம் நீங்கள்தான்

என்பதை ஒத்துக்கொண்டுதான்

ஆக வேண்டும் என்கிறார் பூங்குன்றனார்.

எதுவுமே நம்மை மீறி நடப்பதில்லை.

நல்லது செய்தால் நன்மை நிகழும்.

தீமை செய்தால் தீயதுதான் நிகழும்.

"தினை விதைத்தவன் தினைஅறுப்பான்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்."

"முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்."

ஒரு செயலின் விளைவு நம்மை

நிழல் போல தொடர்ந்து

வந்துகொண்டே இருக்கும்.

நாம் விதைக்கிற விதைதான் பெரிய

விருட்சமாக வளரும்.

நமது எண்ணம்தான் செயல்

வடிவம் பெறும்.

நாம் கண்ணாடி முன் நின்று என்ன

செய்கிறோமோ அதுதான் நமக்குக்

காட்டப்படும்.

நாம் நல்லபடியாக இருந்தால் எல்லாம்

நல்லபடியாக நடக்கும் .

கோணலாக முகத்தை வைத்துக் கொண்டால்

கோணலாகத்தானே தெரியும்.

நன்மை ...தீமை ...இரண்டுக்கும் காரணகர்த்தா

நாம்தாம்.வெளியிலிருந்து யாரும் வருவதில்லை.

இதுதான் பூங்குன்றனார் உச்சந் தலையில்

ஓங்கி அடித்து நமக்குச் சொல்லிச் சென்ற

கருத்து.

அத்தோடு பூங்குன்றனார் நம்மை

விட்டுவிட்டாரா?

இதோடு முடியலைங்க....

இன்னும் ஒன்று இருக்கிறது கேட்டுவிட்டு

போங்க என்று நம்மை கையைப் பிடித்து

இழுத்து நிறுத்தி வைத்துக்

கேட்க வைக்கிறார்.

"நோதலும் தணிதலும் அவற்றோரன்ன"

என்று இரண்டாவது வரியோடு சேர்ந்து

இந்த மூன்றாவது வரியையும் முடிச்சு

போட்டு கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

அதனால் வெறுமனே இரண்டாவது

வரியை மட்டும் படித்துவிட்டுக்

கடந்து போய்விட முடியாது.

அது என்னங்க?...

"நோதலும் தணிதலும் அவற்றோரன்ன"

என்று நம்மை

நின்று கேட்க வைக்கிறதல்லவா!

அவற்றோரன்ன என்றால் என்ன?

இரண்டாவது வரியில் சொன்னேனே

தீதும் நன்றும் பிறர் தர வாரா

என்று அது போன்றதுதான் நோய்

வருவதற்கும் நோய் நீங்குவதற்கும்

நாம்தாம் காரணம் என்கிறார் புலவர்.

எப்படி ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி

பேசுகிறார் பாருங்கள்.

நோய் வருவதற்கு நான் காரணமா?

இதென்ன வேடிக்கையாக இருக்கிறது.

கிண்டலாகக் கேட்க வேண்டும்போல்

தோன்றுகிறதல்லவா!

வேறு யாராக இருக்க முடியும்

என்று நினைக்கிறீங்க.?

நீங்களேதான்.நீங்கள் மட்டும்தான்.

என்ன ....எங்களைக் குற்றப்படுத்துகிறீர்களா....?

இப்போதுதானே அடுத்தவர்களை

நோக்கி கை நீட்டாதீர்கள். எல்லாவற்றிற்கும்

காரணம் நாம்தான்

என்று சொன்னீர்கள் என்பீர்கள்.

சரியாகக் கேட்டீர்கள்.என்னை

விட்டுவிட்டேனா?

மன்னிக்கவும்.நாம்தான் காரணம்.

நாம் மட்டுமே காரணம்.

யாரும் விடுபட்டுப் போகவில்லையே..?

நமது உணவுப் பழக்கவழக்கங்கள்,

வாழ்க்கைமுறை ,சுற்றுச்சூழல் பராமரிப்பு,

ஒழுக்கம் என்று நமது நடைமுறைகள்தான்

நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.

நம்மையும் நம் சுற்றுச் சூழலையும்

பராமரிக்கும் பெரும் பொறுப்பு

நம் கையில்தான் இருக்கிறது என்பதை

உணர்ந்து அதற்கு ஏற்ப சூழலை

அமைத்துக் கொண்டு செயல்பட்டாலே

பெரும்பாலான நோய்கள் வராது.

உணவுப் பழக்க வழக்கங்கள்

தாறுமாறாகிப் போனால் உடலும்

தாறுமாறாகிப் போகும்.

நோய்கள் வரக் காரணம் சுகாதாரக்கேடு,

தவறான உணவு பழக்கவழக்கங்கள்

என்று சுகாதார அமைப்புகள் பலமுறை

நம்மை எச்சரிக்கின்றன.

அப்படியானால் நோய்வரக்

காரணம் யார் என்பது இப்போது

புரிந்திருக்கும் இல்லையா!

அவனிடமிருந்து வந்தது .

அந்த நாட்டிலிருந்து வந்தது.

இந்த நாட்டிலிருந்து வந்தது

என்று அங்கேயும் இங்கேயும்

விரலை நீட்டி குற்றப்படுத்திக் கொண்டே

இருப்பதில் அர்த்தமில்லை.

அதை எப்படி தணிப்பது என்பதைப்

பற்றி யோசிக்க வேண்டும்.

"வருமுன் காப்போம் "என்று சொல்லிக்

கொள்கிறோம்.

வரும் வரை வாசலைத் திறந்து

வைத்து வரவேற்றுவிட்டு வந்த பின்னர்

குய்யோமுறையோ என்று கூப்பாடு

போடுவதில் எந்தப் பயனும் இல்லை.

வந்த நோதலைத் தணிக்கும் திறனும்

நம் கையில்தான் உள்ளது

என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்

என்கிறார் கணியன் பூங்குன்றனார் .

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்."

என்று வள்ளுவர் முன்னமே எச்சரிக்கை மணி
அடித்திருக்கிறார்.

நோய் வந்தாகிவிட்டது.அதற்கு

இனி என்ன பண்ணமுடியும்?

நீ தானே நோய்க்கு இடம் கொடுத்தாய்.

அப்படியானால் அதிலிருந்து

விடுபடும் வழியும்

நீதான் கண்டுபிடித்தாக வேண்டும்.

நேற்று நடந்ததற்கும்

இன்று நடந்துகொண்டிருப்பதற்கும்

நாளை நடக்கப் போவதற்கும்

என்று எல்லாவற்றுக்கும் காரண கர்த்தா

நீயாக மட்டுமே இருக்க முடியும்.

எல்லாம் உன் செயலின் விளைவே.

நோய்க்குக் காரணம் நாமாக இருக்கும்போது

அதைத் தீர்க்கும் சக்தியும் நம்மிடம்தான்

உள்ளது என்பதை உணர வேண்டும்

என்பதை எவ்வளவு அழகாக

உணர்த்தியிருக்கிறார் பாருங்கள்.

அடேங்கப்பா....

யாரப்பா இந்தப் பூங்குன்றனார் ?

வியப்பில் புருவம் உயர்த்திப் பார்த்திட

வைத்துவிட்டார் பூங்குன்றனார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன....

எவ்வளவு அருமையான வரிகள்!

இன்றைய சூழலுக்கு உகந்த வரிகள்..!

உள்ளி உள்ளி உவந்த வரிகள்...!

நெஞ்சை நெகிழ வைத்த வரிகள்!

காலத்தை வென்ற வரிகள்.!
 
Top