- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,932
- Points
- 133
சிகிச்சைக்கு வந்த
தளர்ந்த பெரியவர் ஒருவர்
தயங்கியபடியே
“வைத்தியத்துக்கு என்பொண்ணு
பணம் அனுப்பறேன்னு சொல்லிச்சு,
உங்க ஜி.பே. எண்ணை சொல்லுங்க”
தன் பட்டன் போனில் மகளிடம்
பேசிவிட்டு என்னிடம் தருகிறார்.
“அப்பாக்கு எப்படிங்க இருக்குங்க சார்”
நலம் விசாரித்து விட்டு
என் எண்ணை எழுதிக் கொண்டவர்
“ஆயிரம் இரூபாய் அனுப்புகிறேன்,
பீஸ் முந்நூறு போக மீதம்
எழுநூறை அப்பாவிடம்
கொடுத்து விடுங்கள், கேட்க
கூச்சப்படுவார்” கூறி விட்டு
அழைப்பை வைத்து விட்டார்.
மீதி பணத்தை கொடுக்கையில்
கண்ணில் நீர் துளி கசிய
வாங்கிக் கொண்டு மீண்டும்
மகள் எண்ணிற்கு அழைத்து
“எதுக்குடா பட்டுக்குட்டி,
இப்படியெல்லாம் பண்ணுறே?”
நா தழுதழுக்க ஆனந்த
நடை போட்டபடியே செல்கிறார்
இப்படித்தான், நாற்பது வயதைக்
கடந்தும் பட்டுக்குட்டிகளாக
வாழ்கிறார்கள்,
பட்டுக்குட்டிகள்!!
தளர்ந்த பெரியவர் ஒருவர்
தயங்கியபடியே
“வைத்தியத்துக்கு என்பொண்ணு
பணம் அனுப்பறேன்னு சொல்லிச்சு,
உங்க ஜி.பே. எண்ணை சொல்லுங்க”
தன் பட்டன் போனில் மகளிடம்
பேசிவிட்டு என்னிடம் தருகிறார்.
“அப்பாக்கு எப்படிங்க இருக்குங்க சார்”
நலம் விசாரித்து விட்டு
என் எண்ணை எழுதிக் கொண்டவர்
“ஆயிரம் இரூபாய் அனுப்புகிறேன்,
பீஸ் முந்நூறு போக மீதம்
எழுநூறை அப்பாவிடம்
கொடுத்து விடுங்கள், கேட்க
கூச்சப்படுவார்” கூறி விட்டு
அழைப்பை வைத்து விட்டார்.
மீதி பணத்தை கொடுக்கையில்
கண்ணில் நீர் துளி கசிய
வாங்கிக் கொண்டு மீண்டும்
மகள் எண்ணிற்கு அழைத்து
“எதுக்குடா பட்டுக்குட்டி,
இப்படியெல்லாம் பண்ணுறே?”
நா தழுதழுக்க ஆனந்த
நடை போட்டபடியே செல்கிறார்
இப்படித்தான், நாற்பது வயதைக்
கடந்தும் பட்டுக்குட்டிகளாக
வாழ்கிறார்கள்,
பட்டுக்குட்டிகள்!!