What's new

புதுமையான சட்னி!🤤🤤🤤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
*புதுமையான சட்னி!*


🍺 காரசட்னி செய்யும் போது மிளகாய்தூள் இல்லையெனில் காய்ந்த மிளகாயினை தண்ணீரில் ஊறவைத்து அதனை அரைத்து, மிளகாய் தூளிற்கு பதிலாக சேர்க்கலாம்.


🍺 வேர்க்கடலை சட்னியில் வேர்க்கடலையுடன் சிறிது பொட்டுக்கடலையும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.


🍺 வெங்காயபுளிசட்னி செய்ய புளியின் அளவு கூடுதலாக சேர்க்க வேண்டும். முதலில் உளுத்தம்பருப்பினை அரைத்து கொண்டு பிறகு புளி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து அரைக்க வேண்டும்.


🍺 பொதுவாக தேங்காய் சட்னியில் பொட்டுக்கடலை சேர்த்து செய்வதைப் போல ஒட்ஸினை சிறிது தேங்காயுடன் சேர்த்து செய்தால் ஓட்ஸ் சட்னி தயார்.


🍺 கத்திரிக்காயினை அடுப்பில் சுட்ட பிறகு, அதனை வைத்து சட்னி செய்தால் கத்திரிக்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.


🍺 பீன்ஸ், கேரட், முள்ளங்கி, பச்சைமிளகாய் எல்லாம் வதக்கி அரைத்துக் கொண்டு பிறகு தேவையான அளவு உப்பும், தேங்காயும் சேர்த்து சட்னி அரைத்தால் உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்கும் சட்னியாக இருக்கும்.


🍺 பீர்க்கங்காயினை எப்பொழுதும் தோல் நீக்கி தான் சமைப்போம். அந்த தோலினை வைத்து சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.


🍺 தேங்காய் சட்னியை கடைசியில் தாளித்து சேர்ப்போம். அதற்கு பதிலாக அதே தாளித்த பொருட்களை சட்னியில் சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


🍺 வெங்காயம் நன்றாக வதங்கிய உடன், தேங்காய் விழுதினை சேர்த்து வதக்கி இறக்க வேண்டும். பின்னர் அவற்றை அரைத்தால் வெங்காயதேங்காய் சட்னி தயார்.


🍺 வதக்கிய வெங்காயத்துடன் புதினா சேர்த்து சட்னி செய்தால் வெங்காயபுதினா சட்னி தயார்.


🍺 தக்காளி சட்னி செய்யும் போது நன்றாக பழுத்த தக்காளியில் செய்தால் சுவையாக இருக்கும்.


🐓🐓🐓 *PRAYOGA* 🐓🐓🐓
 
Top