What's new

பேசத்தான் ஆச

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
சண்டக்காரி உன்னால
சக்தி கெட்டு போனேனே
பந்த காலு தான் போல
மன பாரம் தாங்கி நிக்கிரேனே
நெத்தியில பொட்டின்றி
நீ இருக்கும் வேளையிலே
சுட்டி காட்டி சொல்லுறத
கேட்டு நீயும் பொட்டு வப்ப
புத்தி கொஞ்சம் மங்கித்தான்
எக்கு தப்பா பேசுரப்போ
குட்டு வைக்கும் பேச்சாளே
திட்டி தான தீத்திருப்ப
பொன் நகைகள் போடாம
ஏன் இருக்க என்றாலோ
புன்னகைதான் எனக்கிருக்கே
பொன் நகை ஏன் என்ப
பூ வச்ச உன் தலையை
நான் பாத்து சிரிக்கிறப்போ
வெக்கத்துல முகம் சிவக்க
நீயும் தான் சிரிச்சிருப்ப
எழுத்தாளர் பேர் சொல்லி
புத்தகத்தை பரிந்துறைப்ப
என் எழுத்து நா கேக்க
ஏந்தாணோ நீ முறைப்ப
இப்படி தான் பல நாளு
நாம.பேசி பழகி வந்தோம்
இப்போ என்ன கோவமுண்ணு
எனக்கு கூட தெரியலையே
என்னோட பேசாதே என்று
நீயும் சொல்லுரப்போ
சத்தியமா நானும்தான்
இறந்துதான் போனேனே
 
Top