What's new

மன்னிப்புக் கேட்பவன்...

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
மன்னிப்புக் கேட்பவன்:-

*♻️மன்னிப்பு என்ற வார்த்தை, சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்பதும் ,கொடுப்பதும், அவ்வளவு சுலபமில்லை.*

*♻️பெரிய பெரிய பிரச்சனைகளையும், சச்சரவுகளையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டு வரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு.*

*♻️ஒருவர் இன்னொருவரை பாதிக்கின்ற விதத்தில் ஏதாவது தவறு செய்து விட்டால், அந்த தவறை உணர்ந்து, மனதார மன்னிப்புக் கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று.*

*♻️அதற்கும் அப்பாற்பட்டது, கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு சகஜ நிலைக்குத் திரும்புவது.*

*♻️“மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனிதன்“ என்று ஒரு வசனம் உண்டு.*

*♻️இன்றைய சூழலில் அப்படிப்பட்ட மனிதர்களோ பெரிய மனிதர்களோ காணக் கிடைப்பது அரிது.*

*♻️ஈகோ, பிடிவாதம்,, வாக்குவாதம்,, புரிதலின்மை, போன்றதால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது.*

*♻️பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும்,அதை ஒப்புக் கொள்வதற்கு தன்மானம் இடம் கொடுப்பது இல்லை.*

*♻️உதாரணமாக, வகுப்பில் ஒரு மாணவன் எதையாவது திருடி விட்டு, அதை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கும் போது, இனி இப்படி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி அதை மன்னித்து விட்டு விட வேண்டும்.*

*♻️அதைவிடுத்து, அன்றிலிருந்து எந்தப் பொருள் காணவில்லையென்றாலும், அதை அவன் தான் எடுத்திருப்பானோ என்று சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது.*

*♻️இந்தப் பார்வை, தவறு செய்யத் தூண்டுமே தவிர ஒருபோதும் திருத்தாது... நம்மில் பலர் இந்தத் தவறினை செய்கிறோம்.*

*♻️கேட்கப்படும் மன்னிப்பை தற்காலிகமாக வழங்கி விட்டு, உள்ளூர அவர் செய்த தவறினை நினைத்துக் கொண்டே இருக்கிறோம்.*

*♻️பல நேரங்களில் அதைச் சொல்லிக் காட்டி குத்திக் கொண்டே இருப்பது சிலரின் வழக்கம்..*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️நம் தவற்றை மற்றவர்கள் சுட்டிக் காட்டும் போது அது உண்மையாக இருந்தால் அதை நேர்மையாக ஒப்புக் கொள்வோம்.. அது நம்மைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்.*

*⚽மிருகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசமே அவனுக்குள்ள மற்றவர்களின் சிறிய தவறுகளை மன்னித்து மறப்பது தான்...*

*மன்னிப்பு கேட்போம்... மனதாரக் கொடுப்போம்..*
 
Top