- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,932
- Points
- 133
உன் அடர்தனிமைகளில்
யாரை நினைத்து
கண்கள் கலங்குகிறாயோ?
உன்
அந்தரங்கப்பொழுதொன்றில்
யாரை நினைத்து
தடுமாறுகிறாயோ?
நீ மட்டும் என் கூட
எப்போதும் இருந்துவிடு என்று
யாரிடம் சொல்லத் தோணுகிறதோ?
உன்னை, உன் வாழ்வின்
சகல காயங்களையும்
யாரிடம் கொட்டித்தீர்க்க முடிகிறதோ?
இருளின் வழிகளிலெல்லாம்
யாரை நோக்கி
உன் கைகள் தானாக நீள்கிறதோ?
அந்த ஒருவரைத்தானே
உன்னால் முழு மனதாக
எப்போதும் காதலிக்க
முடிந்திருக்கிறது
இப்போதும் முடிகிறது
இந்த ஒரு ஜென்மம் ஈடேற
அந்த ஒரு காதல் போதும்!
மயிலிறகு மனசு
யாரை நினைத்து
கண்கள் கலங்குகிறாயோ?
உன்
அந்தரங்கப்பொழுதொன்றில்
யாரை நினைத்து
தடுமாறுகிறாயோ?
நீ மட்டும் என் கூட
எப்போதும் இருந்துவிடு என்று
யாரிடம் சொல்லத் தோணுகிறதோ?
உன்னை, உன் வாழ்வின்
சகல காயங்களையும்
யாரிடம் கொட்டித்தீர்க்க முடிகிறதோ?
இருளின் வழிகளிலெல்லாம்
யாரை நோக்கி
உன் கைகள் தானாக நீள்கிறதோ?
அந்த ஒருவரைத்தானே
உன்னால் முழு மனதாக
எப்போதும் காதலிக்க
முடிந்திருக்கிறது
இப்போதும் முடிகிறது
இந்த ஒரு ஜென்மம் ஈடேற
அந்த ஒரு காதல் போதும்!
மயிலிறகு மனசு