What's new

முதல் முத்தம்..

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
எத்தன் என்று இங்கே சுற்றி வந்த என்னை
பித்தனாக மாற்றி சுற்ற வைத்த பெண்ணே

பத்திரமாய் இருந்த நானோ தொலைந்து விட்டேனே
சத்தியமாய் உன்னாலே கரைந்து விட்டேனே

முத்தம் ஒன்றை முதன் முதலாய் உன்னிடத்தில்
பெற்றதனால் உன்னில் நான் கலந்து விட்டேனே

ஆண் எனும் ஆணவத்தில் நானிருக்க
நாணமே உன்னிடத்தில் குடி இருக்க
மோகத்தில் உனதருகே வந்தேனே
காதலில் உனதழகை கண்டேனே

ரோஜாவின் இதழ் கொண்டு என் இதழை
லேசாக முதன் முதலில் தீண்ட
ஆண் எனும் ஆணவம் ஒரு நொடியில்
நீங்கி தான் நாணமும் வந்ததடி

முத்தம் அதை முதலில்
பெற்ற அந்த நொடியில்
அத்தனை உலகமும்
கிடந்த தென் காலடியில்

அடியே உன் முத்தத்த அழகாக கொடுத்துட்ட
அத்தோட என் வாழ்க்கை மொத்தத்தை எடுத்துட்ட
முதல் முத்தம் தந்தப்போ ஏதேதோ மாற
வார்த்தை ஏதும் கிடைக்கலையே விவரிச்சு கூற

இதழோடு இதழ் பதித்து.முத்தமதை
முதன்முதலில் நானுமே பெற்ற கதை
நெஞ்சத்தில் எந்நாளும் மறக்காதே

எந்நாளும் என்னை நீ மறவாதே..
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
வாங்க வழி இருந்தா இங்க உக்காந்து எழுதிட்டு ஏன் இருக்கேன் நான்😔😔
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
இதழ் சூட்டில் இணைவோம்!!
சாதம் போல் மயிர் பரப்பி,
பாதம் நிலைக்குழைய,
வாதம் இல்லா இதழ் நனைப்போம்!

உச்சி வகிடில் தொடங்கிய வியர்வை
உள்ளம் பாதம் அடையும் வரை
உதட்டு இதம் மாற்றி
மெய் மறப்போம்!!

முதல் காதல், வரும் காதல்களை
மாற்றாதது போல,
முதல் முத்தம், அடுத்த முத்தங்களில்
அழியாது முத்தமிடுவோம்!!!
 
Top