What's new

யாருக்காக வைதேகி காத்திருந்தாள்

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
யாருக்குதான் இந்த படம் பிடிக்காது.. யாருக்காக வைதேகி காத்திருந்தாள்

39 Years of Vaidehi Kathirunthal:
வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 39 ஆண்டுகள் ஆகின்றன.

தமிழ் தவிர்க்க முடியாத நாயகன் விஜயகாந்த். இந்த தமிழ் சினிமாவில் தர்ம பிரபுவாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகனாக விளங்கி வருகிறார் விஜயகாந்த். எத்தனையோ இடம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்த அவர்களின் வாழ்க்கைக்கு முதல் ஆரம்பமாக இருந்து உள்ளார் விஜயகாந்த்.
அன்னதானத்தின் பிரபுவாக இன்று வரை தமிழ் சினிமாவால் மிகப்பெரிய பிரபலமாக போற்றப்பட்டு வருகிறார் விஜயகாந்த். முதல் கட்டத்திலேயே அரசியலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார் பின்வரும் காலங்களில் தற்போது அமைதியாக அடங்கி விட்டார் என்று கூறினால் அது பலருக்கும் வருத்தமான செய்தியாக இருந்து வருகிறது.

எத்தனையோ இயக்குனர்கள், எத்தனையோ இசையமைப்பாளர்கள், எத்தனையோ தயாரிப்பாளர்கள் என பல பேருக்கு தனது பிரபலத்தை பயன்படுத்தி முன்னேற்றத்தை கொடுத்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது.

தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய்க்கு ஆரம்பத்தில் இவர்தான் அடியெழுத்து போட்டுக் கொடுத்தார் என்று கூறினால் அது மிகை ஆகாது.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் எவரை கேட்டாலும் நடிகர் விஜயகாந்த் பற்றி தங்களது மரியாதையையும், நன்மதிப்பையும் வெளிப்படுத்துவார்கள். அந்த அளவிற்கு கடுமையான உழைப்பாளியாக பல பேரை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்று உள்ளார் என்று கூறினால் அது நிதர்சனமான உண்மையாகும்.

பின்வரும் காலங்களில் நடிகராக மாறிய இயக்குனர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான முக்கியமான திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக இது அமைந்தது.

இளையராஜா தன்னிடம் சிறந்த பாடல்கள் உள்ளது இதற்காக ஒரு படம் வேண்டும் என கூறுகையில் பல இயக்குனர்கள் மத்தியில் மத்தியில் நான் இதற்காக ஒரு கதை எடுக்கிறேன் என சுந்தர்ராஜன் கூறி எடுக்கப்பட்ட கதைதான் இந்த வைதேகி காத்திருந்தால் என பரவலாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி இடத்தைப் பிடித்தது இந்த வைதேகி காத்திருந்தாள். ஒரே பெயரைக் கொண்ட இரு வேறு கதாபாத்திரங்கள் விஜயகாந்தின் வாழ்க்கையில் எப்படி பணியாற்றுகிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் முழு கதையாகும்.

முதல் வைதேகி விஜயகாந்திற்காக உயிர் இழப்பார். இரண்டாவது வைதேகிக்காக விஜயகாந்த் உயிர் இழப்பார். இதுதான் படத்தில் முழு கதையாக இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒளித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

ராசாத்தி உன்ன, இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ இந்த இரண்டு பாடல்களும் இன்று வரை வளர்வதற்கு ப்ளே லிஸ்டில் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு மிகவும் விருச்சு பெற்ற பாடலாக காலம் கடந்து வாழ்ந்து வருகிறது இந்த திரைப்படத்தின் பாடல்கள்.

இந்த திரைப்படத்தின் திரைக்கதையும் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் எளிதாக கடந்து செல்லும் அதன் காரணமாகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 39 ஆண்டுகள் ஆகும் என இருப்பினும் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக வைதேகி காத்திருந்தாள் இன்று வரை மக்கள் மனதில் அடைகாத்து வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது.
1698062970026.png
 
Top