What's new

வந்தே பாரத்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) என்ன சொல்றாங்கன்னா, இந்தியாவுல ஆயிரம் பேருக்கு மினிமம் ஒரு டாக்டராவது இருக்கணும்னு முடிவு பண்ணிருக்கோம்.

ஆனா பாருங்க, தமிழ்நாட்டுல 600பேருக்கே ஒரு டாக்டர் வெச்சிருக்கீங்க. அதுனால இனிமே உங்க மாநிலத்துக்கு புதுசா எந்த மருத்துவ கல்லூரியும் கிடையாதுன்னு அறிவிச்சிருக்காங்க.

வெளி மாநில/ வெளி நாடுகள்ல இருந்து லட்சக்கணக்கான நோயாளிகள் ஒவ்வொரு வருசமும் சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு (Medical capital of India) வர்றாங்க. தமிழ்நாட்ல இருந்து திறமையான மருத்துவர்கள் Aiims மருத்துமனைகள் உள்ளிட்ட இந்தியாவோட பல மாநிலங்கள்ல வேலை பாக்குறாங்க. இதெல்லாம் நல்லா தெரிஞ்சும் எப்படி இப்படி தமிழ்நாட்டை வன்மத்தோட அணுகுறாங்கன்னு தெர்ல.

மற்ற மாநிலங்கள் தன் ஊருக்கு மருத்துவமனையோ மருத்துவக் கல்லூரியோ கேட்டா கூட பரவால்ல. தமிழ்நாட்டுக்கு எதுவும் தராதீங்கன்னு சொல்றதுக்கே ஒவ்வொரு ஒன்றிய துறையிலயும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போல. இதை Save பண்ணி வெச்சுக்கோங்க.

ஏற்கனவே ஒசூர்ல புதுசா ஏர்போட் கேட்டப்போ தமி்ழ்நாட்ல போதுமான விமானநிலையங்கள் இருக்கு. அதுனால கேக்காதீங்கன்னு சொன்னாங்க. இப்போ புதுசா மெடிக்கல் காலேஜ் கேக்காதீங்கன்னு சொல்லிருக்காங்க.

இதுபோக, சென்னைல நடந்துட்டு இருக்க மெட்ரோ வேலைகளுக்கே ஒன்றிய அரசோட பங்கு காசு இரண்டு வருசமா வரல, மெட்ரோ வேலை நின்னு போய்டக்கூடாதுன்னு தமிழ்நாடு அரசு ஏதேதோ பண்ணி மெதுவா நகர்த்திட்டு இருக்காங்க.

அடுத்தடுத்து துறைமுகம், தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எல்லாமே வடக்கோட கம்பேர் பண்ணா உங்கூருல போதுமானதைவிட நிறைய இருக்கு. இதெல்லாம் கேட்டு டெல்லிக்கு வராதீங்கன்னு சொல்லப்போறாங்க.

வந்தே பாரத்!!❤️

B76B55E6-BF45-4CD2-B971-36E1B64682E8.jpeg
 
Top