What's new

வாக்காளன்

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
எல்லா நாளும் வெறுங்கை பாத்து
வாழ்வில் வீசும் விரக்தி காத்து
தேர்தல் வந்தா காசை பாக்க
காத்திருப்பேன் கண்கள் பூத்து

ஊழல் லஞ்சம் என்றே புலம்பி
நானும் இருப்பேன் மனமும் வெதும்பி
கட்சி காரன் கண்டால் போதும்
களிப்புடன் மனசில் ஆசையும் அரும்பி

கஞ்சி போட்ட கரை வேட்டி கட்டி
கொஞ்சம் மிடுக்கா நடை ஒன்னு போட்டு
வீதி வருதே சாமின்னு சொல்லி
நானும் நிப்பேன் ஆரத்தி காட்டி

ஓட்டு போட உரிமையும் கொடுத்த
தேர்தல் கமிஷன் பேரிலும் கமிஷன்
இருப்பதாலே என் ஒட்டு போட
காச தானே கமிஷனா கேட்டேன்

பழைய சோறுக்கு வக்கத்து போயி
நிக்குறப்போ பக்கத்தில் வந்து
பிரியாணி பொட்டலமும் தந்தா
வாங்கி தின்ன மாட்டேனா நானும்?

கெட்டு போன அரிசியா கூட
இலவசமா தந்தால் போதும்
பல்ல இளிச்சி நானும் போய்
வாங்கத்தான் வரிசையில் நிப்பேன்

கொஞ்சமாக காசையும் கண்ணில்
காட்டினலே இப்போது போதும்
ஒட்டு கேட்டு பின்னாடி தானே
கொடிய தூக்கி நானும் நடப்பேன்

கட்சிக்கெல்லாம் கொள்கைகள் உண்டாம்
அப்படின்னா என்னனு கேப்பேன்
காசுக்காக கட்சியில இருக்கும்
எனக்கும்.இங்கே கொள்கைகள் எதுக்கு

மதுவை கொஞ்சம் தந்தால் போதும்
மனசு எல்லாம் சந்தோசம் பொங்க
எதிர்காலம் என்ன ஆனால் என்று
இன்று நானும் என் வாக்கை தருவேன்

இப்படித்தான் என் வாக்க இங்கே
காசுக்காக நானும் தான் வித்தேன்
தேர்தல் முடிந்த பின்னாடி நானும்
அவர்கள் போடும் சட்டத்தால் செத்தேன்


@ItzMeJeevaa avargal ketta thalaippu
 

AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
எல்லா நாளும் வெறுங்கை பாத்து
வாழ்வில் வீசும் விரக்தி காத்து
தேர்தல் வந்தா காசை பாக்க
காத்திருப்பேன் கண்கள் பூத்து

ஊழல் லஞ்சம் என்றே புலம்பி
நானும் இருப்பேன் மனமும் வெதும்பி
கட்சி காரன் கண்டால் போதும்
களிப்புடன் மனசில் ஆசையும் அரும்பி

கஞ்சி போட்ட கரை வேட்டி கட்டி
கொஞ்சம் மிடுக்கா நடை ஒன்னு போட்டு
வீதி வருதே சாமின்னு சொல்லி
நானும் நிப்பேன் ஆரத்தி காட்டி

ஓட்டு போட உரிமையும் கொடுத்த
தேர்தல் கமிஷன் பேரிலும் கமிஷன்
இருப்பதாலே என் ஒட்டு போட
காச தானே கமிஷனா கேட்டேன்

பழைய சோறுக்கு வக்கத்து போயி
நிக்குறப்போ பக்கத்தில் வந்து
பிரியாணி பொட்டலமும் தந்தா
வாங்கி தின்ன மாட்டேனா நானும்?

கெட்டு போன அரிசியா கூட
இலவசமா தந்தால் போதும்
பல்ல இளிச்சி நானும் போய்
வாங்கத்தான் வரிசையில் நிப்பேன்

கொஞ்சமாக காசையும் கண்ணில்
காட்டினலே இப்போது போதும்
ஒட்டு கேட்டு பின்னாடி தானே
கொடிய தூக்கி நானும் நடப்பேன்

கட்சிக்கெல்லாம் கொள்கைகள் உண்டாம்
அப்படின்னா என்னனு கேப்பேன்
காசுக்காக கட்சியில இருக்கும்
எனக்கும்.இங்கே கொள்கைகள் எதுக்கு

மதுவை கொஞ்சம் தந்தால் போதும்
மனசு எல்லாம் சந்தோசம் பொங்க
எதிர்காலம் என்ன ஆனால் என்று
இன்று நானும் என் வாக்கை தருவேன்

இப்படித்தான் என் வாக்க இங்கே
காசுக்காக நானும் தான் வித்தேன்
தேர்தல் முடிந்த பின்னாடி நானும்
அவர்கள் போடும் சட்டத்தால் செத்தேன்


@ItzMeJeevaa avargal ketta thalaippu
ஓரு காலத்துல மக்கள் கிட்ட பண்டமாற்று முறை இருந்ததது, அப்போது பொதுஉடமை இருந்த காலம், யாருக்கும் யாரையுமே ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, எப்பொழுது தனிஉடமை பின்பற்றும் பழக்கம் வந்ததில் இருந்து மக்கள் மனிதம் என்பதை மறந்து விட்டார்கள். ஒவ்வொரு சமூகம் உருவாகியது, அந்த சமூகத்தில் பல பிளவுகள் ஏற்பட்டன, இன்று அந்த சமூகத்தவர் ஒவ்வொருவரும் என் சமூகம் தான் சிறந்தது, உயர்ந்தது, என்று மார் தட்டி கொள்கிறார்கள் 😊 😊 😊
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
ஓரு காலத்துல மக்கள் கிட்ட பண்டமாற்று முறை இருந்ததது, அப்போது பொதுஉடமை இருந்த காலம், யாருக்கும் யாரையுமே ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, எப்பொழுது தனிஉடமை பின்பற்றும் பழக்கம் வந்ததில் இருந்து மக்கள் மனிதம் என்பதை மறந்து விட்டார்கள். ஒவ்வொரு சமூகம் உருவாகியது, அந்த சமூகத்தில் பல பிளவுகள் ஏற்பட்டன, இன்று அந்த சமூகத்தவர் ஒவ்வொருவரும் என் சமூகம் தான் சிறந்தது, உயர்ந்தது, என்று மார் தட்டி கொள்கிறார்கள் 😊 😊 😊
என்ன என்ன திரும்ப சொல்லுங்க. பண்ட மாற்று பொதுவுடமையா? இது என் பொருள் உன் பொருள் எனக்கு வேண்டும். என் பொருளில் எத்தனை கொடுத்தால் உன்னுடைய உற்பத்தி பொருளை தருவாய் என்பது தானே பண்ட மாற்று? இந்த முறையிலே என் பொருள் உன் பொருள் என்று தானே கொடுத்தும் பெற்றும் இருந்தார்கள். அது தனியுடமை தானே? எங்கிருந்து பொதுவுடமை குதித்தது?

பொதுவுடமை என்றால் இது நம் பொருள். நமக்காக நாமே ஆக்கியது. இதனை நாம் பங்கிட்டு துய்க்கலாம் என்ற முறை. அப்படி ஒரு முறை இந்த மண்ணில் இருந்ததே இல்லை. அது எப்டின்னா நான் என்னோட உமி கொண்டு வரேன். நீ உன்னோட அவல் கொண்டு வா. ரெண்டையும் கலந்து நம்ம் ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்டலாம் என்ற சுரண்டல் முறை என்பதை நன்கறிந்து தொழில் வகையில் தேர்ந்து மென்மேலும் அத்தொழிலில் சிறந்திட தொழில் முறையிலெயே சமுதாயக் கட்டமைப்பையும் ஏற்படுத்தி வைத்தார்கள்.

மேலும் பண்ட மாற்று ரொம்ம்ம்ம்ப பழசு. 3000 வருட வெள்ளி முத்திரைகள் தங்க முத்திரைகள் இருக்கிறது. நாம் தனியுடமையாகத் தான் இருந்திருக்கிறோம்.

பொதுவுடமை புளுகர்கள் திரிபுக்கு மயங்கி விழ வேண்டாம். கடந்த நூற்றாண்டில் உலகில் ஒரு பகுதியில் சோதனை செய்து 70 வருடத்தில் அந்த நாடே நாசமாகி இப்போ தான் கை ஊன்றி எழுந்து நிற்க முயன்று கொண்டிருக்கிறார்கள். விபரம் தெரியாத தமிழர்களிடம் பாலாறு தேனாறு என்று வார்த்தை அலங்காரம் வைத்தால் ஏமாந்து விடுவார்கள். இது உணர்ச்சி வெறியிலே நாடகக்க்ரர்களிடம் தன் சுயத்தை இழந்த சமூதாயம். அதுக்காக சொன்னேன்.
 
Top