What's new

வாழ்க்கையும் சகிப்புத்தன்மையும்

Jokerr

Well-known member
Joined
Jan 6, 2022
Messages
99
Points
63
நாம் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கின்ற அனைத்து மனிதர்களுமே இனிமையானவர்கள்
ஒவ்வொருவரும் ஒரு துறையில் சிறந்து விளங்குவர்
அனைவருமே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் என்று எதிர்பார்க்க முடியாது
அவரவர் எந்தத் துறையில் சிறந்து விளங்குகின்றன என அறிந்து அவரோடு பழகினாள் நல்லதொரு நட்பு கிட்டும்
இதை அறிய அனைவருக்கும் சகிப்புத் தன்மை மிகவும் அவசியமாகும்
நாம் இதனை பாலோடு ஒப்பிடலாம்
பாலைக் காய்ச்சாமல் அப்படியே அருந்தினாலும் சுவையாக இருக்கும்
அதைக் காய்ச்சி சுண்ட வைத்து அதில் சிறிது அமிர்தம் சேர்த்து உண்டால்
இன்னும் சுவையாக இருக்கும்
அந்தப் பாலை சுண்ட வைக்க நம் மிதமான சூட்டில் அதை கொதிக்க வைக்க வேண்டும் அதிக சூட்டை தேற்றினாள் பால் திரிந்து விட வாய்ப்புகள் அதிகம்
அதே போல் மனிதனின் வாழ்க்கையும்
நாம் ஒருவருடைய நட்பு பாராட்ட வேண்டினாள் மிதமான சூட்டிலேயே இருவரது நட்பையும் பாராட்டுக்களை கொள்ள வேண்டும்
மனிதனின் உஷ்ணம் தீயை விடக் கொடியது அளவோடு உஷ்ணத்தை பரிமாறிக் கொண்டால் உண்மையான நட்பு உருவெடுக்கும் இனிமையான நட்பு மலர காரணமாயிருக்கும்
உஷ்ணத்தை நாம் எந்த அளவிற்கு சகித்துக் கொள்கிறோம் அந்த அளவிற்கு நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும்
இவனது உஷ்ணத்தையும் சகித்துக் கொண்டிருக்கும் எனது அன்பு நண்பர்கள் சகோதரர்கள் சகோதரிகள் அனைவருக்கும் எனது நன்றி 🙏🙏🙏
 
Top