What's new

வாழ்க்கை

Jokerr

Well-known member
Joined
Jan 6, 2022
Messages
99
Points
63
எனது தொப்புள் கொடி அறுந்தது
பூமிக்குள் நுழைந்தேன் சுவாசிக்க கற்றுக்கொண்டேன்
இதுவும் கடந்து வந்தேன்

தவழ்ந்தேன் எழுந்தேன் நடந்தேன்
விழுந்தேன் மீண்டும் எழுந்தேன் நடை பயின்றேன்
இதுவும் கடந்து வந்தேன்

வளர்ந்தேன் கலைகள் பயின்றேன் தோற்றேன் மீண்டும் தோற்றேன்
சில தருணங்களில் வெற்றியும் அடைந்தேன்
இதுவும் கடந்து வந்தேன்

இதற்கிடையில் இழந்தேன் இழந்தேன் எனை இவ்வுலகிற்கு
அறிமுகம் செய்தவர்களை
இதுவும் கடந்து வந்தேன்

மனிதனாய் உருமாறினேன்
எதிர் நோக்கினேன் கடலாய் உலகை கண்டேன் கையில் துடிப்பு இன்றி
நீச்சலும் அறியாதவனாய்
இதுவும் கடந்து வந்தேன்

கைகளை துடுப்பபாக்கி நெஞ்சினை
மரமாக்கி கால்களை விசய் ஆக்கினேன்
நீந்தக் கற்றுக் கொண்டேன் அன்று இதுவும் கடந்து வந்தேன்

இரு கைகளோடு இருக்கைகள் இணைந்தது இணைந்தது கைகள் மட்டுமல்ல இதயமும் தான்
வாழ்க்கையை வாழத் தொடங்கினேன் அன்றுமுதல்
இதுவும் கடந்து வந்தேன்




நான்கு கைகள் எட்டு கைகள் ஆக மாறினார்
ஏற்றம் இறக்கம் இன்பம் துன்பம்
நகரத் தொடங்கியது வாழ்க்கை
இல்வாழ்க்கை நல் வாழ்க்கை ஆக மாறியது
இதுவும் கடந்து வந்தேன்

தென்றல் மட்டுமே வீசிய இல் வாழ்க்கையில் சூறாவளியும் அடித்தது ஆணிவேர் அகன்றது
இதுவும் கடந்து வந்தேன்

நிலைகுலைந்து மனம் நொந்தேன்
செல்லும் திசை அறியாது தவித்து நின்றேன்
கடமை அறிந்தேன் நான்கு கைகளின் எதிர்காலம் உணர்ந்தேன்
இதுவும் கடந்து வந்தேன்

இயற்கையின் சீற்றத்தால்
குழுமம் அடைந்தேன் நண்பர்கள்
என சிலர் வந்தார்கள் சென்றார்கள்
அறிந்தேன் பின்னர் கானல் நீரான நட்பை
இதுவும் கடந்து வந்தேன்

இதுவும் கடந்து வந்தேன்
எதுவும் கடந்து வந்தேன்
இனியும் எத்தனை உண்டோ கடந்துசெல்ல
இதுவும் கடந்து செல்லும்
என்று வாழ்க்கையை பயணிக்கிறேன் ...

JOKERR🤡
 
M

Mathangi

Guest
இதுவும் கடந்து போகும்,
எதுவும் கடந்து போகும்,
தினம் ஒரு பொழுதும்
புதிய விடியலே, புதிய பாடமே, புதிய அனுபவமே,
கடப்போம் வாழ்க்கை எதுவரையோ, அதுவரை.....
கடந்த காலம் சிலரை எடுத்துகாட்டாக்கும்
நிகழ்காலம் சிலரை வாழ்க்கை துணையாக்கும்
எதிர்காலம் நம்மை உணரவைக்கும்,
வாழ்வின் இறுதி வரை போராடி வெல்வோம்.....
முடிவில் நாமும் வாழ்ந்த வாழ்வை எண்ணி மகிழ்வோம்...


1658998925821.png
 

Jokerr

Well-known member
Joined
Jan 6, 2022
Messages
99
Points
63
இதுவும் கடந்து போகும்,
எதுவும் கடந்து போகும்,
தினம் ஒரு பொழுதும்
புதிய விடியலே, புதிய பாடமே, புதிய அனுபவமே,
கடப்போம் வாழ்க்கை எதுவரையோ, அதுவரை.....
கடந்த காலம் சிலரை எடுத்துகாட்டாக்கும்
நிகழ்காலம் சிலரை வாழ்க்கை துணையாக்கும்
எதிர்காலம் நம்மை உணரவைக்கும்,
வாழ்வின் இறுதி வரை போராடி வெல்வோம்.....
முடிவில் நாமும் வாழ்ந்த வாழ்வை எண்ணி மகிழ்வோம்...


View attachment 3513
அருமை தோழியே 😊😊😊
 
Top