What's new

❣️ துணைகளே தூண்கள் ❣️

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
❣️❣️❣️
"தெய்வங்கள் சாட்சியாகும்,
தெருவெல்லாம் காட்சியாகும் ,
தெம்மாங்கு இசை இசைக்கும்,
தேவதைகள் தேன்மொழியில்
வாசிக்கும்..


துணைகள் வந்த பின்னே,
தூரங்கள் அருகிலே அமரும்..
துரோகங்கள் துரத்தினாலும்
மறையும்,


ஆசைகள் அறுபது பக்கம்,
தேடல் தானே தினசரி சொர்க்கம்,
தேவலோகம் வரை தேடுகின்ற
மனதும்,
தெய்வீகமாய் வாழ்ந்திடும் காதலும்
புனிதம்..


பெற்றால் மட்டும் பிள்ளை இல்லை,
பெண் அணைப்பில் ஆணும் ஓர் பிள்ளை,
பெண்ணியமே வானத்திற்கும் எல்லை..


ஆதரவு இன்றி ஏங்கும் ஓர் தவிப்பு,
ஆண்மகன் மட்டும் தரும் அரவணைப்பு,
அதில் வாழும் காதல் கட்டமைப்பு ..


பிள்ளைகள் வந்தாடும்,
பிரியம் வந்து பிணைப்பு உண்டாகும்,
பிரிவினை பின்னர் வந்து வாடும்.


புரிதல் இல்லை என்றால்,
பூந்தோட்டத்தில் புயல் வந்து
அடிக்கும்.
பூமி பந்து பூகம்பத்தில் அதிரும்.


புரிந்து கொண்டு வாழ்ந்தால்,
பூக்கள் எல்லாம் புன்னகைத்து
சிரிக்கும்,
புனிதம் எல்லாம் புண்ணியமாய் மலரும்.


வாழ்க்கைத்துணை வாரணம் ஆயிரமாகும்,
வாழ்ந்து பார்த்தால்
வார்த்தைகளும் தோற்றுப்போகும்,
வாடை காற்றும் வசந்தமாய் மாறும்,
வானவில்லும் வாசல் தெளித்து கோலம் போடும்"❣️❣️❣️❣️
 

Attachments

  • top-60-624x702.jpg
    top-60-624x702.jpg
    80.3 KB · Views: 1

Nilaani

Well-known member
Joined
Jul 22, 2022
Messages
67
Points
53
பெற்றால் மட்டும் பிள்ளை இல்லை,
பெண் அணைப்பில் ஆணும் ஓர் பிள்ளை,
பெண்ணியமே வானத்திற்கும் எல்லை.....
மிக அழகு அண்ணா 🙏🏻
 

Aadhini

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
363
Points
113
Ivlo purithal ungaluku iruku na.. wow.. ur wife is gonna be a luckiest one.. 🙂

ஆதரவு இன்றி ஏங்கும் ஓர் தவிப்பு,
ஆண்மகன் மட்டும் தரும் அரவணைப்பு,
அதில் வாழும் காதல் கட்டமைப்பு ..

👏👏
 

Nanci

Well-known member
Joined
Aug 8, 2022
Messages
35
Points
53
புரிந்து கொண்டு வாழ்ந்தால்,
பூக்கள் எல்லாம் புன்னகைத்து
சிரிக்கும்,
புனிதம் எல்லாம் புண்ணியமாய் மலரும்

👌👌👌💜
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,608
Points
133
Location
Karur
❣️❣️❣️
"தெய்வங்கள் சாட்சியாகும்,
தெருவெல்லாம் காட்சியாகும் ,
தெம்மாங்கு இசை இசைக்கும்,
தேவதைகள் தேன்மொழியில்
வாசிக்கும்..


துணைகள் வந்த பின்னே,
தூரங்கள் அருகிலே அமரும்..
துரோகங்கள் துரத்தினாலும்
மறையும்,


ஆசைகள் அறுபது பக்கம்,
தேடல் தானே தினசரி சொர்க்கம்,
தேவலோகம் வரை தேடுகின்ற
மனதும்,
தெய்வீகமாய் வாழ்ந்திடும் காதலும்
புனிதம்..


பெற்றால் மட்டும் பிள்ளை இல்லை,
பெண் அணைப்பில் ஆணும் ஓர் பிள்ளை,
பெண்ணியமே வானத்திற்கும் எல்லை..


ஆதரவு இன்றி ஏங்கும் ஓர் தவிப்பு,
ஆண்மகன் மட்டும் தரும் அரவணைப்பு,
அதில் வாழும் காதல் கட்டமைப்பு ..


பிள்ளைகள் வந்தாடும்,
பிரியம் வந்து பிணைப்பு உண்டாகும்,
பிரிவினை பின்னர் வந்து வாடும்.


புரிதல் இல்லை என்றால்,
பூந்தோட்டத்தில் புயல் வந்து
அடிக்கும்.
பூமி பந்து பூகம்பத்தில் அதிரும்.


புரிந்து கொண்டு வாழ்ந்தால்,
பூக்கள் எல்லாம் புன்னகைத்து
சிரிக்கும்,
புனிதம் எல்லாம் புண்ணியமாய் மலரும்.


வாழ்க்கைத்துணை வாரணம் ஆயிரமாகும்,
வாழ்ந்து பார்த்தால்
வார்த்தைகளும் தோற்றுப்போகும்,
வாடை காற்றும் வசந்தமாய் மாறும்,
வானவில்லும் வாசல் தெளித்து கோலம் போடும்"❣️❣️❣️❣️
என்னமா எழுதுறான் 🤔🤔🤔 donnu நீர் மட்டும் இந்தியா ல இருந்தா நீர் தாணைய கவிபுயல் ar ரஹ்மான் 🤣😍😜
 
Top