What's new

❤❤தலையணை❤❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இரவின் மடியில் உறங்கும் வேலை.... ❤
அலைதான் நிறுத்தி வைக்கும் மாலை... ❤

பூமஞ்சத்திலே என் தலை சாய்க்க... ❤
மஞ்சள் பூசிய அத்தேகம்
பளிங்கு போல் என்மேனி எங்கிலும் குளிரச்செய்ய... ❤

மாலை வேலையின் மன்மத ராகம் பாடியே மோகம் தரும் இரவில் தாகம் தீர்க்க வரும் தேவமஞ்சரியோ!!! எந்தன் குஞ்சரி... ❤

நகர வாழ்விலே நித்தமும் நரக வேதனை... ❤அமர சுகம் தரும் சாதனையே புரிவாளே... புரிதலுடன் புன்னகைத்து!!! ❤

இஜ்ஜிவனே, கூட்டை விட்டாலும் விடாமல் செல்லும் அன்னாளின் மயக்கம்...❤

உறக்கம் அன்றி நான் உனை பார்க்க அவளை கட்டியனைக்க எண்ணிய போதெல்லாம் என்னருகே என்னவளின் கூந்தல் வாசம் படர்ந்த உம்மை தழுவியே சிறிது கண்கள் வேர்க்கும் தருணம்...❤

என் தலைசாய்க்க எந்தன் இணையான எம் வீட்டின் தலைவி தம் மடியிலிட்டு மஞ்சத்திலே கீதம் பாட இன்று கூடவில்லையே ---- அந்த, அணையா விளக்கை ஏந்திய காரிகை!❤

பார்க்கும் பொழுதெல்லாம் என் நெஞ்சில் எம் தலைவியின் அணைப்பை இன்பமாய் உச்சுக்கொட்டி நினைவூட்டும் அவளின் தலையணையே!!!❤
 
Top