What's new

🌺செம்பருத்தி - (Hibiscus rosa-sinensis)🌺

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
செம்பருத்தி.(Hibiscus rosa-sinensis)
கிழக்கு ஆசியாவில் பிறந்த செம்பரத்தை!
இலங்கைக்கு எழில் சேர்க்கும் பூக்கும் தாவரம்! சீன நாட்டின் மருத்துவ ரோஜா!மலேசிய நாட்டு தேசிய மலர்! 10.அடி உயரம் வளரும் புதர்
தாவரம்ஜபாபுஷ்பா,
ருத்ர புஷ்பா என ஆயுர்வேத மருத்துவத்தின் மைய மருந்து!
ஆலயங்களின் அர்ச்சனை புஷ்பம் நீ!இதயத்தைத் திடமாக்கும் தங்கபஸ்பம்! வயிற்றுப் புண்ணுக்கு வாய்த்த நல்மருந்து!கர்ப்பம் தரிக்கவோ கைகண்ட சூரணம்! பசிபிக் மக்களின் பசிபோக்கும் உணவுபொருள்!சித்த மருத்துவத்தில் சிறப்புறும் சிகரம்!மங்கையர் கூந்தலுக்கு அழகூட்டும் பூங்கா!
தோட்டத்தை அலங்கரிக்கும் நந்தவனப் பூச்செண்டு!
மண்ணுக்குக் பொறுமை அழகு!
கண்ணுக்குக் கருமை அழகு பாட்டுக்குச் சந்தம் அழகு!
வீட்டுக்கு நீ அழகு!
உன் சிவப்பு நிறத்தை செவ்வானம் இரவல் வாங்கி அழகாக்கிக்
கொண்டது. அழகும் மருந்தும் ஆன
அற்புதமே!
செம்பருத்திப் பூவே! நீ
ஆலும் வேலும் உள்ளவரை
நாளும் மேலும்
வாழியவே!!!
🌺🌺🌺🥰😍🌺🌺🌺
 
M

Mathangi

Guest
அருமை தோழா மிக அருமை ஒவ்வொரு தாவரத்திலும் ஒரு மூலிகை மருத்துவம் உள்ளது எப்பவும் இயற்கை அழகு இயற்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை......😍😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அருமை தோழா மிக அருமை ஒவ்வொரு தாவரத்திலும் ஒரு மூலிகை மருத்துவம் உள்ளது எப்பவும் இயற்கை அழகு இயற்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை......😍😍
கவிதைக்கு ஓர் மாதங்கி இருப்பது போல 🥰❤ இயற்கைக்கு ஓர் மூலிகை தாவிரம் உள்ளதே!!!❤🥰
 
Top