What's new

21.02.2022 --- World's Mother Tongue Day ❤🥰

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் இனிய அன்பர்களே 🥰❤,

தொல்காபியர் முதல் உலக பொது மறையாம் திருக்குறள் படைத்த திருவள்ளுவர் வரை உலகில் பற்பல கண்டங்களில் வான் புகழ் படைத்த நமது தாய் மொழியாம் தமிழ் மொழியை போற்றி நமது தமிழ் கலாச்சாரங்களை இவ்வுலகின்னாற்கு இன்நன்நாளிலே தெரிய படுத்துவோம் 🥰🙏 வாழ்க தமிழ் 🥰🙏
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
செம்மொழியான செந்தமிழே
என்று விதைந்தாய்
யாரும் அறியார்
ஞாலத்தின் ஞானிகளின்
கற்பகவிருட்சமே
என்றும் திகட்டாத
தேனருவியே
இயல் இசை நாடகமென
முக்கனியான முத்தமிழயே
உன் வடிவில்
ஒன்றரை அடியோ
பெரும்காப்பியமோ -அதில்
நயனங்களும் நாளமும் மிகுதியே
உன் உச்சரிப்பும் உபசரிப்பும்
பிரம்மாண்டமே
உனை பற்றியவரை மயக்கும்
மாயோள் நீ
உனை போற்றிட
உன் மொழியின்
சொல்லூற்றில் மிதந்து
வலையில் சிக்கிய சொற்கயல்களை
ஒருசேர்த்து கரைசேர்ந்த
மாயோனாய் நான்
மானிடர்கள் களித்து போற்றும்
ஆதி அந்தமிலாது இனிய மொழி எம்
செம்மொழியான செந்தமிழே!!

🥰❤சர்வதேச தாய்மொழி தினம்🥰
 
Top