What's new

April'23 competition

Status
Not open for further replies.

Hiroshi

Well-known member
Joined
Jul 1, 2022
Messages
313
Points
133
GridArt_20230330_154211209.jpg

April'23 Race (competition) starts from 1st April.

Happy to welcome
Excellent Singers
Awesome Artist
Soulful Story Writers and
Best Poets
  • You can upload your posts in this thread.
  • Whole month you can upload any number of posts.
  • Your post can be in any of this language - Tamil, Telugu,Hindi, Malayalam or English
  • Based on the total number of 👍🏻😍😲 responses winner will be selected.
  • If more than one winner then winner will be selected through open poll.
  • Based on likes Leader Board will be maintained periodically.
  • Winner will be appriciated by Ribbon.
For more details plz refer the below link.

We Wish You All The Best💐
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,316
Points
20
வேண்டுமடி நீயெனக்கு !

யுகங்களாய் சேர்த்து வைத்த
காதல் மேகங்களை பிழிந்து - நான்
மழையாய் பொழிந்து தள்ள
மதிமுகம் காட்டி விழிமூடி -
வேண்டுமடி நீயெனக்கு !

மொட்டு அரும்பும் மாலைக்கும்
பூ மணக்கும் விடியலுக்கும்
இடையில் ஆட்கொள்ளும்
தனிமை துடைக்க -
வேண்டுமடி நீயெனக்கு !

தலையணை ஆயுதம் ஏந்தி
நீ துரத்தும் நொடிப்பில்
உன் கூந்தல் கானகத்தில் ஒளிந்து

திசை தொலைத்திட -
வேண்டுமடி நீயெனக்கு !

ஊடல் கொண்டு பின்பு கூடல் கண்டு
இச்சை அடங்கிய முன்னிரவின்
முழுமதியின் ஒளியில் - என் மார்பில்
உன் விரல் புனைப்பெயர் தீட்டிட -
வேண்டுமடி நீயெனக்கு !

உன் பாதச்சுவடை மையப்படுத்தி
அரைவட்ட வளைகோடிட்டு
உப்புச்சாறு நிரப்பிய
கடலின் குறுக்களவு காண -
வேண்டுமடி நீயெனக்கு !

அக்கடலின் கருத்த மணலில்
புதைத்த கால்கள் தனை
மீட்க வரும் அலைகளை
அள்ளி அணைத்திட - என்னருகில்
வேண்டுமடி நீயெனக்கு !

வாகனங்கள் உறங்கிப்போன
ஒரு மார்கழியின் பின்னிரவில்
நிலாமுற்றத்தில் படுத்து
விண்மீன்களின் வருகைப்பதிவு கணக்கிட -
வேண்டுமடி நீயெனக்கு !

உனக்கு நான்
எனக்கு நீ
பிழையில்லா கணக்கு !

காதல் வழிந்தோடும்
பின்னொரு நாளில் - கண்ணம்மா
உன் மடியில் விழுந்து
உயிர் துறத்தல்
போதும் எனக்கு !

அதுவரையிலும்
வேண்டுமடி நீயெனக்கு !

IMG_20230401_143303.jpg
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
என் தமிழ்♡ இசை🎶

அசைபோடும் உன் நினைவை இசையோடு கோர்த்தேன்..♥


மனம் பாடும் ராகமொன்றை உனைக்கென்று வார்த்தேன்..♥

கவிதை தவிர உள்ளம் சொல்ல மொழியில்லை..♥


என் அன்பைத் தவிர அள்ளித்தர எதுவுமில்லை.♥♥
couple-6788267_1280.jpg
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
எனது பாடல்🎤🎶


கவலைகள் மறக்குதே♥
கவிதைகள் பிறக்குதே♥

உன்னருகே நான் இருந்தால்♥
தினம் உன்னருகே நான் இருந்தால்♥
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
என்ன செய்வேன் நான்..🌸

காத்திருந்து காலங்கள் கடந்தாலும்..🌸

அவனின் காதல் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும்..🌸

அவனை மறக்க என் மனம் மறுக்கின்றது..🌸

அவனின் நிழல் போல என் நினைவுகள் அவனைத் தொடர நிமிடங்கள் தவறாது..🌸

அவனை நினைத்து கொண்டிருக்க என் இமைகள் இயல்பை மறந்து இமைக்கத் தவறிவிடுகிறது..🌸


என்ன செய்வேன் நான்..🌸
5f8060f7439ba8f336a1410417b0f713.jpg
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
எனது பாடல்🎤🎶

உன் தேடலோ காதல் தேடல் தான்😍
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல🙈

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே😉
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே😍
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,928
Points
133
அழுவதற்கான
காரணத்தை
சொல்லத்
தெரியாத வயதில்
சத்தமாகவும்.......

சொல்லத்
தெரிந்த வயதில்
மெளனமாக
மனதிற்குள்ளும்.....

அழுது கொள்கிறோம்.....

57E76C32-0984-4C87-AE94-B5D25E6EC78A.jpeg
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
கதை...(கவிதை)


கேன்டீனில் அனிதாவுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்ததும்,
அழுதுகொண்டே கம்பெனி வாசலை விட்டு வெளியேறினாள், மலர்.

மலர் அழுதுகொண்டு போவதைப் பார்த்த தமிழ் , அவளின் பின்னே ஓடி வந்தான்.


"மலர் ! மலர் ! நில்லு.

ஏன் இவ்ளோ வேகமா போற?

உன்கிட்ட ஒரு விஷயம்
சொல்லணும்" என்றபடி மூச்சிரைக்க ஓடி வந்தான், தமிழ். அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்தான்.

"ஏன் யாருக்குமே என்ன பிடிக்க மாட்டேங்குது?"

"அப்டிலாம் சொல்லாத, உன்ன எல்லோருக்கும் புடிக்கும்.
நீ எதுக்கும் கவலப்படாத, நீ வேணா பாரு ஒருநாள் அவனாவே உன்ன தேடி வருவான்" என்று அவளை ஆசுவாசப் படுத்தினான்.

ஆறுதல் வார்த்தைகளுக்கு இடையே அவளது விரல்களை மெதுவாகப் பிடித்துக் கொண்டான். அவளும் எதைப் பற்றியும் யோசிக்காமலும் உதறி விட மனமில்லாமலும்
தன் உள்ளங்கை வியர்வையை அவனது உள்ளங்கையில் படரவிட்டாள்.

மௌனம் பேசிக்கொண்டு
இருவரும் விரல்களைக் கோத்தபடியே கம்பெனி பேருந்தில் ஏறினார்கள். வற்றிய கண்ணீரோடு அவன் தோளின் மேல் சாய்ந்துகிடந்தாள். பேருந்து சென்று கொண்டே இருந்தது.

திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய்
"ஆமா நீ ஏதோ ஒரு விஷயம் சொல்லணும்னு சொன்னியே , என்னனு சொல்லு" என்றாள், மலர்.

ஆ… அது வந்து...
"ஒரு கவித எழுதி இருக்கேன் படிச்சி பாத்து, எப்டி இருக்குன்னு சொல்லு" என்று பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த பேப்பரை அவளிடம் நீட்டினான்..


அதில்

"எல்லோருக்கும் காதல் பிடித்திருக்கிறது
ஆனால், காதலுக்கு ஒரு சிலரை மட்டுமே பிடித்திருக்கிறது இப்போதைக்கு நீயும் நானும்"


என்று எழுதியிருந்தது.

அந்தக் காகிதத்தின் ஓரத்தில் "ஐ லவ் யூ" என்றும் எழுதப்பட்டிருந்தது.


படித்து முடித்த அவள் ஒன்றுமே சொல்லவில்லை. மௌனமாகவும் பதட்டமாகவும் இருந்தாள். எதுவும் பேசாமல் இருவரும் பேருந்தை விட்டு இறங்கி அவரவர் அறைக்குச் சென்றார்கள்.

அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஏதேதோ தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தான்.
வெட்கம் ஒரு பக்கம், அவள் என்ன சொல்வாளோ என்கிற பயம் ஒரு பக்கம் தமிழை உருட்டிக் கொண்டிருந்தன.

ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில்

அவளின் பதிலுக்காக வாட்ஸ் அப்பை திறந்து வைத்தபடி தூங்காமல் காத்திருந்தான். சரியாக மணி 2:30 இருக்கும். ஒரு நோட்டிபிகேஷன் சத்தம் காதில் விழுந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டே தூக்கக் கிறக்கத்தில் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்தான் தமிழ்.

அதில்


"எல்லோருக்கும் காதல் பிடித்திருக்கிறது
ஆனால், காதலுக்கு ஒரு சிலரை மட்டுமே பிடித்திருக்கிறது இப்போதைக்கு நீயும் நானும்"


பாவம் தமிழ்… சந்தோசம் வெகு நேரம் நீடிக்கவில்லை.

மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த தமிழின் கனவில் நீர் வாரி இறைத்து விட்டது செல்போன் அலாரம்.

கனவைக் கலைத்த செல்போனைத் திட்டிக்கொண்டே அவசர அவசரமாய்க் கம்பெனிக்குக் கிளம்பினான்.

கேன்டீனில் டீ ஆர்டர் செய்துவிட்டு எதார்த்தமாகத் திரும்பிப் பார்த்தான். கனவுக்கு மாறாகச் மலரும் கார்த்திக்கும் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. "டீ"யைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு,

கடைசி டேபிளில் சோகமாய் அமர்ந்திருந்த அனிதாவிடம் கடிதத்தை நீட்டினான்.

5e39f28d220000580923e67d.jpeg
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
♥இதுவும் கடந்து போகும்♥

அவனுகான சந்தோஷம் அவள் என்ற போதும்♥...

எனக்கான உலகம் நீ என்று தெரியாமல் போனது என் குத்தம்மா♥...

தினமும் உன்னை எண்ணி எண்ணி நினைத்து கொண்டு கடந்து போகிறேன்...
இதுவும் கடந்து போகும் என்று♥...

என் மனம் உன்னை கடந்து போகுமோ தவிர உன்னை நினைக்கும் என் நினைவை யாராலும் கடந்து போக செய்ய இயலாதது♥...


தொடரும் உன் நினைவு என்னை சுற்றியே♥ ...
IMG_20230406_174649.jpg
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

ஒரு தலை காதல தந்த
இந்த தருதலை மனசுக்குள் வந்த♥
காதலிக்க guide இல்ல
சொல்லித் தர வா வாத்தி😘
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அல்லி தர வா வாத்தி😘

என் உசுர உன் உசுர தார கை மாத்தி♥
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,316
Points
20
IMG_20230406_165200.jpg

கழுகண்ணே,
க(வி)த ஒன்னு சொல்லுறே
கவனமா அத நீ கேளண்ணே!

என்ன பெத்தா ஏ ஆத்தா,
அவ நெஞ்சுல பால் வரல
ரத்தங் குடிக்க எனக்கு புடிக்கல ;
அப்பன போல பட்டினியிலே
அவளுஞ் செத்து போனா பாடையிலே !

மேதைக - சுக்கிரனுல
தண்ணி தேடி போனப்ப,
இந்த பொட்டல் காட்டுல
ரொட்டி துண்டு ஒன்னு
தேடி அலஞ்ச பேதையண்ணே !

லட்டு ரெண்டுக்கு ஒரு குபேரரு
லட்ச ரூபா உண்டியல்ல போட்டாரு ;
பிச்ச கேட்டு போன என்ன
எச்சகளையினு வசஞ்சு
எட்டி ஒதச்சாரு !

சாராயங் குடிச்சு முடிச்சு
பஞ்சணையில சொகம் தேடுற
சீமானுங்க மத்தியிலே - நானு
வாய் எச்சில முழுங்கி
வயித்த நிரப்புற சாதியண்ணே !

வாய்பேசாத கோழிக்குஞ்சு - அத
பொசுக்கி வறுத்து தின்னாங்க;
கிறுக்கி நானு
பேசி தொலைச்சுப்புட்டே
உசுர மட்டும் விட்டு வெச்சாங்க!

பழந்தின்னு பசியாத்த
பழங்காட்டுக்கு போனா,
மேதைக - மரத்த வெட்டி
மேசைக செஞ்சுக்கிட்டாங்கனு
குருவியொன்னு பொலம்புச்சுண்ணே !

நாகரீகம் பாத்தவங்க,
விரல விட்டு - போசனத்த
கரண்டில தின்ன மறக்கல;
சதையிருந்த விரல - அப்பவே
வெட்டி தின்ன நான் மறந்துட்டே !

பசியோட நீ வந்திருக்க,
பருந்துக்கு விருந்து படைக்க
பாவிமக ஒடம்புல ஊனில்ல;
எலும்ப கொத்தி - உன்
அலக ஒடச்சுக்காதண்ணே !
 
Last edited:

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,928
Points
133
யாரைப்பற்றி
நீ நிறையச்
சிந்திக்கிறாயோ,
அவர்களால்
நீ அதிகம்
பாதிக்கப்பட்டிருப்பாய்...

அன்பெனும் ஆயுதத்தால்...

73834EAA-1364-43B2-BBF7-3CFF84039615.jpeg
 

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
தோல்வியில் வெற்றி

மரத்தின் தோல்வியே காகிதம்,
காகிதத்தின் வெற்றியே இன்றைய கல்வி..!

கடல்நீரின் தோல்வியே உவர்ப்பு,
உவர்ப்பின் வெற்றியே உணவின் உயிர்ச்சுவை..!

மாரியின் தோல்வியே வறுமை,
வறுமையின் வெற்றியே சேமிப்பு..!

பசுமையின் தோல்வியே பாலை,
பாலையின் வெற்றியே எண்ணெய் கிணறுகள்..!

காதலின் தோல்வியே பிரிதல்,
பிரிதலின் வெற்றியே புரிதல்..!

மனிதனின் மிகப்பெரிய தோல்வி மரணம்,
மரணத்தின் மாபெரும் வெற்றி உடல் உறுப்புகள் தானம்..!

தோல்வியின் தோல்வியே வெற்றி..!
வெற்றியின் பாதையில் மட்டுமே செல்லவேண்டும் என்றில்லாமல்,

தோல்வியின் பாதையிலும், துளிர் விடும் வெற்றியைத் தேடுவோம்..!

நன்றிகளுடன் ,
அகமகிழன்
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,316
Points
20
நேசவியல்

வானின் நீளம் அளக்கும்
பறவையை போல என் நேசம்!

காற்றின் சீற்றங்களில்
காயமுறாது அவ்விறகு;
அங்கையின் அழலுதலில்
அழிந்திடாது என் நேசம்!

முகந்திரிந்த முகக்களையை- என்
புன்முறுவல் தெளித்த முகத்தலில்
மகிழ்ந்து நீள்கிறது
இந்த பறவையின் பறத்தல்!


IMG_20230407_111232.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top