What's new

Budget 2023

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,549
Points
133
Location
Universe
மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் பல அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பால் நடுத்தரப் பொருளாதாரப் பிரிவில் இருக்கும் மக்கள் பெரும் தொகையை வரிக்கும் விலைவாசி உயர்வுக்குமே இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருமான வரி செலுத்துவோருக்கு மிகவும் தேவையான நிவாரணங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது
இதிலும் முக்கியமாக அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த பல தரப்பினரும், பொருளாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளதால் அதற்கான அறிவிப்புக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி:-
தற்போது நடைமுறையில் இருக்கும் பழைய மற்றும் புதிய வருமான வரி விதி கணக்கீட்டு முறையின் கீழ் வருமான வரி செலுத்தும் தனிநபருக்கு அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சமாக உள்ளது

5 லட்சம் ரூபாய் ரிபேட்

மேலும், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 87A இன் கீழ், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் கொண்ட தனிநபர், 12,500 ரூபாய் வருமான வரிச் சலுகை பெறத் தகுதியுடையவராக உள்ளனர். இந்த விதிமுறை கீழ் இரண்டு வருமான வரி முறைகளின் கீழும் கிடைக்கும்.

முற்றிலும் விலக்கு:-

இந்த நிலையில் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்குத் தனிநபர்கள் பிரிவில், பழைய மற்றும் புதிய வருமான வரி விதிகளின் கீழ் முற்றிலும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்படுகிறது.

cost of living பிரச்சனை:-

இந்தியாவில் cost of living பெரிய அளவு அதிகரித்துள்ள நிலையில், பணவீக்கத்தைச் சமாளிக்கப் பல வருடமாக இருக்கும் 2.5 லட்சம் ரூபாய் வருமான வரித் தளர்வு அளவை அதிகரிக்க வேண்டும் கோரிக்கை அதிகளவில் வருகிறது.

மக்கள் கையில் பணம்:-
5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்படுவது மூலம் மக்கள் கையில் அதிகப்படியான பணம் கிடைக்கும், இதன் மூலம் மக்களின் முதலீட்டு அளவு அதிகரிக்கும். அதேபோல் செலவு செய்ய அதிகப்படியான பணம் கிடைக்கும் காரணத்தால் இந்தியாவில் சரிந்துள்ள டிமாண்ட் அளவை எளிதாக அதிகரிக்க முடியும்.
 
Top