What's new

C2F Bigboss Season -1 ( From Task -6)

Status
Not open for further replies.

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,300
Points
153
Thanks for your kind words @Tiruchii and @Assistantdon

Nam padhivugalukku paaratugalum angigaaramum kidaikkumpodhu, manasukku romba sandhoshama irukkum...

I thank Aadhini for her great efforts... Avanga oviyamum, adhai present pannirndha vidhamum, silirkka vaithadhu... Namma jeyichittom @Aadhini 😂

Theju and Aramsei ku ennoda Vazhthukkal... 👍

Ellorume romba arumaiyaa pannirndhalum, engalai ookuvitha Captain Vijayakanth, sorry Captain Tiruchi ku once again, engaloda nandrigal 🙏😂
Aama @Agnii namma jeyichitom 😍💃🏻🥰😀 as i said unga kavithai was excellent.. as a team we won it.. 👏👏👏

@Tiruchii rombha tough aana captain velaya rombha sirappa pannitinga.. vaazhthukkal

@Theju @AramSei congrats to u both..

Ellarum rombha azhaga intha task ah panni iruntheenga... claps to all the participants.. 👏👏👏 keep going..
 
Last edited:

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
444
Points
133
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,884
Points
133
Task -7

நவீன காலத்து காகம்..

1.இது கதை சொல்லும் நேரம்..


2. இங்கு நமக்கு தெரிந்த நான்கு கதைகள் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது..

3. அந்த கதைகளில் உங்களுக்கு பிடித்தமான கதை தலைப்பை தேர்ந்தெடுத்து இந்த காலத்திற்கு ஏற்றாற்போல் நவீனமாக நகைச்சுவையுடன் சொல்லவேண்டும்..

தலைப்புகள்

1. பாட்டி சுட்ட வடை
2. தாகம் தீர்த்த காகம்.
3.விவசாயின் தங்க கோடாரி..
4. சிங்கத்தை வீழ்த்திய நான்கு எருதுகள்..

இதில் உங்களுக்கு பிடித்த தலைப்பை தேர்ந்தெடுத்து இந்த காலத்திற்கு ஏற்றது போல் கூறவேண்டும்..

சிறந்த கதைக்காக இருவர் காப்பற்றப்படுவர்..


WILD CARD ENTRY ன் மூலம் புதிய வரவாக @UngalVirupam @cruze @Tiruchii @Archee உள்ளே வருவார்கள்..

இந்த Taskல் காப்பற்றப்படுவர்கள் தவிர அனைவரும் Nomination செல்வர்..

இந்த Task captain ஆக @Aadhini செயல்படுவார்..

Taskன் நேரம் November -01-2022 04.00 pm முதல் November -03-2022 04 .00 pm வரை..


In English


Task-7 Modern day crow..

1. It's story telling time..


2. Here are the titles of the four stories we know.

3. Select your favorite story theme from those stories and tell it in a advanced and amusing way concurring to the times.

Topics

1. Grandma's Prepared Vada
2. The parched crow.
3. Farmer's brilliant axe..
4. The four bulls that crushed lion

Choose your favorite topic and say it as appropriate for the time.

Two will be saved for the best story..


@ungalviruppam @cruze @tiruchi @Archee will enter as a new entry through WILD CARD ENTRY..

@Aadhini act as a task captain


Task duration - from Nov -01-2022 4.00pm upto November -03-2022 04.00 pm
 
Last edited:

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
444
Points
133
வாழ்த்துக்கள் @AramSei @Aadhini @Agnii @Theju . நீங்கள் நால்வரும் காப்பாற்ற படுகிறீர்கள்.. இந்த பதிவுகளில் உழைப்பு, உயிர், ஊக்கம், ஏக்கம், தாய்மை என எல்லாம் கலந்து ஒரு உயிரோட்டம் ஆக இருந்தது.. அருமையான சிந்தனை, ஆழமான வரிகள் எல்லாம் உங்கள் திறமைகளை வெளியெடுத்து காட்டியுள்ளது.. வாழ்த்துக்கள், இன்னும் சற்று நேரத்தில் Nomination poll open செய்யப்படும்..
Congratulations and special Mention to winners for their wonderful efforts !! Its One of such Task where everyone have involved and given WOW efforts !! Kuods @Assistantdon and @Tiruchii for choosing winners in this tough task !!
 
D

Deleted member 256

Guest
Grandma's Prepared Vada Story With a Twist.

The story goes like this.......
There was once a young handsome crow named Needu who loved to listen to stories told by Miss Bella the new kindergarden teacher. School holidays had just began and poor Needu started to feel bored so he decided to go to the city.
He started flapping his shiny wings and began to fly until he heard a loud rumbling sound."Ahh its 2.30pm no wonder my stomach is rumbling i am hungry!! said Needu to himself. Needu did not waste any time he started following the smell of food which hypnotized him and drew him to a shop. It was Nilapapa's Bakery!
Needu could just smell the aroma of the freshly baked doughnuts. As he kept inhaling the sweet aroma the rumbling grew louder n louder so he locked his eyes on the doughnuts and waited for an opportunity to snatch it away.
Nilapapa was too busy to notice the cheeky crow Needu as her focus was on posting her recipes in C2F Forum. Seizing the moment Cheeky Needu flew in silently and grabbed a piece of doughnut and flew away as fast as he could until he found a beautiful branch to sit on and enjoy his meal. Little did he know two little eyes were watching him silently.
Yes that two little eyes that was spying on Needu belonged to a girl who was sitting under the tree. "Hey my name is Vanathi"said the girl. "What a handsome bird you are, i bet you are an awesome singer! Can you please sing me a song,?" Vanathi asked with a big smile.Needu was smart he remembered the "Patti and Vaada" story so he replied Vanathi" i am smart i will not fall for your tricks" Right then the doughnut dropped from Needu's mouth and fell into Vanathi's hand.
Vanathi overjoyed giggled and ran away with the doughnut. Poor Needu had forgotten its not about singing its about not opening his mouth and letting the food fall! Needu had to sleep without food that day. Poor Needu 🥺....The End

Moral of the story : I will let you guys decide.

Special thanks to Needu, GG,Nilapapa and Vanathi for letting me use their names.Thank you for being such a good sport.😁
 
Last edited by a moderator:

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
Anaivarukum Vanakkam 🙏

Naan choose panniruka kadhai..

PAATI SUTTA (aataya pota) VADAI..

let's go on to story..

Enga oorula oru kurumbu kaara paati onnu irundhangalam,aungaluku yaarume illa thaniya dhan irundhangalam aunga veetu velai paathutu samabadhichutu irundhangalam.oru naal vazhakkam pola aunga velaiku kelamba neram aaita naala verum saadham vadichu thayirum vadayum vaangikalam vazhila nu nenachu kelambitanga.Aunga velaiku poitu irundha vazhila oru vadai kadaya paathangalam paati ingaye vadai vaangikalam nu kadaiku ponanga anga paatiku pasi edukavum oru vadaya vangi ingaye sapdalam nenachu kadaikarta thambi oru vadai kodupanu ketanga kadaikararum vadaya koduthar vadaya sapta paati yenpa vadai la uppu illaye nu sonanga adhuku kadaikaru paati dhanenu nakkala uppu thannila kalakumbodhu karanjiruchu venumna nee enaku vadaya suttu kaatu naan kathukurenu solla paati kovathula avaruku oru paadam solli thara thankitta irundha 500 koduthu kasu eduthutu micham koduka sonanga avarta micham chilrai ila iru paati mathitu varenu ponaram andha gap la namma paati oru vadaya sutrucham(aataya potruchu thaaai kelavi).kadaikaru silaraya koduthutu marubadiyum kindala ena paati vada suttu thariya ketadhuku naan yerkanave suttutenu sirichute badhil sollucham,vadaya koodaila vechutu angarundhu kelambuna paati nadandhu poitrundhucham apo andha valiya vandha oru two wheeler puncture aagi control illama paati mela vandhu modhucham apo paati kaila irundha koodai keela vilundhu adhula irundha vadaya anga parandhutu irundhu oru kaaka dabakatirnu kavvitu parandhurucham paati thirumba endhirichu kadaila kasu koduthu vadaya vangitu pocham kaakavoda vadai thanoda kunjukaluku koduthutrukum bodhu angavandha nari koravan andha kaakava thanoda kailairundha
Thuppaki naala damaal nu sututanam adhula adipatu andha Kaaka keela vizhundhu sethu pocham adhan eduthutu poai andha narikoravan suttu saptanam adha sariya clean pannama suttu saapta naala narikoravanuku Avan sutta gundoda oru pagudhi Kaaka udambula iruka adha avanyum saavadichurucham.

Enadhan kadhai cmdykaga cmdya sonnalum moral enavo nalladhuku dhan.

The End.

Indha kadhaila ulla morals

1.Yaara irundhalum aunga pechuku mariyadhai kodukanum illaina loss namaku dhan kadaikararuku 5 rs vadai loss aana madiri

2.Paati madiri update la irukanum kalavum katru mara

3.Kalava katru marandhuranum illana namma epdi sutomo apdiye nammalta sudavum aal irukum Kaaka madiri

4.Sudradhe periya thappu adhyum suttavanta irundhu sutradhu miga periya thappula adhunaala dhan Kaakaku oru sudu paavam uyire pochu

5.Yaaroda uyirayum eduka namaku anumadhi illa
Apdi kodurama nadandhukura ellarukum adhe dhan gadhi nu narikoravanukum nadandhuruchu Avan sutta gunde avan uyirayum eduthuruchu

6.Sutta porul ennaikume nilaikadhu idhu dhan final

Aduthadutha stories ku am waiting 😎.

Marubadiyum vaaipu kodutha BB ku nandrigal pala🙏
Vaazhga valamudan.
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,884
Points
133
கதைகளை கொஞ்சம் சுருக்கி 15 முதல் 20 வரிகளுக்கு மேல் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. பாட்டி சுட்ட வடையை விட நீங்கள் சுடும் வடையைவிட பெரிதாக உள்ளது.. @Sagiye sagiye @Tiruchii கதைகள் அருமை, ஆனால் சில Modern Technology பயன்படுத்தி இருக்கலாம் என்பது என் யோசனை, உதாரணம் - " பாட்டி Gas stove ல் வடை சுடும் பொழுது அங்கே ஒரு காக்கா mobile ல் subway surfers game விளையாடிக்கொண்டே பார்த்துக்கொண்டு இருந்ததாம்.. அந்த வழியாக காதில் Airpadல் musics கேட்டுக்கொண்டு நரி ஒன்று வந்ததாம், அதற்கு Zomato ல் order செய்ய பணம் இல்லாத காரணத்தினால் காக்கா பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டதாம்""

இது போல் சில சிந்தனைகள் தான் உங்கள் Task
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,884
Points
133
இந்த போட்டியில் நான் கலந்து கொண்டிருந்தால் இது தான் என் கதையாக இருந்திருக்கும்.. உங்கள் கதைக்கு ஒரு உதாரணம் தான்..

பாட்டி சுட்ட வடை

ஒரு பாட்டி வடை சுடுவதற்காக Reliance super market சென்று உளுத்தம்பருப்பு வாங்கி GST ல் தாறுமாறாக Bill வந்ததை கண்டு கடை ஊழியரிடம் " உனக்கு வைக்கிறேன் பாருடா ஆப்பு " என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றாராம்.. பாட்டி வடை சுடபோகிறாள் என்று தெரிந்துக்கொண்ட காக்கா Uber autoல் பாட்டியை பின்தொடர்ந்து சென்றதாம்.. பாட்டி வடை சுட்ட பின் காக்கா ஒரு வடையை ஆட்டையை போட்டு மரத்தில் சென்று அமர்ந்ததாம், மிகுந்த பசியில் அந்த வழியாக iPhone நோண்டிக்கொண்டே வந்த நரி " ஒன்று வடையை ஆட்டை போடவேண்டும் அல்லது காக்கா வை காலி செய்ய வேண்டும் " என்று தந்திரம் செய்ததாம்..உடனே நரி காக்காவை பார்த்து " பொன்னிநதி பார்க்கனுமே " பாடல் பாட சொன்னதாம். காக்கா நரியை விட தந்திரமாக "உன் mobile ல் Bluetooth on பண்ணு , நான் அனுப்புறேன் , நீயே கேட்டுக்கோ" என்றதாம். ஏமாந்த நரி " சரி நான் உன்னை கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன்.உங்க வீட்டுல வரதட்சணையா வடை கொடுத்தா போதும் என்றதாம். " வடையை தர மறுத்த காக்கா"எதுவா இருந்தாலும் எங்க வீட்டில் வந்து பேசிக்கோ " என்று சொல்லியதாம்..ஏமாற்றம் அடைந்த நரி

" இப்பவே இந்த போடு போடுறா.. இவளை கட்டிக்கிறதுக்கு பேசாம பட்டினி இருக்கலாம்" என்று நரி ஏமாற்றத்துடன் சென்றதாம்...
 

Theju

Beta squad member
Beta Squad
Joined
Jan 13, 2022
Messages
209
Points
113
இந்த போட்டியில் நான் கலந்து கொண்டிருந்தால் இது தான் என் கதையாக இருந்திருக்கும்.. உங்கள் கதைக்கு ஒரு உதாரணம் தான்..

பாட்டி சுட்ட வடை

ஒரு பாட்டி வடை சுடுவதற்காக Reliance super market சென்று உளுத்தம்பருப்பு வாங்கி GST ல் தாறுமாறாக Bill வந்ததை கண்டு கடை ஊழியரிடம் " உனக்கு வைக்கிறேன் பாருடா ஆப்பு " என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றாராம்.. பாட்டி வடை சுடபோகிறாள் என்று தெரிந்துக்கொண்ட காக்கா Uber autoல் பாட்டியை பின்தொடர்ந்து சென்றதாம்.. பாட்டி வடை சுட்ட பின் காக்கா ஒரு வடையை ஆட்டையை போட்டு மரத்தில் சென்று அமர்ந்ததாம், மிகுந்த பசியில் அந்த வழியாக iPhone நோண்டிக்கொண்டே வந்த நரி " ஒன்று வடையை ஆட்டை போடவேண்டும் அல்லது காக்கா வை காலி செய்ய வேண்டும் " என்று தந்திரம் செய்ததாம்..உடனே நரி காக்காவை பார்த்து " பொன்னிநதி பார்க்கனுமே " பாடல் பாட சொன்னதாம். காக்கா நரியை விட தந்திரமாக "உன் mobile ல் Bluetooth on பண்ணு , நான் அனுப்புறேன் , நீயே கேட்டுக்கோ" என்றதாம். ஏமாந்த நரி " சரி நான் உன்னை கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன்.உங்க வீட்டுல வரதட்சணையா வடை கொடுத்தா போதும் என்றதாம். " வடையை தர மறுத்த காக்கா"எதுவா இருந்தாலும் எங்க வீட்டில் வந்து பேசிக்கோ " என்று சொல்லியதாம்..ஏமாற்றம் அடைந்த நரி

" இப்பவே இந்த போடு போடுறா.. இவளை கட்டிக்கிறதுக்கு பேசாம பட்டினி இருக்கலாம்" என்று நரி ஏமாற்றத்துடன் சென்றதாம்...
Moral of the stroy: vadaiku aim pannunga kaaakaaku🍗 aim pannathenga🤣🤣
 

AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
தலைப்புகள் - 1. பாட்டி சுட்ட வடை @Assistantdon @Aadhini

Chennai la oru paati oru restaurant nadathitu vandhanga, adhula spl item Vadai dan... Ellorukume miga pidithadhu Paati kaiyala sutta vadai. Appodhu angu delivery boy ah Oru Kaaka vela seindhutu irundhuchu... Kaaka ku andha vadai na romba uyir aand adhu velai kooda enbadhala dhinasari vaangi thinna mudiyadhunu, adhanalaye eppome andha restaurant laye pickup panna nikkum, adhu mattum illama delivery pannum podhum open panni vadaya thinnidum, dhinamum 2 vadai nu thiruri saptute irundhuchu...

Pugarum Paatiku vara thodangichu, paati ku ore varutham, ivvolo varushama success ah poitu irundha kadai la ippadi thavaru nadakkudhe nu... Appo andha area Inspector aana Nari Mama va kooptu pugar koduthanga, thirutu yaaru panna nu kandupidikka solli... Nari adhuku Paati kitta ketta Lanjam thinasari 5 Vadai enn veetuku anupidanum nu... Paatiko kadai peru kedama irundha podhum nu sammadhichitanga...

Nari kadaya suthi, kada kulla neraya CCTV camera maati vechichu, ovvoru packing mudinjadhum correct ah irukkanu check pannitu, delivery aanadhum call panni crt ah irukka nu kettu vandhuchu... Kaaka 2 naala udal sari illanu kadai pakkam pogala... Nari kum thirudana kandupudikka mudiyala, Paatiya kooptu report pannichu, ulla parcel packing la irundha Eli dan saptrukum, CCTV camera irukkuradhala adhu thirudama irukku... Eliya neenga velai vittu thookidunga nu... Paatiyum Nari pecha kettu Pulla kuttiyana Visvasamana Eliya vela vittu thorathicham...

Marupadiyum Kaaka pickup ku vandhu vadaya sapda thodangicham, adhum Nari veetuku vara vendiya 5 vadai la irundhe 2 vadaya thinnuchu... Nari ku vandha tension la paati mandaya pudichu adichicham... Paatiya adikuradha parthu, eli kudumbame nariya attack panni odambu lam kadichicham... Paatiku therinjichu kalavadunadhu Delivery Boy Kaaka dan nu...

Kaakava visarichadhum dan therinjadhu, kaaka oru anadhai, paati vadai na romba pudikkum, adhoda vazhkaye paati vadai saptu dan vazhndhu irukkunum... Paatiku romba kavalaya poichu, Kaaka ku andha kadailaye velaiku vechi thinamum 5 vadai thanducham paati... Eli ku marupadiyum velai koduthu mannipum kettucham paati... Adhu mattum illama Paati andha area la irukka anadhai pasangaluku dhinamum ilavasamaga vadai koduthu anbu kaatunangalam.

Moral : Irukkuradha Pagirndhu Unnavum... Unakkagavum unn kudumbathirkaga mattume vazhadhe... Samudhayam meedhum akkarai vendum...
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,126
Points
133
Indha kadhaya konjm time selavu panni padinga please!!!😂😂
Kadaisila aprama oru unmaiya solren...:p

அதை விருட்சம் என்றோ, மரம் என்றோ சொல்ல முடியாது. ஒரு தாவரம். அவ்வளவுதான்! பள்ளிக் கட்டடத்துக்கு உட்பட்டது. பஞ்சாயத்து சார்பில் அதற்குக் கிடைத்திருப்பது 1/2’ x 1/2’ சதுர வெட்டுப் பள்ளத்தில், வெள்ளைப் பெயின்ட்டடித்துக் கறுப்பில் எண்.

இதிலிருந்து பத்தடி தள்ளி பாப்பம்மாள் இட்லிக் கடை இருக்கிறது. கடையின் சாமுத்ரிகா லட்சணங்கள்... புகை படிந்த தகரம் - அடுப்புக்குத் தடுப்பாகப் பயன்படுவது - ஓரிரண்டு வாழை இலை, மந்தார இலைச் சுருள்கள், சின்ன பெட்டி போன்ற சமாசாரம், அதனுள் பக்கத் தடுப்பில் சில்லறை நாணயங்கள், மத்தியில் அருள்பாலித்துக்கொண்டு முருகர். மரத்துக்குப் பக்கத்தில் கையலம்புதலின் ஈர அடையாளங்கள்.

மதிய நேரம்... மணி சரியாக ஒன்று; இல்லை, ஒன்று பத்து! காகம் ஒன்று மெல்லியதாய் சீட்டியடித்துக்கொண்டு, டைவடித்துக் கடையினை நெருங்கியது.
பாப்பம்மாள் அதே சமயம் வேறு புறம் திரும்ப, எதிரே ஸ்ரீசூர்ணம் இட்டிருந்தவர், “அம்மா, அந்தால பாருங்க, காக்க” என்றார்.

பாப்பம்மாள் சட்டென்று உஷாராகி, கையில் கிடைத்ததை எடுத்து ஆக்ரோஷத்துடன் ஒரு வீசு வீச, ‘ஷ்ஷ்ஷ்க்க்க்க்’ என்று அந்தக் கல் காற்றைக் கிழித்துக்கொண்டு போய் காக்கையின் மண்டையில் பட்டுத் தாக்க, உள்ளே இலவச வைரங்கள் ஜொலித்தன. மண்டைக்குள் ஜாஜ்வல்யமாக வலித்தது. அந்தக் காகம் மிச்சமிருந்த தன் ரிஃப்ளெக்ஸ் செயல்பாடுகளில் உடம்பை உதறிக்கொண்டு பறந்து போய் ஒரு கிளையில் லேண்ட் ஆக, பாம்மாவுக்கு ஒரு வடை இழப்பு! ஸ்ரீசூர்ணாச்சாரி வாயெல்லாம் சிரித்தார்.

எட்ட இருந்த ஒரு நரி, மௌனமாகக் கிட்டே வந்து நின்று, காக்கையிடம் இன்ஸ்டன்ட் காதல் கொண்டது. அதன் கன்னங்களில், குட்டிப் பருவத்தில் சாப்பிட்ட முயல் மாமிசங்களின் உபயம் தெரிந்தது. தடித்த உதடுகள். புஷ்டியாக வளர்ந்திருந்தது.

“மிஸ் .. ஐ மீன், காக்கா! யு ஆர் ஸோ பியூட்டிஃபுல்! உங்க சாங்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸோ...”

வடையைக் வாயில் கடித்தபடியே சின்னதாகக் கர்ர்ர்ரிட்டது காகம்.

“...எனக்காக நீங்க இப்பவே ஒரு பர்ஃபாமென்ஸ் கொடுக்கணும்.”

நரி வஞ்சத்தில் புகழ, காகத்தின் உணர்வு நரம்புகளில் வேகம் உற்பத்தியாகித் துடிக்க, கீழே நரி வடையை எதிர்பார்த்துக் காத்திருக்க, அலகினைத் திறந்து பாடியது அப்பாவிக் காகம்.

பூமியின் கிரேவிட்டி பவரில் சரசரவென்று கீழே வந்த வடையைக் கப்பென்று பிடித்துக்கொண்டது நரி. தட்சணமே பெரும் ஓட்டமெடுத்து ஓடத் தொடங்கியது. எதிர்ப்பட்ட பாறை மீது தாவிக் குதித்து, விழுந்து கிடந்த மர நீட்டலின் மீது ஓடி, சரிந்து எழுந்து, பக்கத்தில் சரேலென்ற திருப்பத்தில் வளைந்து மறைந்தது.

ம்ஹூம்... இந்த நரிக்கு விமோசனமே கிடையாது!
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,249
Points
133
கோடரியை தொலைச்ச அதே விவசாயி தன் மனைவியுடன் அதே ஆற்றுக்கு ஒரு நாள் போனாராம். திடீர்னு அவரோட மனைவி ஆற்றோடு அடிச்சுட்டு போய்ட்டாங்களாம். இதைப் பார்த்து அலறிய விவசாயி மறுபடியும் தேவதையை கூப்பிட்டாராம்.

தேவதை உடனே ரம்பையை காமிச்சு இது உன்னுடையதான்னு கேட்டுச்சு. விவசாயிக்கு போன முறை நடந்தது ஞாபகம் வந்து 'இல்லை'ன்னு சொன்னாராம். அடுத்து தேவதை மேனகையை காமிச்சு இது உன்னோடதான்னு கேட்டுச்சாம். விவசாயி இப்பவும் இல்லன்னு சொன்னாராம். அடுத்து தேவதை ஊர்வசியை காமிச்சு இது உன்னுடையதான்னு கேட்டுச்சாம். உடனே அந்த விவசாயி இதுவும் இல்லன்னு சொன்னாராம்.

தேவதை விவசாயியோட நேர்மைய பார்த்து ரொம்ப சந்தோஷம் ஆகி அந்த தேவகன்னிகளைப் பார்த்து "அந்த மூன்று ஃபோன்களையும் விவசாயியிடம் கொடுங்கங்கன்னு" சொல்லுச்சாம். குழப்பமான அந்த விவாசாயி "அந்த மூணு பொண்ணுங்களை என் கூட அனுப்புவீங்கன்னு பார்த்தா எதுக்கு ஃபோன் கொடுக்குறீங்க"ன்னு கேட்டாராம்.

அதுக்கு தேவதை "ஆற்றில் விழுந்த உன் மனைவி எப்பவோ கரையேறிட்டாங்க. அவங்க விட்ட ஃபோன தான் நீ கேக்குறன்னு லேட்டஸ்ட் மாடல் ஃபோன்லாம் காமிச்சுட்டு இருந்தேன். நீ எதை பார்த்துட்டு இருந்த?"ன்னு கேட்டுட்டு, முன்னாடி கொடுத்த கோடாரியையும் சேர்த்து புடுங்கிட்டு போயிருச்சாம்.

Moral of the story: Pay attention to details
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,824
Points
153
Location
India
தாகம் தீர்த்த காகம்..

ஸ்ரீரங்கத்தில் , சென்யோரீட்டா என்றொரு அழகான காகம் இருந்ததாம்.. இது ஒரு Instagram celebrity என்பது கூடுதல் குறிப்பு..

2.10.2022 நண்பகலில் Instagram-ற்காக Believer song ai, மாடிப்படியில் ஆடி ஆடி record செய்தது.. சரியாக வரவில்லை என்று மீண்டும் மீண்டும் செய்யவே நேரமும் ஆனது அதற்கு தாகமும் எடுத்தது..

தண்ணீர் எங்கே என்று தேடிய அக்கணம், ஒரு கண்ணாடி ஜாடியை பார்த்தது, ஆனால் தண்ணீர் கீழே இருந்தது.. பக்கத்தில் கற்களும் இருந்ததும், ஆனால் அதை கொஞ்சமும் சட்டை செய்யாத நம்ம சோம்பேறி சென்யோரீட்டா ஓடிச்சென்று பிளாஸ்டிக் bottle தண்ணீரை மடக் மடக் கென்று குடித்தது, தாகமும் தீர்ந்தது,

ஆனால் என்ன நெஞ்செல்லாம் ஒரே எரிச்சலா இருக்கு என்று வடிவேல் போல புலம்பியது,

அப்போது தான் அந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த வாசகத்தை கவனித்தது , expiry date : 1:10:2022, என்று இருந்தது..

ஐய்யோ போச்சே போச்சே தண்ணீக்கெல்லாமா டா expiry date வைப்பிங்க.. பாட்டில் பல பலனு இருக்குனு நம்பி குடிச்சு ஏமாந்துட்டேனே!! ஒரு நாள் காலாவதி க்கே விஷமா?!

உடனே Instagram account ai open செய்து live ஆரம்பித்தது..

My dear அன்பான followers, நான் செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள் ஏனெனில்
பிளாஸ்டிக் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று கூறி உயிரை விட்டது..

Moral: ஐந்து அடி நடந்து/ பறந்து சென்று இருந்தால், ஒடும் காவேரியில் அருமையாக நீர் குடித்து இருக்கலாம் (அல்லது) கல்லை போட்ருந்தா ஜாடித்தண்ணி யாச்சும் கடைச்சிருக்கும்..

பிளாஸ்டிக் ஐ தவிருங்கள்
இல்லனா நாமளும் ஃப்யூச்சரில் last live போகவேண்டி இருக்கும்..


பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டது எல்லாம் அமிர்தமும் இல்லை, அடைக்கப்படாதது நஞ்சும் அல்ல..
 
Last edited:

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
விவசாயின் தங்ககோடாரி
-------------------------------------

நீடு(விறகு வெட்டும் விவசாயி) என்ற வயசான வாலிபர்.அவனோ சோம்பேறி .எப்பவும் Mob கையுமாக தான்.இருப்பான்.Facebook,lnstagram,Youtube னு இப்படியே Time spend பண்ணுவான்.

ஒருநாள் அவனுக்கு Recharge பண்ண காசு இல்லாத காரணத்தால் விறகு வெட்ட காட்டிற்கு சென்றான்.அங்கேயும்போய் வேலை செய்யாமல் Chat செய்துகொண்டிருந்தான்.அப்போதுஅந்த வழியாக வந்த திருடன் கோடாரியை திருடி சென்றுவிட்டான்.திருடன் வந்து போனது கூட தெரியாமல் Online la யே மூழ்கி கிடந்தான்.இருட்டாக ஆரம்பித்ததும் தான் கோடாரியை காணவில்லை என்று தேடினான்.சுற்றிலும் இருட்டு.என்ன செய்வதென்று தெரியாமல் அழுதான் புலம்பினான்.அப்போது அங்கு ஒரு தேவதை தோன்றி Needu ஏன் அழுகிறாய் என்று கேட்டது என் கோடாரியை காணவில்லை என்று சொன்னான்.

உடனே தேவதை தன்னூடைய Gpay யை கொடுத்து இதை வைத்து புதுகோடாரி வாங்கிக்கொள் என்றது.இல்லை என் கோடாரி தான் வேண்டும் என்றான்.

மறுபடியும் தேவதை இந்தா Meesho App இதை வைத்து Online ல் ஆர்டர் பண்ணி புது கோடாரி வாங்கிக் கொள் என்றது.இல்லை என் கோடாரி தான் வேண்டும் என்றான்.

சரி Needu நீ வீட்டிற்கு செல்.நீ வீட்டிற்கு போவதற்குள் உன் கோடாரி வந்து சேரும் என்றது தேவதை. வீட்டிற்கு போன Needu க்கு Online ல் வந்திருந்த பெரிய box காத்திருந்தது.இதை பார்த்த Needu (விவசாயி)க்கு ஆச்சரியம் தாங்கல பிரித்துப்பார்த்தான்.அதில் அவனுடைய கோடாரியும்,தங்க கோடாரியும் இருந்தது.இது- அவனோட நேர்மைக்கும் சோம்பேறித்தனத்துக்கும் கிடைத்த பரிசு.


கருத்து -௭ந்த காரியம் செய்தாலும் அதை நேர்மையாக செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

😂😂Need oru nal vivasayi ya act panninathuku nandri🙏🙏
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,272
Points
20
ஒரு பிரபல தனியார் நிறுவனத்தின் சந்திப்பு அறை அது. தலைமை நிர்வாக அதிகாரி (தல) மிகவும் ஆவேசமாக இருந்தார். கடந்த மாத லாபத்தில் ஒரு சதவிகிதம் குறைந்து இருந்தது. அந்த நிறுவனத்தின் நான்கு துறை தலைவர்களும் அங்கு இருந்தனர். அவர்கள் உற்பத்தி துறை(Production) தலைவர், தர கட்டுப்பாடு துறை (Quality Control) தலைவர், நிதி துறை (Finance) தலைவர் மற்றும் விற்பனை துறை (Sales) தலைவர் ஆவர்.

தல, தனக்கு இருந்த கோபத்தில் நால்வரையும் கடுமையாக சாடினார். லாபம் அதிகரிக்கவில்லை என்றால் இவர்களை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்று எச்சரித்தார். இதை விரும்பாத நால்வரும், தலைக்கு எதிராக ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி அவரவர் துறையில் மோசமாக செயல்பட்டு, லாபத்தை கணிசமாக குறைத்து, தங்களது பலத்தை காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தனர். நால்வரும் ஒற்றுமையாக இருந்து, தலைக்கு பாடம் கற்பிக்க தீர்மானித்தனர்.

அந்த மாதம் வேண்டும் என்றே உற்பத்தி பல மடங்கு அதிகரித்து, தர கட்டுப்பாடு விதிகள் தாழ்த்த பட்டன. நிதி ஒதுக்கீட்டில் பல குளறுபடி, விற்பனை முடக்கப்பட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அடுத்து மூன்று மாதங்களும் இந்த நிலை தொடர்ந்தது. தல முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

மீண்டும் அதே சந்திப்பு அறை. தல மிகவும் சோர்ந்து காணப்பட்டார். நால்வரும் அதை கண்டு அகம் மகிழ்ந்தனர். இனி இவர் நம்மிடம் மதிப்புடன் நடந்து கொள்வார், நாமும் பணியை சரியாக செய்வோம் என்று எண்ணி கொண்டு இருந்த வேளையில், தல தனது மௌனத்தை உடைத்தார்.

எவ்வளவு முயற்சி செய்தும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை, நால்வரையும் 'பணி நீக்கம்' செய்ய சொல்லி தனக்கு கட்டளை வந்து இருப்பதை தெரிவித்தார். அதிர்ச்சியில் நால்வருக்கும் கடல் அலைகளும் புறாக்களும் உறைந்தது.


புதிய தலைவர்களை கொண்டு அடுத்த 6 மாதத்தில், பல மடங்கு லாபத்தை அதிகரித்தார் தல.

Moral of the Story:

எண்ணம் போல வாழ்க்கை, வாய்மையே வெல்லும், கடமை செய் பலனை எதிர்பாராதே என்ற பல கருத்துக்கள் இதனுள் இருந்தாலும், நான் சொல்லிகொள்ள விரும்புவது என்னவென்றால்,

"தல, தல தான்"😎
 
Status
Not open for further replies.
Top