What's new

Don - கதைகள்

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
1. டீ டம்ளர்

அன்றாடம் நாம் சொல்லும் சொல்- "நான் சம்பாதிக்கும் பணம் பத்தவில்லை.எங்கே செல்கிறது."

இது என் கதை - நடந்த ஆண்டு 2018-2019 காலகட்டத்தில். நான் எதிர்பார்த்த ஊதியம் விட குறைவாகவே வெளிநாட்டில் ஒரு இடத்தில் பணிபுரிகிறேன்.அதிக வேலை, அதிகமாக overtime கிடைக்கும். இருந்தும் எனக்கு பணம் போதவில்லை. ஆகையால் கம்பெனி materials வாங்க செல்லும் பொழுது எனக்கு commission என்ற பெயரில் நிறைவான பணம் கிடைத்தது. சந்தோஷம் தலையின் உச்சியின் மேல் தலைவிரித்து ஆடியது.ஆகையால் வேறு வழியில் கிடைக்கும் பணம் எல்லாம் வீட்டிற்கு அனுப்பி விடுவேன்.
எவ்வளவு முறை பதவி உயர்வு கேட்டும் கிடைக்கவில்லை.

ஆனால் வீட்டிலோ பணம் பத்தவில்லை, பத்தவில்லை என்று அழைப்புகள் வந்துக்கொண்டே இருக்கும். நானும் மாதந்தோறும் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகவே அனுப்புகிறேன் இன்னும் பத்தவில்லை என்றால் நான் என்ன செய்வது என்று திட்டவட்டமாக திட்டிக்கொண்டே இருப்பேன். ஒரு sports cycle வாங்க வேண்டும் என்ற ஆசை. இவ்வளவு பணம் வந்தும் வாங்க முடியவில்லை என்ற ஆதங்கம். அடிக்கடி உடல் நிலை சரியில்லை, நிலத்தின் செலவு, அந்த செலவு இந்த செலவு என்று வங்கி இருப்பில் ஒன்றும் இருந்ததில்லை.

ஒருநாள் தமிழ்நாட்டை சேர்ந்த பெரியவர், (பெயர் - சுப்பிரமணியம்) ஒருவர் தினமும் சாலையை கூட்டிக்கொண்டே இருப்பார். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு வயதான துப்பரவு தொழிலாளர்.வெளிநாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் என்றால் பிணைப்பு வரும். எனக்கும் அவருக்கும் ஒரு நட்பு இருந்தது. தினமும் வேலை செல்லும் நேரத்தில் நானும் அவரும் ஒரு டீ குடித்துவிட்டு 5 நிமிடம் பேசிவிட்டு செல்வோம்.

அன்று ஒருநாள் என்னை அழைத்துச் செல்லும் பேருந்து வரவில்லை. டீ குடித்துவிட்டு பார்த்தால் அவர் ஒரு இடத்தில் நிழலில் அமர்ந்திருந்தார்.அவர் அருகில் அமர்ந்து " என்ன சோகம் தெரிகிறது. என்ன ஆச்சு பெரியவரே ? " என்றேன்.

"ஒன்னும் இல்லப்பா, மனசு நிம்மதியாக இருக்கு, என்றார். என்ன பெரியவரே நிம்மதியாக இருக்கு சொல்லிவிட்டு சோகமாக இருக்கீங்க " என்று கேட்க எங்கள் உரையாடல் நீண்டது.

'கொளுத்தும் வெயிலில் இவ்வளவு வேலை செய்றீங்க. எவ்வளவு சம்பளம் வரும் ? என்று என் கேள்வி. "எனக்கு உன்னை மாதிரி engineer வேலை இல்லை. கூட்டி பெருக்கற வேலைதான். என்ன சம்பளம் வந்துடும். அதுவும் மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி ஒரு மாச சம்பளம் வரும் " என்றார்.
," ஓ.. சம்பளம் வரலனு சோகமா? நான் வேண பணம் தரட்டுமா? " என்றேன்.

"அட நீ வேற ஏன்பா? 27 வருஷம் ஆச்சு, பெரியவன் டாக்டர் படிப்ப முடிச்சிட்டான். சின்னவன் எப்போ engineer முடிப்பான்?. இன்னும் எத்தனை வருஷம் குப்பை அள்ளனும் தெரியல,அவனுக்காக. இது வரைக்கும் அடுத்தவன் காசுக்காக ஆசை பட்டதில்லை. கடனும் இல்லை. இவன் படிப்பை முடிக்க கடன் வாங்கிட்டா அது அடைக்கும் வரை நான் இருப்பேனா.. தெரியல.. என் வியர்வை தாண்டி ஒரு ஆள்கிட்ட கூட பணம் வாங்குறது இல்லை " என்றார்.
செருப்பால் அடித்தது போல் இருந்தது.

அடுத்த கேள்வி., " அப்புறம் எப்படி மன நிம்மதி ? "..

"மூத்தவன் டாக்டர் ஆயிட்டான். பொண்ணுக்கு கல்யாணம் ஆகி பேரன் பேத்தி இருக்காங்க. அது நிம்மதியா இருக்கு. சின்னவன் மட்டும் முடிச்சிட்டா போதும் . அவன் முடிச்சுடுவான். என் கல்யாணம் அப்போ என் பொண்டாட்டி மோதிரம் கேட்டா, அது மட்டும் வாங்கிட்டா போதும். நிம்மதியா இருக்கு., ஊருக்கு கிளம்பிடுவேன். என் வயசு வரப்போ உனக்கு புரியும் போடா" என்றார்.

பேருந்து வரவில்லை. ஆகையால் அவரிடம் பேசிவிட்டு அறைக்கு கிளம்பினேன். " பேசாமல் வியர்வை தாண்டி வரும் தேவையில்லாத பணத்தை நிறுத்திவிடுவோம் .. நிம்மதியா இருப்போமா பார்ப்போம் என்று முடிவெடுத்தேன்..

நிறுத்தினேன். சிறிது நாட்களில் bike வாங்கினேன். சில வருடத்தில் கார் வாங்கினேன். கடன்கள் இல்லை. வங்கி இருப்பில் பணம்சேர ஆரம்பித்தது. வீட்டில் செலவுகள் தானாக குறைந்தது. பதவி உயர்வு தேடி வந்தது. நிம்மதி மற்றும் சந்தோஷமாக வாழ்கிறேன்..


வாழ்வியலை மாற்ற பணத்தின் மதிப்பை தெரிந்துகொள்ள பல சுப்பிரமணியம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்றும் அந்த சுப்பிரமணியத்தை கால் தொட்டு வணங்க தேடுகிறேன். கிடைக்கவில்லை. கிடைத்தால் சொல்லுங்கள். அந்த டீ டம்ளர் அவருக்காக காத்துக்கொண்டிருக்கிறது

tea-cup-village-shop-background-260nw-1433525450.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
2. இரு உறவுகளுடன் ஒரு காதல்

இதுவும் ஓர் உண்மை சம்பவம். என் தாத்தா(அம்மாவின் அப்பா) வசதி படைத்தாலும் எளிமையானவர்.வீட்டில் கார்கள் இருந்தாலும் Tvs-50 என்ற வண்டி தான் அவரின் வானூர்தி.ஊரில் உள்ள ஏரியில் தான் தினமும் குளிப்பார். அவருக்கு மாடுகள் வளர்ப்பது என்றால் கொள்ளை பிரியம். ஆங்கிலத்தை கை ஆளுவதில் கெட்டிக்காரர்.
ஊரில் செல்வாக்கு இருக்கும் நபர் என்பதால் தனி மரியாதை உண்டு. ஊரில் செல்வாக்கு இருந்தாலும் வீட்டில் அவருக்கு செல்வாக்கு இல்லை. பாட்டி தினசரி திட்டிக்கொண்டே இருப்பார்.அவர் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை, பதிலுக்கு சத்தம் போட்டு பார்த்ததுமில்லை. அவர் ஆறு மாடுகள் வளர்த்து வந்தார்.

என் தாத்தாவும் மாடுகளும் பாட்டியிடம் திட்டு வாங்காத நாட்கள் இல்லை. Tvs-50ல் அரைகிலோமீட்டர் அப்பால் வந்ததாலும் அந்த வண்டியின் சத்தம் கேட்டு "அம்மா" என்று மாடுகள் அழைக்க ஆரம்பித்துவிடும். வண்டியை நிறுத்தி விட்டு வீட்டினுள் வராமல் "உங்களுக்கு யாரும் வைக்கோல் வைத்திருக்கமாட்டார்கள்.தண்ணீர் வைக்க மாட்டார்கள். நான் இல்லை என்றால் செத்துவிடுவீர்கள்"என்று திட்டிக்கொண்டே மாடுகளை முதலில் கவனித்துவிட்டு தான் வீட்டினுள் வருவார்.வீட்டில் நுழைந்ததும் பாட்டி "உங்கள் பேர பிள்ளைகளை பார்த்து வந்தீரா ? என்று பாட்டி நக்கல் அடிப்பார்.தினசரி கேட்பதால் எங்களுக்கு பழகிவிட்டது.

ஒருநாள் கழிவறையில் வழுக்கி விழுந்த தாத்தா இரண்டு ஆண்டுகள் படுக்கையில் படுத்து நாட்களை எண்ணும் நாட்கள் வந்துவிட்டது. மாடுகளை தோட்டக்காரர் பார்த்துக்கொண்டார்.இருதயம் ஓய்வெடுக்கவே அவர் இயற்கை எய்தினார்.

பாட்டி நொறுங்கினார் . "அந்த மனுஷன் படுக்கையில் படுத்திருந்தாலே போதும் அவரை பார்த்து என் நாட்கள் சென்றிருக்கும். நான் எவ்வளவோ திட்டி இருந்தாலும் அந்த மனுஷன் மேல் எனக்கு தனிபிரியம் உண்டு. அவர் மூச்சு விட்ட இடத்தில்தான் நான் உறங்குவேன் " என்று இன்றும் என் பாட்டி தாத்தா உயிர் விட்ட இடத்தில்தான் உறங்குகிறார். அவர்களின் தாம்பத்யம் மற்றும் ஒரு காதல் அழகாக புரிந்தது.

"நான் இல்லை என்றால் நீங்கள் செத்துவிடுவீர்கள் !" என்று அவர் விளையாட்டாய் கூறவில்லை. அவர் இறந்த மூன்றாம் நாளில் இரு மாடுகள் உயிர் விட்டன. அந்த ஒரு காதலும் அழகாக புரிந்தது..

அவர் நிலைநாட்டி சென்ற நினைவுகளும் நிறுத்திவிட்டு சென்ற TVS-50யும் தலை தொங்கியபடி நிற்கின்றன..

6_original_file_I1.jpg
 
Top