What's new

Don - கவிதை கிறுக்கல்கள்

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
1.மழைக்காதல்

மாலை நேர சாலையில்
மான் ஒன்று வந்தது தூரலில்..
மாலை நேரத்து மயக்கமா?

இல்லை என் காதல் சொல்ல தயக்கமா?

சாரல் காற்று வீசுதே..
மடி சாய்ந்திட மனம் ஒன்று ஏங்குதே..
மேகம் எல்லாம் பார்க்குதே..
மேலும் மேலும் ஏங்குதே!!!

நீரில் மிதக்கும் நிலா போல..
நீயும் வந்தால் நித்தமே..
சத்தம் போடும் இடி எல்லாம்
சங்கீதம் வாசிக்க செல்லுமே...

காற்றில் பறந்த மழைத்துளிகள்..
காகிதம் போல் உன் கன்னத்தில் ஒட்டியதே
காதில் மிதக்கும் கம்மல்கள்..
காற்றின் இசையில் ஆடியதே...

பின்னால் செல்லும் மேகங்களே..
பிறை ஒன்று வருவது தெரிகிறதா?
பிழைகள் இல்லை என் காதலில்...
பிறந்தேன் உனக்காக புரிகிறதா?


இறைவா இன்றே ஆணை இடு..
இதழ்களால் சொல்ல வேண்டும் என்று..
இத்தனை வலிகள் இருந்தாலும்
இன்பத்தை தேடி அலைகின்றதே ..

இதயம் ஒன்று இருக்கின்றதே..
இறுதிநாள் வரை காத்திருக்கின்றதே..
இன்னிசை பாடிடும் இசை ஒன்று..
இல்லை என்றால் உயிர் துறக்கின்றதே.

360_F_158061743_3H8QXR4VffbsBYtoqt0vSDMDSxJ8JxkD.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
2. ஏற்றுக்கொள்

அடைக்காக்கும் கோழிகளுக்கும்
அன்பான தாய்மை உண்டு..
அனாதையாக நிற்கும் பிள்ளைகளுக்கும்,
அனுபவம் தருகின்ற வலிகள் உண்டு..

எத்தனை ஏமாற்றம் இருந்தாலும்
ஏற்றுக் கொள்ளும் மனங்கள் உண்டு..

ஏர் பிடித்து வாழும் ஏழைக்கும்
ஏற்றம் வரும் என்ற எண்ணம் உண்டு..
வாடி போன வயல்கள் எல்லாம்
வானம் பார்த்த பூமியில் வாழ்வதுண்டு..

வாழ்வை வெறுத்த மனிதர்களும்
வாழ நினைத்து ரசிப்பதுண்டு..

ஒருநாள் வாழ்க்கை என்று தெரிந்துமே
ஈசல்கள் ஒன்றாய் வட்டம் அடிப்பதுண்டு..

ஓட்டை விழுந்த ஓடங்களும்
ஓவியமாய் ஓடையில் ஓடுவதுண்டு..

தவறுகள் செய்து வந்தாலும்
தலைமுறை காக்கும் பிள்ளைகள் உண்டு
தண்ணீரில் வாழும் தவளைக்கும்..
தாமரை இலை மேல் காதல் உண்டு..

தடைகள் சில பல வந்தாலும்
தண்ணீரை சுமக்கின்ற நத்தை உண்டு..

தன்னுரிமை என்று வாழ்ந்தாலும்
தாழம்பூவிற்கும் வாசமுண்டு...


எத்தனை முறை விழுந்தாலும்,
எழுந்தால் எதிர்ப்புகள் தொலையுமென்று,
ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால்

ஏக இறைவனின் அருளும் உண்டு...

motivational_quote_mindset_mentor_coach_teachers_square_sticker-r87dc154789ec4996ab53adb8545d4...jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
3. Chat காதலில்
Chat ஒன்று இருந்தம்மா..
சீட்டுக்கட்டு போல் users இருந்தார்களம்மா..
சின்ன சின்ன emoji னாலே
சிரிக்க வைத்து மனதை பறிப்பானம்மா..

உலகமே நீதான் என்று சொல்வானம்மா..
உள்ளுக்குள்ளே private ல் இருப்பானம்மா..
உள்ளே இருப்பது தெரியாதம்மா..
உயிரே நீ தான்னு உருட்டுவானம்மா..

Parking போட்டு படுத்திருப்பானம்மா..
பாதியிலே உறங்கிவிட்டேன் என்பானம்மா..
பச்சமண்ணு உழைச்சு படுத்துச்சுண்ணு
பாவி மவ நம்பி செல்வாளம்மா..

உறங்காத கண்ணு ரெண்டும்
உண்ண நம்பவைச்சு வழி அனுப்புமம்மா..
நம்பி நீயும் போனபோது
நம்பர் கேட்டு வேற இடம் செல்வானம்மா..

Guest ID ல் சுத்துவானம்மா...
கெட்டியாக உன்ன பிடிப்பானம்மா..
கெட்டிமேளம் கொட்டப்போகதுன்னு
கெட்டுப்போன பெண்கள் இருக்குதம்மா..

அஞ்சு மணிக்கு சுட்ட வடை எல்லாம்
ஆறு மணிக்கு ஆறிடுதம்மா..
சுட்ட வடையில் சூடான வடை
எனக்கு யாருமில்லை என்ற வடைதாம்மா...

உண்மை தெரிஞ்சதுமே..
உறவுகள் அங்கே உடைஞ்சதம்மா..
உன்னை விட்டு போனதும்மே
உலகமே ஒரு மாயை என்று நடிப்பானம்மா..

Chat இனி வரமாட்டேன்னு
செய்திகள் இங்கே பரப்புவானம்மா...
செய்தி கேட்டு ரெண்டு பேர்
சேத்துல போய் விழுவாங்களம்மா..

வேலை எல்லாம் முடிஞ்சதுமே
வேற chatக்கு செல்வானம்மா..
Virtual chat னு சொல்லி சொல்லி

வேற பொண்ணுக்கு line அடிப்பானம்மா..

Chat காதல் வேண்டாமம்மா..
Chatலே வாழ்க்கை முடிஞ்சுடும்மா..
Admins எல்லாம் பாவம்மம்மா...
அதையும் நீயும் புரிஞ்சிக்கம்மா..



(யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.. அப்படி புண்படுத்திருந்தால் அவன் தான் வேற chat போனவன்🤣🤣🤣)

cute-love-chat-message-with-hearts-design_1017-29696.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
4. மருமகள்


வாழ்க்கை ஒன்று வாழ்ந்திட
வாசப்படி ஏறும் வெண்ணிலா..
வாழ்ந்த வீடு வசந்தம் எல்லாம்
வாழ்க்கைத்துணை வீட்டில் கிடைக்குமா "

பெற்ற அன்பு பிள்ளையாய்.
பெத்த மனம் பதறிடுமா..
கை பிடித்து கொடுத்துவிட்டு
கை கழுவுதல் நியாயம் ஆகுமா?

நாலடி சுவர்க்குள்ளே,
நாத்தைக்கு பங்கு வேண்டுமாம்..
நாள் பார்த்து வந்திடுமாம்..
நாகப்பாம்பு விஷம் தெளித்துடுமாம்.

அன்னைக்கு அன்பு பிள்ளையாய்
அன்பான கணவனம்மா..
அத்தனையும் ஏற்றுக்கொள்,
அதுதான் உன் விதி என்பானம்மா..

பிள்ளைப்பேறு காலம் வரும்.
பிறந்திட வீடு செல்லும் ஏங்கும் மனம்..

செல்லாத காசாக ,
செல்லரிச்சு போய்டுதம்மா...

ஆசையோடு வந்த வீட்டில்
ஆலமரம் ஊஞ்சல் ஆடுதம்மா..
ஆடி மாசம் முடிஞ்சதுமே
ஆட்டுக்குட்டி ஆசை அடங்குதம்மா..

ஆண்டுக்கு ஒருமுறைதான்..
அன்னை வீட்டு சோறம்மா..
சோலைக்காட்டு பொம்மை ஒன்று
சொல்லாமலே போனதம்மா...

தாய்வீடு சென்றுவிட்டால்..
தா
மதமாக வந்துவிட்டால்..
தாங்காத கேள்வியும்மா..
தாலிக்கும் தண்டனை தருமம்மா.

படிச்ச படிப்பெல்லாம்
பாழாகி போனதம்மா..
பச்சரிசி பொங்குதம்மா..
சியில பயிர் கருகுதம்மா..

ஆக்கி வச்ச சோத்துலதான்..
ஆயிரம் குறை சொல்லுமம்மா...
சொந்தங்கள் என்று பார்க்காம
சொடுக்கு போட்டு சொல்லுதம்மா..

பெத்த மனம் ஊமையம்மா..
பெத்த பிள்ளைக்காக வாழுதம்மா..
க்கி வைச்ச சோறும் இங்கே
ரைவயிறு செல்ல மறுக்குதம்மா..

கண்ணீர் விட்டு கதற இங்கே,
கண் தண்ணீருக்கும் பஞ்சமம்மா.
கண்டாங்கி சேலை எல்லாம்
கண்ணீரிலே கரையுதம்மா..

பொண்ணாக பொறந்ததாலே
தொப்புள்கொடி இங்கு மாறிடுமா?
பொத்தி வைச்ச பொறுமை எல்லாம்,

பொழுதுபோக்கா போனதம்மா...

ஊருக்கு ஓரமா...
ஒத்த ரோஜா பூத்ததும்மா..
ஒத்தையா பூத்ததாலே...
ஒத்துழைப்பு இல்லாம நிக்குதம்மா..


என் வீட்டு மருமகள்தான்
என்னோட மகள் என்பார்களம்மா..
நம்பி நானும் போனேம்மா...

நடுபாதை வழி அழிந்ததம்மா...


கடந்த கால கதையிலதான்..
கள்ளிப்பாலால் கொன்னாங்களம்மா...
காரணம் இப்போ தெரிந்ததம்மா...

ஷ்டப்படுவ என்று கொன்னாங்களம்மா...

images.jpeg

 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
5.கவிதைக்கு உயிர் வந்ததே

அதே வானம்...
அசையும் மேகம்...
அலைகள் ஓடும்...
அவைகள் யாவும்...
அடுக்கி வைக்க
என் கவிதைக்கு உயிர் வந்ததே..

தூர நிலவும்..
தூவும் மேகமும்..
தூய காற்றும்..
துளிர் விட்ட மழையும்..
துளசி செடியும்...
துவக்க வேண்டும் என
என் கவிதைக்கு உயிர் வந்ததே..

அருவி வீழ்ச்சியும்,
அருகில் வரவும்..
அத்தனை அழகும்
அள்ளிக் கொடுத்த...
அன்னை பூமியும்..
அளவிலான அற்புதம் பாட
என் கவிதைக்கு உயிர் வந்ததே...

இருக்கும் மனமும்..
இரக்க குணமும்..
இசையும் இணையும்..
இன்ப ராகமும்..
இவை அனைத்தும் பாட
என் கவிதைக்கு உயிர் வந்ததே...


நிலமும் நீரும்..
நிலவின் அழகும்..
நிழல்களின் மரமும்..
நினைத்து ரசித்தும்..
நிமிடம் முழுதும்...
நிம்மதி தேடும்...
நிலை என நிகழ்ந்தும்..
நினைவில் நின்றும்...
நிஜத்தில் வாழும்..
நீ
யும் நானும்...
நீண்ட தூரம்..
நீந்தி செல்ல...
என் கவிதைக்கு உயிர் வந்ததே...
13109771_18-short-love-quotes-to-get-inspired-from_31bc7c8a_m.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
6. பிள்ளை நிலா

ஆலமர விழுதிலே...
ஆனந்தமாய் ஊஞ்சல் ஆடினோம்.
ஆகாயத்தில் சத்தம் கேட்டதும்,
அண்ணார்ந்து கையை ஆட்டினோம்..

பாலில் இல்லை கலப்படம்..
பருகி விட்டு ஓடினோம்..
பட்டுபூச்சி பார்த்ததும்..
பதுங்கி அதையும் தேடினோம்...

ஆற்றின் மணலில் குடிசைக்கட்டி..
அதிலே குடியும் ஏறுவோம்...
ஆழம் ஒன்றை தோண்டி விட்டு..
அதிலே கால்களை மறைத்திடுவோம்..

வட்டமான தட்டெடுத்து...
வட்ட நிலவை அதில் வைத்து..
நிலாச்சோறு சாப்பிடுவோம்..
நிம்மதியாக உறங்கிடுவோம்...

காவல் சேவல் எழுப்பியதும்...
காலை சூரியனுக்கு வணக்கம் செலுத்திடுவோம் ...
வாசலில் உள்ள கோலத்தினை..
வட்டம் அடித்து கலைத்திடுவோம்...

சைக்கிள் என்றால் உயிர் என்போம்..
சைக்கிள் டயரில் ஊரை சுற்றி வந்தோம்...
சைகைகளை காட்டிக்கொண்டு
சந்தில் வேகத்தில் பறந்திடுவோம்...

கிணற்று நீரில் மிதந்து வந்தோம்..
கிணற்று தவளையை பிடித்து வந்தோம்..
கிளிகள் பல வளர்த்து வருவோம்...
கிழிந்த சட்டையில் வீடு வந்தோம்..

மயில் குட்டி போடும் என்று..
மயிலின் தோகை சேர்த்து வைப்போம்..
மதிய உணவு வேலையிலே...
மறைத்து அதையும் பார்த்திடுவோம்...

கண்ணாமூச்சி ஆட்டத்திலே..
கட்டிலுக்கு அடியில் மறைந்திடுவோம்...
காட்டிக்கொடுக்க ஒருவன் உண்டு...

கட்ட பஞ்சாயத்து நடத்திடுவோம்...

அம்மா தந்த உருண்டைப்பிடி சோற்றில்
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்..
அப்பா தந்த அறிவுரைதான்
ஆசிர்வாதம் என ஏற்றுக்கொள்வோம்..


பிள்ளை நிலாக்கள் வளர்ந்துவிட்டோம்...
பிரிந்து சென்று தேசம் கடந்து விட்டோம்...
பிணைய கைதிகளாய் வாழ்ந்துக்கொண்டு,

இணைய இணைப்பில் பகிர்ந்துக் கொண்டோம்...

தேவைக்காக ஓடிவிட்டோம்..

தேவதைகளை மணந்து விட்டோம்...
தேடி தேடி சேர்த்து வைத்த

தேன் கூட்டினை கலைத்துவிட்டோம்....
51723cdbc7c60fe27e8016d6db5d3097.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
7.அழகான முதல் வரியில்


உனக்கென ஒரு கவிதை..

உடனுக்குடன் எழுதும் கவிதை..
உவமைகள் தேவையில்லை..
உண்மை பேசும் ஓர் கவிதை..

கலை ஒன்றில் பூத்த பூ ஒன்று ..
கவிதை ஒன்று கேட்டதம்மா..
கவிதையில் காதலும் இல்லை..
காதல் விட இது பெரியதம்மா..

அழகான மூன்று நாட்கள்..
அள்ள அள்ள குறையாதம்மா..
அளவோடு பேசினாலும்..

அந்த மனதும் இங்கு உண்மையம்மா..

பாரத்த உலகில்

பாலும் விஷம் என்று..
பார்த்து பார்த்து வளர்ந்தம்மா..
பாவை அவள் மனதில் மட்டும்
பாசம் எனக்கு தெரிந்ததம்மா..

அன்பான ஒர் மனதில்..
அழகான ஒர் வீட்டில் ..
அதிகாரம் இல்லையம்மா..

அளவோடு அன்புடன் நான் வாழ்வேனம்மா...
4b1afb91ee5dd6265bba4afd0bac0814.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
8. கலங்கிய கட்டில்

ஐப்பசி மாதம் வந்தாலே,

ஐம்புலனும் கதறிடுதே..
ஐந்து வயது பிள்ளை முதல்
ஐயா தியாகங்கள் வந்திடுதே..

திட்டிய வார்த்தை எல்லாம்
தீர்த்தமாய் இன்று தெரிகிறதே..
அடித்த அடிகள் எல்லாம்
அன்பின் வலியை தேடுகிறதே..

அன்பின் பிள்ளை பட்டினி என்றால்,
அடுத்த நொடி பசி போக்குவாயே..
அயல் நாட்டில் இருந்துக்கொண்டு
அனுபவத்தை நீ பகிர்வாயே..

புற்றிலே நீ படுத்தாய்.
காற்றினிலே கரைந்துவிட்டாய்..
பட்ட மரம் பூ பூக்குமா?
பூத்து விட்டு உதிர்ந்துடுமா?

உன்னை சுமந்து சென்ற நொடிகள்.,
மழைத்துளிகளும் கதறியதே..
கண்ணீரும்தான் கலந்து சென்று
கலங்கரை தேடி ஓடியதே..

காணாத கண்கள் கோடி
கவலையில் அன்று கருகியதே..
கட்டிலுக்கும் காதல் உண்டு..
கட்டி அணைத்து உன்னை தாங்கியதே..

தகப்பனின் தவிப்பு என்ன?
தத்தளிக்கும் பிள்ளை சொல்லிடுமே..
தாயின் தவிப்பு என்ன?
தாலிக்கொடிதான் சொல்லிடுமா?

நீ தந்த அனுபவமே,
நிலையாய் நானும் நிற்பேனே..
நீ இங்கு இல்லை என்று
பல நொடிகள் தவிப்பேனே..


சொல்ல சொல்ல வலிக்கிறதே..
சோர்வாகி போகிறதே..
சொர்க்கத்தில் சேர்ந்துவிட்டு
சொப்பனத்தில் வந்து சொல்வாயா?

எல்லாருக்கும் வரும் என்று,
ஏற்றுக்கொள்ளும் மனமும் உண்டு..
அருகிலே நிகழும் போது,

அரைமனமும் ஏதோ தேடுகிறதே..

92355973.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
9. ஏற்றுக்கொள்ளும் இந்த மனமே

தேன் கட்டிய கூட்டில் இங்கு
தேள் வந்து குடியேறினால்,
இரண்டும் கொத்திவிட்டால்

சுவை எதில் உண்டு? விஷம் எதில் உண்டு ?என தெரிந்திடுமா?..

தண்ணீரில் செடியை நட்டு,

நீ வளர்த்தால் பூக்கள் பூத்திடுமா?
மண்ணுக்கும் பங்கு உண்டு..
மனம் அதைதான் அறிந்திடுமா?

கண்ணாடி சிலை ஒன்று,
கண்ணடித்தால் சிற்பம் ஆகிடுமா?
கல்லடி வாங்கி விட்டதால்
கலங்கி அது உடைந்திடுமா?

அன்றாட வாழ்க்கையிலே
அல்லல் பல காத்திருக்கும்.
அத்தனையும் தீ வைத்தால்
அன்றோடு அழிந்திடுமா?

பிரிவுகள் சேர்ந்து வரும்.
பிரிந்த பின் அதை தேடும்..
மனம் ஒரு குரங்கென்றால்
மரத்திலியே அது வாழ்ந்திடுமா?


இன்பம் வந்தால் ஏற்றுக்கொள்வோம்..
துன்பம் வந்தால் ரசித்துக்கொள்வோம்.
இரண்டுமே வேறில்லை..
இரண்டும் இல்லை என்றால் ,

வாழ்வும் இல்லை..

white-wooden-signpost-directions-yes-no-indications-260891996.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
10. நான் யாரோ

எதற்குமே கவலை இல்லை..
நான் யாரோ?
கவலையால் தொலைந்த ஓர் பிள்ளை.

தன்னிலை இங்கே மறந்தாலும்
நான் யாரோ?
தண்ணீர் என்றும் தொட்டதில்லை..

தற்பெருமை என்று நினைத்தால்கூட
நான் யாரோ?
தவழ்ந்து செல்லும் ஓர் முல்லை..

எனக்கென எதுவும் ஆசை இல்லை..
நான் யாரோ?
எவருடைய ஆசையும் பறித்ததில்லை.

எண்ணத்தில் என்றும் உணர்ச்சி வைத்து,
நான் யாரோ?
உறவுகளின் உணர்வை மதிக்க தவறியதில்லை..

உலகத்தில் ஓரத்தில் வாழ்ந்தாலும்
நான் யாரோ?
உனக்கென கொடுக்கும் அன்பை கெடுத்ததில்லை.

தாமரை இலை மேல் உள்ள நீர் துளிப்போல்
நான் யாரோ?
தனக்கென சிறுதுளிகள் வருமா? என நினைத்ததில்லை..


அகிலம் காக்கும் கடவுள் இல்லை.‌
நான் யாரோ?
அடை காக்கும் கரங்கள் எனக்கும் இல்லை..

ஒரு சொல்லில் மட்டும் சொல்ல வேண்டுமா?

எந்தன் சொல்லில் கர்வம் இல்லை. .
istockphoto-502321358-1024x1024.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
12.பிரிவுகள் சேர்ந்து


விரல்களுக்குள் இருக்கும் தூரம்தான்

நம் பிரிவின் தூரம் கண்ணம்மா..
விரல்களுக்குள் இடையே உன் விரல்கள் வைத்தால்
பிரிவுகளும் சேரும் பொன்னம்மா..

உறவுகளில் எதுவுமே பிரிவில்லை..
உணர்ந்தால் அதில் ஒரு பிழையில்லை..

பிரிவில் கொடுத்த அன்பின் நினைவுகள் போதும்.
பிரிந்தாலும் சுகம்தான் கண்ணம்மா..

கண்ணிற்கும் இமையிற்கும்
இருக்கும் தூரம்,
பிரிவில்லை காதல் பொன்னம்மா..
கனவுகள் ஒன்றாய் கூடிடவே..
இணைந்த இமைகளும் அழகம்மா..


தூரங்கள் தூரம்..
அன்புக்கு அது ஆழம்..
அழகிய பிரிவும் காதலம்மா..

இந்த அழகிய பிரிவும் காதலம்மா..
06e2ae7b66cb48f1de12608b74e0a393.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
13.என் இனிய தனிமையே

வாழ்வியல் தேடி

வடக்கே ஓடிய போதும்,
வசந்தங்கள் வந்து
வாழ்த்து பாடிய போதும்,
கஷ்டங்கள் கரைபுரண்டு
கலங்கிய போதும்,
நினைவுகள் நின்று
நீந்திய போதும்,
மனம் கொடுத்த முத்தங்கள்
மங்களாய் மறைந்த போதும்,
உரிமைகள் ஊஞ்சல் ஆடி
உற்சாகம் தந்த போதும்,
வந்ததும் நின்றதும்
சென்றதும் போனதும்,
நீ மட்டும்..


"வென்றதுமில்லை"
"சென்றதுமில்லை "

இப்படிக்கு

என் இனிய தனிமையே !!
a2513ff9efe209b0242344e04467aa3a.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
14. போர் வீரன் காதல்

சிப்பாயே சிப்பாயே

சிறு காதலில் சிதைந்தாயே..
சிங்கத்தின் சீற்றம் நீயே
சிலந்தி காதலில் விழுந்தாயே..

வந்தாளே வருவாளே,
வாகை சூடி ஏற்பாளே,
வான் வீசும் அம்பு அவள்
வலைத்து உன்னை எய்ப்பாளே..

உன் பேனாக்கள் அவள் கண் பட்டு
கண் மையாய் மாறிடும்.
உன் கைவிலங்கு அவள் கைப்பட்டு
கைக்குட்டை ஆகிவிடும்.

போர்வீரன் இவன் தானே,
போராடி வெல்வானே,
போர் சூழ்ந்து வெல்லும் அவன்,
போர்வையிலே தோற்பானே..

முடி சூடும் மன்னனே,
முகத்தில் வெட்கமென்ன?
வாள் வீசும் வானவனே
வானவில் ரசிப்பதென்ன?

ஆண்மகனே ஆண்மகனே,
ஆயிரத்தில் ஓர் மகனே,
அகிலம் காக்கும் கருவி நீயே,
அவள் அன்பில் அருவி ஆவாயே..

களம் கொண்ட காளையனுக்கு,
காதல் மலர்ந்தென்ன?
சினம் கொண்ட சிறுத்தைக்கு
சிறகுகள் முளைத்தென்ன?


தளபதியே தளபதியே
தமிழ் காக்க தலைத்தவனே,
தளம் கண்ட தலைவன் நீயே,
தலை கோத மடி சாய்ந்தாயே..

முப்படை நாயகனுக்கு,
முத்தத்தில் வீரமென்ன?
இப்படைகள் தோற்றாலும்

இதயத்தில் இன்பமென்ன?"""
John_William_Waterhouse_-_La_Belle_Dame_sans_Merci_1893.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
15. நதியே நீ சொல்லடி

நவீனமானதே..
நதிகள் காயுதே,
நலிந்து போன நாட்கள் எல்லாம்
நரகம் ஆனதே..

சுற்றம் சுருங்குதே,
சுற்றிலும் தேடுதே,
சுத்தமான நீரிலும்
சுவைகள் போனதே..

கலங்கம் நீளுதே,
கலங்கி நிற்குதே,
கள்ளிப்பாலும் கதறி இங்கு
கலப்படம் ஆனதே,

வெந்து தணிந்தே,
வெயிலில் கருகுதே,
வெள்ளை பூக்கள் மனங்கள் மாறி
விதவை ஆனதே...

விதைகள் விதைந்ததே,
விரைத்து முடிந்ததே,
விலைகள் திகட்ட விதியின் கதை
விளைய மறுக்குதே..

பறவை கூட்டிற்க்கும்,
பஞ்சம் வந்ததே,
பத்து மாதம் பிள்ளை நிலம்,
பட்டா ஆனதே..


அறுந்து விழுந்ததே,
அழுகி அழுகுதே,
தாய்ப்பால் தர

தண்ணீர்க்கு தாயுமில்லையே.."
istockphoto-486755202-612x612.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
16. ஆயிரம் காலத்து பயிர்

பனிக்குட மண்ணில்

விதைந்தேன்.
கற்பப்பை கிழித்து
பிறந்தேன்.
இயற்கை காற்றை
சுவாசித்து மகிழ்ந்தேன்.
மழையில் நனைந்து
உயிராக வளர்ந்தேன்.

சொந்தங்கள் சூழ
விளையாடி மகிழ்ந்தேன்.
என் நாள் வந்து
பூப்படைந்தேன்.
உன்னை காதலித்து
உன்னுடன் உயிர் வாழ்ந்தேன்.
அடிவயிற்றை அறுத்து உயிரை விட்டேன்.
உன் கோபத்திற்கு ஆளாகி
தூக்கி எறியப்பட்டேன்.


மீண்டு வருவேன்.
மீண்டும் உன்னை காதலிப்பேன்.
உன்னை வாழவைத்து
உனக்காக உயிர் விடுவேன்"

இப்படிக்கு

"அறுவடை நெல்"
beautiful-landscape-growing-paddy-rice-field-with-mountain-and-blue-sky-background-in-nagercoi...jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
17. செல்ல வண்டி

ஒட்டியாணம்

ஒன்றாக ஒட்டிக்கொண்டு,
இடுப்பை இறுக்கி
ஆட்டிக்கொண்டு,
மழலைகளை
மடியில் தாங்கிக்கொண்டு,
ஏழைபடிப்பின் செலவை
ஏற்றுக்கொண்டு,
சாதிகள் பார்க்காமல்
அணைத்துக்கொண்டு,
சொல்லாமல் சொந்தங்களை
இணைத்துக்கொண்டு,
ஒற்றை கண்ணால்
ஒளியை வீசிக்கொண்டு,
மழையில் நடனம் ஆடிக்கொண்டு,
பல ஒற்றை காதலை
பகைத்துக்கொண்டு,
காதல் தோல்வியால்
புகைத்துக்கொண்டு,


மானிடமும்
ஒரே பாதையில் செல்ல மறுக்க,
நீ மட்டும் ஒரே பாதையில்
செல்கிறாயே..


"ரயில் வண்டி"

HD-wallpaper-way-to-see-train-rain-journey-trains.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
18.நான் ரசித்த நபர்கள்


நான் தூங்கும் வீடு எது,
தூக்கணாங்குருவி வீடுதான்.
தூங்கியதும் எழுப்பும் என்னை
சிட்டுக்குருவியும் என் தோழிதான்..

அணில்களும் எங்கள் அழகன்தான்..
அழகிய குரல் குயில்களும் இங்கு அழகிதான்.

நான் நடந்தால் கூட வரும்
நிழலும் எந்தன் நண்பன்தான்.
நிழல் தரும் மரமும் என் நண்பன்தான்..

நான் வைத்த செடி கொடிகள்,
நாள் முழுதும் எந்தன் நண்பர்கள்தான்..
செடி கொடிக்கு நீர் தெளிக்கும்
மழையும் எந்தன் நண்பன்தான்.
அருவியும் அலைகடலும் நண்பன்தான்,
அழகிய நதிகளும் அதை சொல்லும்தான்..

கதை பேச வீடு வரும்
காக்கைக்கும் எந்தன் விருந்தினர்தான்..
மை பூசி ஒடி வரும் மைனாவும்
எந்தன் தோழிதான்...
தென்னந்தோப்பும் எந்தன் ரசிகன்தான்..
தென்றல் காற்றும் அதை ரசிக்கும்தான்..

நான் ரசித்த நபர்கள் எல்லாம்
நாளும் எந்தன் வீட்டினில்தான்..
இவைகள் இயற்கையின் பிள்ளைகள்தான்..
இலைகளும் அதை ஏற்று செல்லும்தான்..
Chalcophaps_indica_-National_Aquarium_-Baltimore-8a.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
19. ஏன் என்றால்

ரசித்து பார்த்திட கண் ஒன்றை கொடுத்திட,

ரசனைகள் படித்திட மற்றொன்றை கொடுத்திட..
துணைக்கு துணையாய் இரு கண்கள் கொடுத்தாய் இறைவா....

இகழ்ந்தவை எல்லாம் இசைத்திட கேட்க,
இனிமைகள் எல்லாம் இல்லறம் கேட்க,
துணைக்கு துணையாய் காதிரெண்டையாய் கொடுத்தாய் இறைவா..

அள்ளிக்கொடுக்க கை ஒன்றை கொடுக்க,
அதற்கு துணையாய் மற்றொன்றை கொடுக்க,
துணைக்கு துணையாய்
கைகளை படைத்தாய் இறைவா...

கரடு முரடில் கால் ஒன்று நடந்திட,
கடந்து நடக்க மற்றொன்று உதவிட,
துணைக்கு துணையாய்
கால்களை படைத்தாய் இறைவா..

சுவாசிக்க இரண்டு துருவங்கள் இருந்திட,
அதற்கு கருவியாய் இரு நுரையீரல் செயல்பட..
ஒன்று அடைத்தால் மற்றொன்றில் வாழ்ந்திட,
துணைக்கு துணையாய் ஒன்றாக படைத்தாய் இறைவா..

சிந்தையில் வந்திடும் சிறந்தவை பதித்திட,
சின்ன சின்ன கனவுகள் உதித்திட,

ஒன்றுக்கு துணையாய் மூளையை படைத்தாய் இறைவா...

இத்தனையும் நம் வாழ்வில் வாழ்ந்திட,

இன்னல்கள் வந்தால் ஏற்று சுமந்திட,
துணைக்கு துணையின்றி தவிக்க,
ஒரு இதயம் மட்டும்
ஏன் இங்கு படைத்தாய் இறைவா?

boy-3914551_1280.jpg




 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
20. கைதிக்கு ஓர் மனம் இருந்தால் .

சிறையில் அடைந்ததுமே..

சிந்தனைகள் கேள்விகள் கேட்டதென்ன?..
சில பல காரணங்கள் எல்லாம்..
சிறைவாசம் தந்தென்ன?..

புத்திக்கெட்டு போனதுமே..
புத்தகம் பல எழுதி பயனென்ன?..
நடுவில் ஒரு பக்கம் மட்டும்..
நடுநிலைமை காட்டியதென்ன?..

தவறினை ஒப்புக்கொள்ள,
தடம் இங்கு மாறியதென்ன?..
தன்னிச்சை முடிவுகள் கூட
தவிடு பொடியாய் ஆகியதென்ன?..

துணைவியின் குரல் கேட்க,
தூண்கள் தாண்டி வாடியதென்ன?..
மகள் அவள் மலர்ந்து விட்டால்,
மணம் முடித்து வைக்க மனம் ஏங்கியதென்ன?.

கைவிலங்கு போட்ட பின்னர்,
கைக்குழந்தை நியாபகமென்ன?
கைகட்டி நின்றுக்கொண்டு,
கைகளை தூக்கி பயனென்ன?

சின்னஞ்சிறு கனவு எல்லாம்,
சினம் கொண்டு அறுத்தென்ன?
சிறையில் அடைந்துக்கொண்டு,
சிகரம் தொட நினைத்தென்ன?


நீதி அவனுக்கு நிலைத்தாலும்,

நிகழ்பார்வை மாறிய
தென்ன?..
வேறின்றி நிற்கும் மரத்தின்,
வேதம் வேதனை ஆனதென்ன?..
jail.jpg
 
Top