What's new

Idea of Sales!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,923
Points
133
ஒரு லக்கனத்தில் 9 கிரகங்களும் உச்ச பெற்ற ஒருவன். உங்க கிட்ட காசு இருந்தாலும் இல்லாட்டியும் சரி ஒரு பொருள வாங்க வைக்க முடியும். போன பார்ட்ல உங்களுக்கு தேவையே இல்லாத ஒரு பொருள எப்படி வாங்க வைக்குறதுன்னு பார்த்தோம். இப்போ அந்த பொருள வாங்க உங்களுக்கு காசும் நாங்களே

AD095DA9-369C-4AB3-A0C0-94B55626FE79.jpeg


கொடுக்க போறோம். என்னடா இதுன்னு நினைக்கிறீங்களா. ஒரு ரூபா கொடுத்துட்டு பைக்க எடுத்திட்டு போங்க. இந்த விளம்பரத்த பார்த்த உடனே உங்களுக்கு பைக் வாங்க தோனுமா இல்லையா. சரி அது என்னன்னு யோசிக்க ஆரம்பிப்பிங்க. ஒரு 10பேர் அந்த விளம்பரத்த பார்த்த 1 ஆள் அந்த கடைக்கு போவாரு. எதுக்குன்னா

6A35A28C-CD0D-42CF-976D-1BB48A18EBB0.jpeg
அந்த ஒரு ஆளுக்கு பைக் தேவை ஆனா காசு இருக்காது. அங்க போற முடிக்கும். அவர் காசு சேர்ந்ததுக்கு அப்புறம் பைக் வாங்கனும் ஜடியால இருப்பாரு. இப்போ அங்க இருக்கிற அழகான ஒரு பொண்ணு இல்லாட்டி சுமாரான பொண்ணு ரிசப்ஷன்ல இருக்கும். சார் உங்களுக்கு என்ன வேணும் கேக்கும், நாம் வழியிறோமோ இல்லையோ.
5A15E30E-A52D-44FA-A1DF-4BECCF3D90A9.jpeg

அந்த பொண்ண பார்த்த உடனே உங்களுக்குள்ள ஒரு கம்பீரம் எட்டி பார்க்கும். இது psychologicalஅ உங்கள அவங்க அட்டாக் பண்ற முதல் weapon. அதாவது உங்ககிட்ட காசு இல்லாட்டியும். உங்க Egoவ அது எழுப்பி விடும். நாம வாங்கனும்னு. இரண்டாவது ஒரு பையன் சிரிச்சிட்டே வந்து உங்கக்கிட்டே எந்த பைக் சார்னு
9405B25D-896D-412E-B913-617468C8EFE7.jpeg
கேப்பான். நீங்க TVS XL super வாங்க போனாலும் அப்பாச்சிய ஒரு ரவுண்ட் வருவீங்க. அது தான் அந்த Ego matter. அடுத்தது நீங்க வாங்க நினைச்ச பைக்ல இருந்து ஒரு ஸ்டெப் அதிகமா எடுத்து வைப்பிங்க. அது தான் Scooty pep. Design, millege, self start, உங்க வீட்டு அம்மனி ஒட்டாலாம்னு ஏதாவது காரணம் சொல்லி உங்கள அங்கையே நிப்பாட்டுவான். இந்த discussion நடக்குறப்போ உங்களுக்கு தோணும் இது எதுக்குன்னு. அப்போ அடுத்த அஸ்திரம் ரெடியா இருக்கும். நீங்க ஒண்ணும் கவலை படாதிங்க சார் இரண்டுக்கும் Price different 10000₹ தான்னு சொல்லுவாங்க. சரி 40000₹ லோன் கட்றவன். 50000₹ கட்ட மாட்டோமானு

1F81A756-D8CA-4B01-98CD-65D2C0806CB1.jpeg
தோணும். Ok sir. அது என்ன ஒரு ரூபா offerனு அப்போ தான் கேப்பீங்க. உடனே அதுக்கு ஒரு பதில் ரெடியா வச்சிருப்பான். அதாவது நீங்க கேட்ட கேள்விக்கு பதிலா இல்லாம. சம்பந்தமே இல்லாத இன்னொரு கேள்வி கேட்பான். உங்க மாச சம்பளம் எவ்வளவு. நீங்க மாச சம்பளம் வாங்கனா 30000₹ சார்னு சொல்லுவீங்க.

BFB4517C-D59B-4FCB-8A31-CAD7FAD8CF8F.jpeg

அதே தின கூலினா. உங்களுக்கு அந்த ஆஃபர் இல்லைன்னு சொல்லிடுவான். சரி 30000₹ சம்பளம் வாங்குறதா வச்சிக்குவோம். உங்க take home எவ்வளவுன்னு அடுத்த கேள்வி வரும். நீங்க 28000₹ சொல்லுவீங்க. வேற ஏதாவது லோன் இல்லாட்டி கிரிடிட் கார்ட் இருக்கான்னு அடுத்த கேள்வி. ஆக மொத்தம் உங்க கேள்விக்கு

9A3656BA-45D2-45F7-A0B9-91EC15B5E298.jpeg

இது வரை 3 பதில் கேள்வி. நீங்க இல்லைன்னு சொன்னா 3 மாசம் salary slip, Aadhar card, ration card தாங்க சார். லோன் process பண்ணலாம்னு. அதே நீங்க credit cardஇருக்குன்னு சொல்லிட்டா முதல் கேள்வி எல்லா மாசமும் ஒழுங்கா பே பண்றிங்களான்னு வரும் அதுக்கு அப்புறம் உங்க pan no கொடுங்க.
A4E58403-EF09-486B-81B9-343019ECF692.jpeg
ஆக மொத்தம் உங்களால அந்த காச கட்ட முடியுமா இல்லையான்னு எப்படியும் கண்டுபிடிச்சிடுவான். அதுக்கு அப்புறம் உங்களுக்கு அந்த ஆஃபருக்கு வருவான். அதாவது உங்க கிரிடிட் ஸ்கோர் கம்மியா இருக்கு உங்களுக்கு 13% இன்டிரஸ்ட்ல கிடைக்கும் சார். நீங்க ஒரு 15000₹ கட்டுங்கன்னு. இரண்டாவது உங்க கிரிடிட் ஸ்கோர் நல்லா இருக்கு ஒரு பத்தாயிரம் கட்டுங்கன்னு. அப்போ நீங்க 1₹ தானே கட்டனும்னு கேட்டா சார் அது பைக்குக்கு 1₹தான் ஆனா அதுக்கு மேல Accessoriesக்கு 10000₹ னு சொல்லுவான். பைக்க வாங்கிட்டு பெடல் இல்லாமையா போக முடியும் நீங்க 10000₹ கட்டிட்டு வண்டிய எடுத்திட்டு போவிங்க.

1DEA01F5-179F-46F8-B8EC-6AD916DE27DA.jpeg

15000₹ பார்ட்டிக்கு அதே கெதி தான். நீங்க எப்படியும் அந்த முன் பணத்த கட்டிதான் வண்டி எடுப்பிங்க. அதுக்கான வழி தான் வேற. நீங்க யோச்சிச்சா திரும்பவும் உங்க ego வ டச் பண்ற question வரும். என்ன சார் 30000₹ சம்பளம் வாங்குறீங்க. உங்களால மாசம் 5000₹ கட்ட முடியாதான்னு‌ அதுக்கப்புறம் வீட்ல நடக்குற மார்க்கெட்டிங் பத்தி போன பார்டல சொல்லியாச்சு. EMI வோட கோற முகத்தை பத்தி சொல்லி தெரிய வேண்டியது இல்ல. அது நம்ம இஷ்ட பட்டத வாங்க வைக்கும். ஆனா கஷ்ட பட்டு வாழ வைக்கும். எடுத்துக்காட்டா சொல்லனும்னா நம்ம சூர்ய வம்சம் சரத்குமார எடுத்துக்கோங்க. கைல இருக்க

5B7C4536-425B-4E56-9822-FC25ADBD3278.jpeg


250₹ காசுக்கு வீட்டு சாமான் வாங்க போன மனுஷன் ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃபிரிய பார்த்திட்டு இரண்டு புடவையா வாங்கிட்டு வருவாரு. அந்த தேவயானி அம்மாவாது சும்மா இருந்திருக்கலாம். அதுவும் அதே ஆஃபர்ல இரண்டு வேஷ்டி வாங்கி வைக்கும். கடைசியில வாட்ச் வித்து தான் சாப்பிடனும்.

இதே தான் EMI ம் கண்ணுக்கு குளிரா ஆஃபர் இருக்குன்னு வாங்குனா. கடைசியில எதையாவது வித்துதான் சாப்பிடனும். இன்றைய கருத்து இத்துடன் முடிவடைகிறது. அடுத்த திரட்டில் மற்ற சேல்ஸ் ஜடியா பற்றி பேசுவோம். நன்றி வணக்கம். 🙏
 
Top