What's new

My Number; My Right!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,928
Points
133
CRM- Data is important இது மார்க்கெட்டிங்ல ஒரு முக்கியமான விஷயம்.உங்க ஒவ்வொருத்தரோட Profileம் அவ்வளவு important. Atleast உங்களோட போன் நம்பர். அதாவது நீங்க வாங்குற ஒரு பொருள வச்சி உங்கள categories பண்ணலாம்.
380C8E44-FE97-4A77-A2BB-8B56F7E036FE.jpeg

ஏதோ ஒரு வகையில நீங்க உங்க மொபைல் நம்பர கொடுத்து தான் ஆகனும். சிம்பிளா சொல்லனும்னா Gas புக் பண்றதுக்கு கூட நாம நம்ம மொபைல் நம்பர் கொடுத்திருப்போம். ஆனா அங்க நாம கொடுத்திருக்க ஒரு போன் நம்பர் எத்தனை பேருக்கு தேவைப்படும்னு தெரியுமா‌.
4E066086-E2B8-4006-86DE-F4BFA16C1AC3.jpeg

நீங்க கவர்மென்ட் மானியத்தில சிலிண்டர் வாங்குறீங்களே தவிர. கவர்மென்ட் கிட்ட இல்ல. அது ஒரு தனியார் கேஸ் புக்கிங் சென்டர். அவன் உங்கள மாதிரி கேஸ் புக்கிங்க்கு நம்பர் கொடுத்தவங்க லிஸ்ட்ட எடுத்து. யாருக்கு வேணும்னா விக்கலாம். அது வித்தா யாரு வாங்குவாங்கன்னு கேக்குறீங்களா.

8F3286AA-2326-4DD8-90FF-B732825ABAD9.jpeg
அதுக்கு தனியா வெப்சைட்ஸே இருக்கு. உங்க கிட்ட இருக்கிற நம்பரோட வேல்யு பொருத்து அதுக்கு காசு. சரி இதுல இருக்க நம்பர் எதுக்கு யூஸ் பண்ணுவாங்க. டேய்லி உங்களுக்கு வற்ர மார்க்கெட்டிங் கால்ஸ் எல்லாமே இப்படி நீங்க எங்கையோ கொடுத்த நம்பர் தான். நீங்க Shopping mall போறிங்க லக்கி டிரா உங்க

648A0FC3-58DE-4165-998A-D376F2E43868.jpeg
நேம் அன்ட் நம்பர் fill பண்ணுங்க. செலக்ட் ஆனா நீங்க உங்களுக்கு மூவி டிக்கெட் ஃபிரின்னு சொல்லுவாங்க. நாமளும் நம்பர் தானேன்னு கொடுப்போம். ஒரு வாரம் இல்ல மாசம் கழிச்சு போன் வரும். உங்கள ஃபேமிலியோட பக்கத்தில இருக்கிற ரிசார்ட் இல்ல ஹோட்டலுக்கு வர சொல்லுவாங்க. நீங்க அங்க போனா உங்களுக்கு
FE0D1499-266A-4601-811A-DD9676AB2E71.jpeg

ஏதாவது ஒரு கிஃப்ட் கொடுத்து. இந்த பிளான்ல ஜாயின் பண்ணுங்க அந்த பிளான்ல ஜாயின் பண்ணுங்கன்னு ஏதாவது மார்க்கெட்டிங் பண்ணுவான். நல்லா கவனிங்க அவங்க உங்கள ஃபேமிலியோட தான் வர சொல்லுவாங்க. ஏன்னா தனியா நீங்க போனா உங்க வீட்ல கேட்டுட்டு சொல்றேன்னு காரணம் சொல்லுவிங்க. இப்போ அதுக்கு வாய்ப்பில்லை.

இரண்டாவது அவங்க பிராடக்ட் உங்களுக்கு பிடிக்காம உங்க Wife க்கு பிடிக்கலாம். There is a lot of chance to buy. அப்போ அது அவனுக்கு லாபம். அப்படி நீங்க வாங்காம போனாலும் அவனுக்கு நட்டம் இல்ல. உங்க டேட்டா அவனுக்கு காசு. சரி இந்த டேட்டா இதுக்கு மட்டுமா யூஸ் ஆகுதுன்னா கண்டிப்பா இல்ல. இந்த டேட்டாஸ் கலைக்ட் பண்றதுக்கு பேரு CRMன்னு சொல்லுவாங்க அதாவது customer relationship management. நீங்க ஒரு தடவை அவர் கிட்ட பொருள் வாங்கிட்டிங்கன்னா. அந்த கடையோட Existing customer ஆகிடுவிங்க. அந்த கடையில உங்க டிடெயில அவன் entry பண்ணிடுவான்.
BB3E709E-979A-4E1F-A1FF-95AC042013EB.jpeg

நீங்க அதே கடையில திரும்ப எப்போ பொருள் வாங்குவீங்கன்னு ஆட்டோமெட்டிக்கா சாப்ட்வேர் கால்குலேட் பண்ணும். இரண்டாவது நீங்க என்ன என்ன பொருள் வாங்குறீங்கன்ற லிஸ்ட்டும் அவங்கக்கிட்ட இருக்கும் ‌இப்போ அவங்க கிட்ட என்ன டிடெயில்ஸ் எல்லாம் இருக்கு. நீங்க எவ்வளவு நாளுக்கு ஒரு தடவை பொருள் வாங்குவீங்க‌. உங்களுக்கு என்ன பொருள் எல்லாம் பிடிக்கும்‌. இத ஒரு ஆவரேஜ்ஜா எடுத்து அவனோட ஸ்டாக்க மெயின்டெயின் பண்ணுவான்‌‌. நீங்க அடுத்த தடவை போறப்போ அந்த பொருள் கண்டிப்பா கிடைக்கும். இரண்டாவது நீங்க இப்போ அங்க ஆஃபர்ல வர பிராடக்ட் நிறைய வாங்கினா. அந்த கடையில ஏதாவது ஒரு பொருளுக்கு ஆஃபர் போட்டா உடனே உங்களுக்கு மெஸேஜ் வரும். நீங்க Big bazaar ல பொருள் வாங்குனா நீங்க இந்த மெஸேஜ் அடிக்கடி பாக்கலாம். இது மாதிரி உங்களோட ஒரு நம்பர் வச்சி ஊர்ல நிறைய பேர் வாழ்றாங்க.

எடுத்துக்காட்டா நம்ம சிவகார்த்திகேயன் எடுத்துக்கோங்க. எதிர் நீச்சல் படத்தில அவரு ஹீரோயின கரைக்ட் பண்ண நம்பர் கொடுப்பாரு.
7FEAD370-ADF2-4882-9AAE-FD9F9372BFF0.jpeg

ஆனா அந்த நம்பர் வச்சி அந்த அம்மா என்ன பண்ணும் இவர இன்சூரன்ஸ் போட வைக்கும்‌.இது தான் நம்ம லைஃப்ல நடக்குற கதையும். நாம சும்மா இருந்தாலும் நம்மள அடுத்தவங்களுக்கு நம்பர் கொடுக்க வைக்க அந்த படத்தில வர சதிஷ் மாதிரி நிறைய கேரக்டர் இருக்காங்க.குறிப்பா உங்க வீட்டு அம்மணி என் நம்பர் என் உரிமை மாதிரி. என்ன எல்லாருக்கும் Priya Anand கிடைக்காது.


0DB6C08A-77CF-4EE1-8470-1FE8A482B4F8.jpeg
வெறும் இன்சூரன்ஸ் தான் கிடைக்கும். Be careful before share ur details to anyone.

இதே படத்தில அவன் ஃபிரண்ட்ட சேர்த்து விட்டு அப்படியே கண்டினியூ பண்ணுவாங்க பாத்திங்களா அதுக்கு பேரு தான் MLM. அதுப்பத்தி அடுத்த பார்ட்ல பார்க்கலாம்.

C8E71E86-D560-41AA-A1C2-20B6D46F7612.jpeg
 
Top