What's new

Relationship : உறவில் இது ஒரு புது வகை!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Relationship : உறவில் இது ஒரு புது வகை!

பேக்அப் பார்ட்னர்!!

இப்படியெல்லாம் கூட ரிலேஷன்ஷிப் இருக்க முடியுமா?

நாம் ஒரு நாள் மின்நிறுத்தம் என்றால் பவர் பேக்அப்தான் எடுத்து வைத்துக்கொள்வோம். அது என்ன பார்ட்னர் பேக்அப் என்று வியப்பாக உள்ளதா?

பேக்அப் பார்ட்னர் என்றால் என்ன தெரியுமா? ஆண்கள் / பெண்கள் தங்களின் தற்போதைய உறவில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக பேக்அப் ஆக மற்றொரு பார்ட்னரை வைத்துள்ளார்கள்.

உறவுகள் உலகத்தில் தற்போது ஒரு புதிய வார்த்தை புழக்கத்திற்கு வந்துள்ளது. அது பேக்அப் பார்ட்னர்ஸ் – அதாவது இருப்பு வைத்துக்கொள்ளப்படும் இணையர்கள் அல்லது பார்ட்னர்கள் என்று கூறலாம்.

ஏன் இதில் ஆர்வம் உள்ளது? இதற்கு சரியான அர்த்தம்தான் என்ன என்று தெரிந்துகொள்ள நீங்கள் பேக்அப் பார்ட்னர்களின் உலகில்தான் பயணிக்க வேண்டும்.

பேக் அப் பார்ட்னர் என்றால் என்ன?

ஒருவரின் தற்போதைய உறவில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அடுத்த காதல் உறவை ஏற்படுத்திக்கொள்ள வைத்திருக்கும் நபர், அந்த உறவு முடியும்போது அடுத்த நபரை தயாராக வைத்துக்கொள்வது.

இது ரகசிய உறவோ அல்லது திட்டமிட்டு செய்யப்படும் பிரேக் அப்போ கிடையாது. ஆனால் இது ஒரு ஆதரவளிக்கும் உறவு.

பேக்அப் பார்ட்னர்களின் எழுச்சி?

இன்றைய உறவில் பழங்காலத்தில் இருந்தது போல் உறவுகள் நிலைத்திருப்பதில்லை. பேக்அப் பார்ட்னர்கள் என்ற கருத்தாக்கம் வேரூன்ற துவங்கி வருகிறது. நவீன காதலில் ஏற்படும் திடீர் திருப்பங்களால் இது ஏற்பட்டுள்ளது. தொழில் முன்னேற்றம், தனிப்பட்ட வளர்ச்சி, வாழ்வில் அதிகரித்து வரும் உணர்வு ரீதியான பாதுகாப்பு உணர்ச்சி, சுதந்திர உணர்வு ஆகியவற்றதால் இந்த கருத்தாக்கம் பெருகிவருகிறது.

பேக்அப் பார்ட்னர்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?

உணர்வு ரீதியான பாதுகாப்பு, உங்களின் தற்போதைய உறவில் பிரச்னைகள் ஏற்பட்டால், உங்களுக்கு உணர்வு ரீதியாக பாதுகாப்பை ஒருவர் வழங்கலாம் என்ற நிலை உள்ள என்று தெரிந்துகொண்டால், மனஅழுத்ததை குறைப்பது,
சமூகம் நாம் ஒருவருடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

பேக்அப் பார்ட்னர்கள், ஒருவருக்கு உறவில் எந்தவித அழுத்தமும் இல்லாமல், நீண்ட கால அர்ப்பணிப்பு இல்லாமல் தேர்ந்தெடுக்க முடிவதும் காரணமாகிறது.
எதிர்பாராத விஷயங்களை கையாள்வது தான்
வாழ்க்கை, அது எதிர்பாராத நிகழ்வுகளின் கோர்வை. அதில் உறவுகளும் விதிவிலக்கல்ல. எனவே ஒரு பேக்அப் பார்ட்னர் கஷ்ட காலங்களில் பாதுகாப்பு வலையாக இருக்கிறார். அவர் நமக்கும் நட்பாகவும் இருக்கிறார். நமக்கு சௌகர்யமாகவும் இருக்கிறார்.

அறநெறி சங்கடம்:

இந்த கருத்தாக்கம் பரவிவரும் வேளையில் ஒழுக்கம் சார்ந்த கேள்வி எழுகிறது. ஒரு பேக்அப் பார்ட்னரை வைத்துக்கொண்டு ஒரு உறவில் இருப்பது ஏமாற்றுவதை போன்றதல்லவா என்ற எண்ணம் தோன்றும். நீங்கள் இப்போது உறவில் இருக்கும் நபருக்கு நீங்கள் உண்மையாக உள்ளீர்களா? இது சரியா என்ற கேள்விகள் எழும்.

ஒழுக்கத்தின் அடிப்படையில் இந்தக்கேள்வி எழுந்தாலும், பதில்கள் வேறுபடுகிறது. எனவே உங்கள் பார்ட்னருடன் இதுகுறித்து மனம் திறந்து பேசுவது நல்லது. இது இருவருக்கும் பிரச்னை இல்லாதபோது பலனளிக்கிறது.

இதை உங்கள் பார்ட்னருடன் எப்படி பகிர்வது?

பேக்அப் பார்ட்னர் குறித்து உங்கள் பார்ட்னருடன் நீங்கள் பேச விரும்பினால் அதற்கு கட்டாயம் நேர்மையும், அனுதாபமும் தேவைப்படுகிறது. ஒரு அமைதியான, அழுத்தம் இல்லாத இடத்தில், உங்களின் இந்த விஷயத்தை கூறுங்கள். அதேநேரத்தில் உங்கள் காதல், எவ்வளவு அர்ப்பணிப்புடன் நீங்கள் அதில் இருக்கிறீர்கள் என்பது குறித்தும் அவர்களிடம் எடுத்துக்கூறுங்கள்.

அவர்களிடம் இந்த யோசனை அதிருப்தியால் ஏற்பட்டதல்ல என்பதை எடுத்துக்கூறுங்கள். உணர்வு ரீதியான பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என்பதை தெளிவுபடுத்துங்கள். உங்களின் பிணைப்பை திறந்த மனதுடனான உரையாடல்கள் மூலம் பலப்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்துங்கள். இருவரும் இதை புரிந்துகொள்ள வேண்டும்.
 
Top