What's new

Song no 13 ni ponaakka podi

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
என்னோட பிரிஞ்சு போன பெண் தோழியை நினைத்து ஒரு சோக பாடல்😔😢😭

பல்லவி

நீ போனாக்க போடி
நான் வர மாட்டேன் தேடி
ஒரு நொடியும் கூட யோசிக்காம போறியே கேடி

பேசுன வார்த்தை எல்லாம் காத விட்டு மறையலடி
போறியே என்ன விட்டு பிரிவும் என்னை கொல்லுமடி
எப்பவும் உன்ன விட்டு போ மாட்டேன்னு கொஞ்சுணியே

இப்போ நீ போகாதன்னு சொன்னாக்க தான் மிஞ்சுறியே

சரணம்

நீயுமே அப்போ பேசின வார்த்தை
காத்துல ஏனோ சுத்துதே நித்தம்


கேட்கிற நேரம் எம்மன பாரம்
கூடி தான் போக சத்தமா கத்தும்

என்னோட நீயும் இருந்த நேரம் எல்லாம் போயாச்சு
நீ போன பின்னே எந்தன் வாழக்கை தானே வீணாச்சு
உம்மேல நானும் கொண்ட ஆசை இப்போ மண்ணாச்சு
கடிகார முள்ளும் கூட சுத்தாம இப்போ நின்னாச்சு

நீதானே என் மூச்சு... என் மனச உன் பேச்சு..

தீ போல சுட்டாச்சு எனக்கேதோ ஆயச்சு..


இந்த பாடலை கேட்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும் நன்றி.


 
Top