What's new

STORY WRITING CONTEST

Status
Not open for further replies.

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445
Points
133
Are you an author? Do you have an idea for a super short story that needs to be shared with the world?
If you answered yes to both of those questions this contest is for you!

1657682306290.png


அனைத்து c2f பயனர்களுக்கும் வணக்கம்!!

இம்மாதத்திற்கான போட்டியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பயனர்களுக்கு எங்களது நன்றிகள்.

எழுத்தாளர்கள் அனைவரையும் "சிறுகதை எழுதுதல்" போட்டிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.




1657651176743.png


Note: Kindly refrain yourself from conversation on post, This Thread is mainly for contestants Content Sharing Alone.


குறிப்பு: இந்த இடுகையில் உரையாடலைத் தவிர்க்கவும், இந்த த்ரெட் போட்டிக்கானது மட்டுமே.
 

Attachments

  • 1657651197623.png
    1657651197623.png
    1.7 MB · Views: 16
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,888
Points
133
உதிரத்தில் ஓர் உயிர்

இது கதை சொல்வதைவிட உண்மை சம்பவம். என் வீட்டருகே அரசு பிரசவ மருத்துவமனை உண்டு.கிராமம், மாலை நேர செவிலியர் இல்லை, அனுமதிக்கப்பட்ட ஒருதாய் பனிக்குடம் உடைந்து உதிரம் வந்து தவிக்க, அந்த தாயின் தாய் தெருவில் கூச்சலிட அதை கவனித்த என் தந்தை வேகமாக வந்தார். என்னை அழைத்து இருசக்கர வாகனம் இறக்க, அவரே கைதாங்க அந்த பிரசவிக்கும் தாயை தூக்கி வந்தார். 7 கி.மீ செல்ல வேண்டும் நகரத்திற்கு,நான் வண்டி ஓட்ட என் தந்தை கை தாங்கலாக அப்பெண்ணை வண்டியில் அமரவைத்து மூவரும் பயணித்தோம்.வேகமாக சென்று அனுமதித்தோம். இருவரின் துணியிலும் இரத்தப்போக்கு. அப்பெண் தாயார் வந்ததும் என் தந்தை அவரின் கையில் 500 ரூபாய் கொடுத்துவிட்டு வீடு வந்தோம். இதை கவனித்த என் தாயாரால் ஏற்க முடியாமல் தோட்டத்தில் குளித்துவிட்டு உள்ளே வரவேண்டும் என்றார். அப்பொழுது என் தாய் ஒரு குச்சியால் எங்கள் துணிகளை எடுத்து தூக்கி எறிய பையில் இட்டார். எனக்கு ஏதும் பெரிதாக தோன்றவில்லை. என் தந்தைக்கு தோன்றியது. " நீ எறிந்துவிடுவாய். நினைத்துபார் அந்த இரத்தமே உன் பிள்ளைகள் உயிராய் இருந்தால் எறிவாயா?. இரத்தத்தை தீண்டாமல் நீயும் மூன்று பிள்ளைகளை பெற்றிருக்க முடியாது. நீ கழுவ வேண்டாம்.. நானே கழுவுகிறேன் என்று இருவரின் துணியையும் கடிந்துக்கொண்டே கழுவினார்.

எனக்கு உரைத்தது. உங்களுக்கு உரைக்கவே இச்சம்பவம்..

நீதி -1. " இரு மனிதர்களின் எண்ணம் ஒன்றை ஒன்று சார்ந்தது அல்ல.

2. " இயலாமை இயலாமல் சென்று விடும்"


3. "இரத்தத்தில் வகைகள்தான் உண்டு. சாதிகள் இல்லை "

4. " உன் வளர்ப்பிலே சுயசரிதை உண்டு "


5. உதவ உத்தமர்கள் தேவையில்லை. மனமும் மனிதமும் போதும், "
 

Attachments

  • Screenshot_20220717-092605_VivaCut.jpg
    Screenshot_20220717-092605_VivaCut.jpg
    259.5 KB · Views: 4
Last edited:

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
தானி ஓட்டுநர்(ஆட்டோ டிரைவர்)ஒரு நாள் அனுபவம்.

வழக்கம் போல் அதிகாலை வேலைக்கு கிளம்பியதும் கிடைத்தது முதல் சவாரி 4.30 மணியளவில் பயணி ரயில்வே ஸ்டேஷன் போலாமா என்று கேட்க ஓட்டுநரும் அழைத்து கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தார் வழியில் பயணி ஓட்டுநரிடம் ஏன் இவ்ளோ வேகமாக போரிங்க என கேட்க ஓட்டுநர் ரயில் எத்தனை மணிக்கு எனக்கு தெரியாது அதான் சீக்கிரம் போய் விட்டுருலாம் பார்த்தேன் என் சொல்ல பயணி போக போரது நானே கவலை படல ரயில் இல்லைனா பஸ்ல போக போறேன் என்ன பெருசா ஆயிடபோகுது 10ரூபா அதிகமாகும் ஒரு 1மணிநேரம் கூட போகும் அவ்ளோதானே நீங்களும் பொறுமையாவே போங்க உங்கள் நம்பி வீட்ல இருப்பாங்க என கனிவாக பேசி இறங்கி சென்றார் அடுத்த சவாரி உடனே அங்கிருந்து கிடைக்க அந்த பயணியை ஏற்றி முதல் பயணி சொன்ன கருத்தை மனதில் கொண்டு சற்று பொறுமையாகவே அழைத்து சென்றார் இப்பயணி ஓட்நரிடம் ஏன் ஆட்டோ புதுசா ஓட்ரிங்களா பொறுமையா போரீங்க வேகமா போங்க சார் டயர்டா இருக்கு போய் தூங்கணும் என்று கடிந்தார் ஒரு வழியாக இவரையும் இறக்கி விட அடுத்த சவாரி அழைப்பு போனில் வந்தது இப்பயணி சீக்கீரம் வாங்க என அழைக்க ஓட்டுநரும் ஏதோ அவசர தேவை என கருதி வேகமாக சென்று அவரை ஏற்றினார் வேகமாக இயக்கினார் இவரும் ஏன் வேகமா போறீங்க என கேட்க நீங்கதானே சீக்கிரம் வர சொன்னீங்க என சொல்ல அவர் உங்கள மட்டும் தான் சீக்கிரம் வர சொன்னேன் இப்போ நம்ம பொறுமையாகவே போலாம் என கூர அப்போ நான் வேகமா வரனும் உங்கள கூப்பிட்டு போக நீங்க வந்தா நான் பொறுமையா போகணுமா என கேட்க ஆமா நீங்க வந்தா தான் நிச்சயம் இல்லனா வேற ஆட்டோ புடிக்கனும் அதுக்கும் டைம் ஆகும்ல என சொல்லி இறங்கி சென்றார்.

இதில் ஓட்டுநர் தெரிந்துகொண்டது மனிதர்கள் பல விதம் ஒவ்வொருவரும் ஒரு விதம் எனவே மத்தவங்க நமக்காக அனுசரிக்கும் நினைக்காம நாம அனுசரிக்க பழகிக்குவோம்

அந்த ஓட்டுநர் நான்தான்🤫🤭
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,311
Points
153
மகிழினி
வழக்கத்திற்கு மாறாக அதிகாலை 5 மணிக்கே கண் விழித்தாள் 20 வயது நிரம்பிய மகிழினி. என்றும் இல்லாமல் மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வீட்டு வேலைகளை அவளே செய்ய தொடங்கினாள். ஆச்சர்யத்துடன் பார்த்த அவளது தாய், " என்னடி புதுசா வேலைலாம் செய்ற" என்றாள். சமயலறையில் பாத்திரம் தேய்த்து கொண்டே மகிழினி என்ன சொல்வதென்று தெரியாமல், "ஆமா மா! காலை உணவை இன்று நான் செய்யப்போகிறேன்" என்று எதையோ நினைத்து முகத்தில் புன்னகை ததும்ப கூறினாள்."

சுமார் 10 மணியளவில் கையில் டிபன் பாக்சுடன், ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் ஏரிக்கரை முனியப்பன் கோவிலில் முகிலனுக்காக காத்துக்கொண்டிருந்தாள் மகிழினி.

மகிழினியின் அத்தை மகன் முகிலன். வெளியூரில் வேலைபார்க்கும் அவன் தீபாவளியை முன்னிட்டு ஊருக்கு வந்திருந்தான். குழந்தை பருவத்தில் மாமன் மகள், அத்தை மகன் என்ற உறவுகளால் அறிமுகம் ஆகி விளையாட ஆரம்பித்து, பருவ வயதில் அது காதலாக மலர்த்தது. இன்று அவன் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் மகிழினி.

முகிலனை பார்த்ததும், "வா மாமா... ஏன் இவ்ளோ தாமதமா வர?" என்று பொய் கோவம் கொண்டாள் மகிழினி.

"நான் தாமதமாக வந்தேனா? உனக்கு முன்பே நான் வந்துவிட்டேன். அதோ அந்த மரத்தின் பின்னால் தான் நின்று கொண்டு என்னவள் எனக்காக காத்துக்கொண்டிருக்கும் அழகை ரசித்து கொண்டிருந்தேன்" என்று கண்ணில் குறும்பு தெரிய, எதிர்பாராத நேரத்தில் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, கையில் இருக்கும் டிபன் பாக்சை வாங்கி அமர்ந்தான். வெட்கத்தில் முகம் சிவக்க பதில் ஏதும் பேச முடியாமல் நின்றாள் மகிழினி.

"வெண் பொங்கல், ரொம்ப ருசியா இருக்கு. அத்தையின் கை பக்குவமே தனி" என்று கூறி வாய் மூடவில்லை...

"உங்க அத்தை செஞ்சதா... செஞ்சிருப்பா உங்க அத்தை!! மாமனுக்காக நானே செஞ்சி எடுத்துட்டு வந்தா.. அத்தை செஞ்சாளாம் இல்ல.. அத்தை!"



"சரி சரி சண்டைக்கு வராத. சும்மா வம்புக்கு சொன்னேன். நீ தான் செஞ்சி இருப்பன்னு தெரியும். இங்க வந்து உக்காரு. இந்தா இத பிரிச்சி பாரு" என்று ஒரு கவரை நீட்டினான். மகிழினியும் பிரிதாள், உள்ளே இருந்தது ஒரு ஊதா நிற புடவை. "எனக்கு ரொம்ப பிடிச்ச நிறம். எனக்கா மாமா இது" என்றாள்.

"ம்ம்ம்.... தீபாவளி பரிசு. நாளை இத கட்டிக்கிட்டு காலைல இதே டைம் க்கு இங்க வந்துடு" என்றான்.

சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் வீடு திரும்பினர்.

இன்று தீபாவளி. ஊதா நிற புடவை கட்டிக்கொண்டு பத்து மணிக்கு அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் மகிழினி. இன்றும் அந்த மரத்தடியில் ஒளிந்திருப்பானோ! என்று எண்ணி அங்கு சென்று பார்த்தாள். யாரும் இல்லை. மணி 11. இன்னுமும் முகிலன் வரவில்லை. கோவமாக வீட்டிற்கு சென்றாள்.

வழக்கத்திற்கு மாறாக, வீடு அமைதியாக இருந்தது. வீட்டில் யாரும் இல்லை என்று அறிந்து கொண்டாள். அவளது தங்கைபடுக்கையில் படுத்திருந்தாள். " அம்மா அப்பா எங்க?" வீட்டினுள் வந்துகொண்டே கேட்டாள் மகிழினி.

இவள் குரல் கேட்டதும் அமைதியாக அழுது கொண்டிருந்தவள், எழுந்து "அக்கா... எங்க போன நீ" என்று கதறலுடன் ஓடி வந்து மகிழினியை கட்டிக்கொண்டு அழுதாள். "என்ன ஆச்சு? ஏன் இப்டி அழுற? அம்மா எங்க?" என்று ஒன்றும் புரியாத மகிழினி கேள்விகளை அடுக்கினாள்.

"முகிலன் மாமாக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம் அக்கா. இறந்துட்டதா பேசிக்கிட்டாங்க. ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு போய்ட்டாங்களாம். அம்மாவும் அப்பாவும் அங்க தான் போய் இருக்காங்க."

இதை கேட்டதும், இதயம் வெடித்தது போல் உணர்ந்தாள். பேச வார்த்தைகள் வரவில்லை. அதிர்ச்சியில் சிலை போல் நின்றாள் மகிழினி.

சிறிது நேரத்தில் அவர்களது சித்தப்பா வந்து இருவரையும் கூட்டிக்கொண்டு அவர்களது அத்தை வீட்டிற்கு சென்றார். காலை 9.30 மணி அளவில் முகிலன் வெளியே கிளம்பி சென்றதாகவும், அப்பொழுது வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றதும் விபத்து நடந்ததாகவும் சித்தப்பா சொல்ல கேட்டாள். தன்னை பார்க்க வரும்போது தான் விபத்து நடந்து இருக்கிறது என்று உணர்ந்தாள். இறுதி சடங்கு நடைபெற்றது. கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. அதிர்ச்சியில் உறைந்தவள் அமைதியாகவே இருந்துவிட்டு வீடு திரும்பினாள்.

அடுத்த ஒரு வருடம், பூவும் பொட்டும் வைக்காமல், விதவை போலே வாழ்ந்தாள். அவளது அம்மாவிற்கு விஷயம் தெரிந்திருந்தாலும், தெரியாததை போலவே இருந்து விட்டார். பொட்டும் பூவும் வைக்காமல் இருப்பதற்கு தினமும் திட்டி திட்டி ஒரு வருடம் கழித்து எப்படியோ மகிழினியை பொட்டும், பூவும் வைக்க வைத்துவிட்டாள், அவளது அம்மா.

சில வருடங்களுக்கு பிறகு மகிழினிக்கு திருமணம் நடந்தது. அவளது துரதிஷ்டமோ என்னவோ குடிகார கணவன் அமைந்தான். இரண்டு பிள்ளைகள், தையல் பயிற்சி, டைலர் வேளை, தினமும் குடிகார கணவனுடன் சண்டை, என்று அவள் வாழ்க்கையும் ஓடியது. உறங்க செல்வதற்கு முன் ஒரு நொடியாவது முகிலனை நினைக்காமல் தூங்கியது கிடையாது. ஒவ்வொரு தீபாவளி அன்றும் தவறாமல் அவன் சமாதிக்கு சென்று வருவாள்.

வயது 45 ஆகிவிட்டது. உடல் நலம் சரி இல்லாமல் படுத்த படுக்கையில் இருந்தாள் மகிழினி. விடிந்தால் தீபாவளி. மகிழினியின் தங்கை மருத்துவரை வீட்டிற்கு அழைத்து வந்தாள். மருத்துவர் பரிசோதித்து விட்டு, காலையில் மருத்துவ மனைக்கு கூட்டி வாருங்கள், இதயத்தை பரிசோதிக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார்.

"உனக்கு ஒன்னும் இல்ல அக்கா. காலைல ஆஸ்பத்திரிக்கு போலாம். மருந்து சாப்பிட்டா எல்லாம் சரியாப்போயிடும்" என்று ஆறுதல் கூறி காலையில் வருவதாக சொல்லிச் சென்றாள் தங்கை.

அன்று தீபாவளி. காலை 9 மணி. மகிழினி மாரடைப்பில் இறந்துவிட்டாள் என்ற செய்தி அனைவருக்கும் சென்றது.



குறிப்பு: கற்பனை கலந்த உண்மைக் கதை!!

** எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.


-ஆதினி
 
Last edited:

Jokerr

Well-known member
Joined
Jan 6, 2022
Messages
99
Points
63
ஏணிப்படிகள் ...

மாதத்தின் முதல் நாள் வழக்கம்போல் சுறுசுறுப்புடன் தொடங்க தன்னுடைய இயல்பான வெள்ளை அரைக்கை சட்டையும்மடிப்புக் கலையாத வேட்டியும் தான் எப்போதும் சுமக்கின்ற ஜோல்னா பையும் எடுத்து அதனுள் இருக்கும் பொருட்களை சரி பார்த்து மனைவியிடம் வாங்கி வரை செல்கிறேன் என்று கிளம்பினார். வீட்டிலிருந்து வங்கி இரண்டு கிலோமீட்டர் மெதுவாக தன் பயணத்தை தொடங்கினார் வழிநெடுகிலும் மரியாதை நிமித்தம் வணக்கம் கூறும் அனைவருக்கும் தன் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டேன் நடந்து சென்றார். வங்கியை சேர்ந்தபின் தான் தயாராக வைத்திருந்த காசோலையை வங்கி அதிகாரியிடம் கொடுத்து அதற்கான டோக்கன் ஐயும் பெற்றுக்கொண்டு தனது தருணத்திற்காக காத்திருந்தார்.
மாதத்தின் முதல் நாள் என்பதால் அதிக கூட்டம் இருந்தது வங்கியில்.
தான் எப்போது வங்கி செல்லும் போதும் தன்னுடன் ஒரு சிறிய அட்டையை கையில் எடுத்து செல்வார் எதற்கென்றால் தான் அங்கு அமர்ந்திருக்கும் நேரம் யாரேனும் காசோலை அல்லது சில விண்ணப்பங்களை பூர்த்தி செய் உதவிடுவார். இன்றும் தான் அமர்ந்திருந்த ஒரு மணி நேரத்தில் தன்னியல்பான பணியை முடித்தார் மற்றவர் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டார். காசாளர் தனது என்னை அழைத்ததும் மெதுவாக எழுந்து சென்று டோக்கனை நீட்டி காத்திருந்தார் சுப்ரமணியம் நீங்க தானே காசாளர் கேட்க தலை அசைத்தபடி நின்றார் காசாளர் அன்றுதான் அந்த வங்கிக் கிளைக்கு மாற்றலாகி இருந்தார் தலையசைத்து அவரை சற்று உற்று நோக்கிவிட்டு சுப்பிரமணியம் ஐயா என்னுடைய கணக்கு வாத்தியார் ஆச்சே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் அய்யா நலமா தாங்கள் கற்றுக் கொடுத்த கணக்கு தான் இன்று எனக்கு வாழ்க்கை கொடுக்கின்றது. ஐயா தங்கள் தொலைபேசி எண்ணை தாருங்கள் வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து பார்க்கின்றேன் இன்றுதான் இது இடம் மாற்றலாகி வந்தேன் தொலைபேசி என்னை பெற்றுக்கொண்டு அதற்காக தன்னுடைய தொலைபேசி எண்ணை கொடுத்தார் சுப்ரமணியம் ஐயாவும் தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

பணி முடிந்தது மரவாமல் சுப்ரமணியம் அய்யாவின் தொலைபேசியில் அழைத்தார் ஐயா தங்கள் விலாசம் தாருங்கள் நேரில் வருகிறேன் தங்களைப் பார்க்க 15 நிமிடத்தில் ஐயாவின் வீட்டில் இருந்தார் கையில் பழங்களுடன் உரையாடலின்போது அறிந்துகொண்டார் அவரது பிள்ளைகள் அவருக்கு உதவுவது இல்லை என்று எத்தனை மாணவர்களை உருவாக்கியவர் அவர் நிலைமையை கண்டு மனம் வருந்தினார் காசாளர் .வாட்ஸ்அப் நண்பர்கள் குழுவுடன் இந்நிலைமையை பகிர்ந்தார் அனைவரும் முன்வந்தனர் ஒரு சிறிய தொகையை கொண்டு மொத்தம் இருந்த லட்சத்தை கடந்தது இரண்டு நாட்கள் கழித்து தான் நண்பர்கள் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு மற்றொரு நண்பர் உடன் சுப்பிரமணியம் அய்யா வீட்டிற்கு சென்றனர் தங்களிடம் பயின்ற மாணவர்களின் அன்பை அவரிடம் கொடுத்தார் மகிழ்ச்சி அடையும் இந்த வாத்தியாரே அதைப் பெற்றுக்கொண்டு நாளை காலை இருவரும் 9 இங்கு வாருங்கள் என்று அடக்கத்துடன் கேட்டுக்கொண்டார் அவர்களும் மறுநாள் காலை ஒன்பது மணிக்கு அய்யாவின் வீட்டில் இருந்தனர் தயாராக இருந்த ஐயாவும் அவர்கள் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு தன்னோடு வருமாறு அழைத்தார் செல்லும்போதுதான் புரிந்தது தாங்கள் பயின்ற பள்ளியை நோக்கியே நடக்கின்றோம் என்று
தயாராக காத்திருந்த தலைமையாசிரியரும் இவர்கள் மூன்று பேரையும் அன்புடன் வரவேற்றார் சுப்ரமணியம் அய்யாவும் நான் கையில் வைத்திருந்த இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தை தன்னிடம் பயின்ற மாணவர்கள் இடம் கொடுத்தது இதை உங்கள் கையாலேயே அவரிடம் கொடுங்கள் என்றார் தலைமையாசிரியரும் அதைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய ரசீதை அவர்களிடம் கொடுத்தார் நீங்கள் கொடுத்த இந்தப் பணமானது மின்விசிறிகள் வாங்கவும் உடைந்த மேசைகளை சரிசெய்யவும் பயன்படும் என்றார் சுப்ரமணியம் ஐயாவை இருவரும் பார்த்தனர் அவருடனே கடந்த மாதம் பள்ளியை வந்து பார்த்தேன் தலைமையாசிரியர் அரசு பள்ளி என்பதால் யாரும் உதவ முன்வருவதில்லை என்று கூறினார் நீங்கள் எனக்கு செய்ய நினைத்த உதவியை இவர்களுக்கு மாற்றிவிட்டேன் ஏதோ என்னால் முடிந்தது ஒரு வழிகாட்டியாக இருந்தேன் என்று புன்முறுவலுடன் சிரித்தார் அவர் மனதில் ஒரு மகிழ்ச்சி. பழைய மாணவர்களும் மகிழ்ச்சியுடன் நடந்ததை தங்களது குழுமத்தில் பகிர்ந்து கொண்டனர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடுத்த அறிவோம் கொடுத்து சிவந்த கைகளும் என்றும் பிரதிபலன் எதிர்பார்ப்பதில்லை.

என்றும் ஏணிப்படிகள் ஆய் வாழ்கின்றனர் ....
 
M

Mathangi

Guest

இறுதியில் சாவிக் கொத்து


இது 2004 ஆண்டு-ல் நடைபெற்ற என் தோழனுடைய நண்பனின் காதல் கதை. இதை என் தோழன் என்னிடம் பகிர்ந்தது.

என் தோழனின் நண்பனும் அவன் காதலியும் வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். விடுதியில் இருந்த அந்த தோழர்களுக்கு கல்லூரி இறுதி ஆண்டு இரண்டாம் பருவ தேர்வு நடைபெறும் சமயம். பல கனவுகளுடன் தேர்வை முடித்துவிட்டு காதலியை காண துடிப்புடன் இருந்தார் அவர். இரவு உறங்க செல்லும் முன் தன் காதலியை சந்திக்க போகும் தருணத்தை எண்ணிகொண்டு அவருடைய காதலி அவரிடம் ஆசையாக கேட்ட, பெயரிடப்பட்ட சாவிக்கொத்தை (keychain)பார்த்து கொண்டே அதற்க்கு முத்தங்கள் கொடுத்துவிட்டு உறங்கினார்.

அடுத்த நாள் விடுதியில் இருந்த அனைவரும் விடுப்பில் வீட்டுக்கு கிளம்பும் சமயம், கல்லூரி தாளாளர் அனைவரின் விடுப்பை ரத்து செய்ய காரணம் தெரியாமல் முழிக்க, என் தோழனின் நண்பன் உள்பட ஒரு சிலர் முன்கூட்டியே கிளம்பிவிட்டார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் அதிர்ச்சி தகவல், சுனாமி தாக்கியது தமிழகத்தில், செய்திகள் பார்த்து தெரிந்துகொண்டார்கள்.

ஊருக்கு சென்ற என் தோழனின் நண்பன் திரும்பவில்லை. தொடர்புக்கு தொலைபேசிகளும் அதிக அளவில் இல்லை. அவரும் கடல் சார்ந்த மாவட்டம்தானே என்ற நோக்கில் அவருடைய நண்பர்கள் நால்வர் அவரை காண சென்றார்கள். பின்னர் அவர் வீட்டை அடைந்தும், பித்து பிடித்தவன் போல் ஒரு ஓரமாக அவர் இருந்தார், பேசவில்லை யாரிடமும்.

அவர் தம்பியிடம் நண்பர்கள் கேட்க "அண்ணனின் காதலி சுனாமி அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளாள்". அவர் இறுதிவரை தேடியும் அவர் காதலி கிடைக்கவில்லை. நூறுபேரை அடக்கம் செய்த ஒரு குழியைத்தான் அவர் அவளின் கல்லரை என நினைக்கின்றார் என்று கூற,

"கலங்காத என் கண்களும் இல்லை. சொல்ல வார்த்தைகளும் இல்லை."

அவர் கைப்பிடித்து ஆறுதல் சொல்ல என் தோழனின் நண்பர்கள் முயற்சிக்க அவர் கையில் இருந்ததோ அந்த சாவிக்கொத்து (keychain), வார்த்தைகளும் கண்ணீராக மாறியது. இன்று அவர் வேறு ஒரு நாட்டில் குடும்பத்துடன் வாழ்கிறார் என்றாலும் ஆண்டுக்கு ஒருமுறை அந்த 100 பேருக்கும் அஞ்சலி செலுத்த இன்றும் வருகிறார்.

கொத்து கொத்தாக மடிந்த உயிர்களில் அவர் காதலும் ஒன்று....

என் தோழனின், நண்பரை எங்கிருந்தாலும் நான் வாழ்த்துவேன்.......



1658156911692.png
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
This is my own creative dream story!!!

🙏🙏🙏🙏🙏
அனைவருக்கும் வந்தனம் 🙏🙏🙏
வந்த ஜெனம் யாவரும் இந்த கதை கேட்க சற்றே குந்தனும்!!! 🙏🙏🙏

இயற்கையின் பாடம்

பல்லாயிரம், வருஷங்களுக்கு முன்ன ஒரு ஊருல ஒரு மலை இருந்திச்சாம்....🤔🤔

அந்த, மலையில நெறைய நெறைய பெரிய பெரிய அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியா இருந்திச்சாம்.... 🤔🤔

ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு தொடர்பு அலைகள் நிறைஞ்சு இருக்குமாம்.... அப்பேர் பட்ட, அற்புதமான connections உள்ள காடாம் அது!!! 🌴🎋🌳🌲🌴🌳🌲🎋🌴

சாதாரணமா பார்த்தா அது மலையா தெரிஞ்சாலும் மரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமா அந்த பகுதி விளங்கிச்சாம்....❤😍

இப்படி ஒரு பிணைப்பு வெளிப்படுத்தும் இடமா அது இருந்துச்சாம்....🤔🤔

அங்க, ஒரு மரத்துல ரெண்டு அழகான பறவைகள் வாழ்ந்து வந்துச்சாம் 🥰😍
அன்புனா என்னனு இவைகள் இடத்துல தான் கத்துக்கணும் னு கர அளவுக்கு அவளோ ஒரு புரிதல் இருந்துச்சாம்... 😍🦜🦜😍

இப்படி, இருக்கறச்ச ஒரு நாள் ஒரு வேடன் அந்த காட்டுவழியா அந்த அற்புதம் வாய்ந்த மலைக்கு வேட்டை ஆட வராணாம்!!! 😱🤔🙄🏹

அங்கு வந்த அந்த வேடன், பலா பழம், மலை தேன்னு, பற்பல சாதானங்களை அவன் இல்லத்திற்கு எடுத்து செல்ல முற்பட்டு அதற்கு உண்டான செயல்களில் இறங்கும் முன்னாடி அவனை தேடி காற்றிலே ஒரு குரல் எழும்புது.... 🤔🤔🤔

வேடன் : யாரு நீ??? கேட்க மலையரசி பதில் தராலாம்... ❤🥰 நீ யார், னு மலையரசி கேட்க....
நான் இந்த காட்டை வேட்டையாட வந்துருக்கேன் னு வேடன் சொல்ல..... யாரு உனக்கு அனுமதி குடுத்தா உன்னை இந்தபகுதில வேட்டையாடிக்கோ னு சொல்லி னு மலையரசி மிக வெகுண்டு கேட்டு அவ்வேடனை, அந்த மலையில் இருந்து இறங்க கட்டளையிட்டாளாம்!!!🤔🤔

வேடன், அதை பொருட்படுத்தாமல் தனது வேளையில் மும்மரபடுத்தி காரியத்தில் கண்ணா இருந்தானாம்... 🤔🤔

அம்மலையில், உள்ள பலாமரத்தில் ஏறி பழத்தை அறுத்து கொண்டு இருக்கையில் அங்கே அவனது தோள்கள் பட்டு அங்கே வாழ்ந்து வந்த இரு பறவைகளின் கூடு உடையவே 😒😒 கூடுடன் மாண்டது அப்பறவைகளின் சின்னஞ்சிரு குஞ்சுகளும் 😒😒

இரைதேட சென்ற தாய் பறவை அம்மரத்தை அடைந்து தனது கூட்டினை தேட குஞ்சுகளை நச்சு பாம்போ, குரூற பருந்தோ தூக்கி சென்றதோ என மனம் வெந்து எங்குதேடியும் காணவில்லையே எனது அன்பு குஞ்சுகளை !!!😒😒😒

இப்படி, தேடி வெகு தூரம் சென்று விட்டது அப்பறவை....❤😒

இவை, எதுவுமே அறியாத ஆண் பறவை தனது கூடு இருந்த இடத்திற்கு வந்து பார்த்த போது தன் அன்பான துணையையும், அழகு வாய்ந்த தனது குஞ்சுகளையும் காணாம தவிச்சு கூவிக்கொண்டே இருக்கற அந்த சமையத்துல.... 😒😒

வேடன் பலா பழத்தை பறிச்சு எடுத்து தன்னோட தோளில் போட்டு அந்த இடத்தை விட்டு நகர்கயில் அந்த ஆண் பறவை தனது கூட்டை அவன் மிதித்து செல்வதை கண்டு மிகவும் வருந்தியது.... 😒😒😒

தனது அன்பான துணையாள், தனது குடும்பம் என அனைத்தையும் அவன் சுய நலத்திற்காக அழித்து தனது இன்பம் யாவையும் பறித்து சோக கடலில் மூழ்கி அடித்த அந்த வேடனுக்கு தக்க பாடம் கத்து குடுக்க எண்ணியது அப்பறவை!!! ❤😒😒

தொடர்ந்து, அவ் வேடன் தேன் கூட்டில் தேனினை சொறிந்து எடுத்து சென்றான், விறகுற்கு மரங்களை வெட்ட ஆயுத்தமாக்குகையில்....😒😒

மலையரசி அவ் வேடனின் செயல்களை கண்டு மிகவும் கோவம் அடைந்தாள்.... 😡😡😡

இதற்கிடையில், அப்பெண் பறவை தனது குஞ்சுகளை தேடி தேடி துவண்டு ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து தனது கணவனை நோக்கி குரல் எழுப்பிய வண்ணம் இருந்தது.... 🙄🙄😓

ஒரு சின்ன விஷயம் புரிதல் அதுவே மனிதர்களாகிய நாம் யாவரும் நம்மை சுற்றி உள்ள அனைத்திலும் தவறும் ஒன்று!!! 😒

வேடன் செல்லும் இடம் எங்கிலும் அந்த ஆண் பறவை பறந்து செல்ல அவன் மரங்களை வெட்டி விறகை எடுத்து மூங்கில் சூழ்ந்த இடத்தை கடக்க அப்பறவை தனது கால்களினால் வெங்கற்களை உரசி தீ எழுப்பி அங்கே சிறு சரகின் மேல் போட அஃது மூங்கில் எங்கிலும் பெருந்தீயாய் பரவ....🔥❤‍🔥😒😒😒❤‍🔥🔥

வேடன் வேறு வழியில்லாமல் எங்கு செல்வது என அறியாமல் திக்கு தெரியாமல் தவிக்க மயங்கும் சூழலில் யாரோ அபாய குரல் எழுப்புகிறார்களே என பெண் பறவையானவள் இவ்விடம் வந்து காண்கயில் வேடன் 🔥❤‍🔥தீயில்❤‍🔥🔥 சிக்கி தவிப்பதை தாங்கி கொள்ள முடியாத தாய் உள்ள படைத்த அப்பறவை வேடன் வெளியே வர குரல் எழுப்பிக்கொண்டே அவனின் பார்வையிலே படும் படி அவனை வெளி கொண்டு வரும் தருவாயில் மலையரசி யானவள் அப்பெண் பறவையிடம் வேடன் செய்த செயல்களை கூற அவனை அத்தீயிலே இட்டு விடு என்று கட்டளை இட்டும் 😒😒 செவி சாய்காத அப்பெண் பறவை அவ் வேடனை காப்பாற்றி வெளிகொண்டு வந்த சமையத்தில் தனது அன்பான தலைவனை கண்டு ஆனந்த குஷியில் கத்தியது...❤🥰😍

தனது, துணையாளை பார்த்த ஆண்பறவை கண்ணீர் மல்க கொஞ்சி கொளாவி தனது அன்பை அப்பெண் பறவையிடம் பரிமாறியது.... இவை, அனைத்தையும் பார்த்த வேடன் தனது தவறை உணர்ந்தான்.... 😒😒

மலையரசியிடம் மன்னிப்பு கேட்க, அவள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம்!!! நீ, கேட்க வேண்டியது அப்பறவைகளிடம் என்று கூற...❤😒

வேடன், மனமார மன்றாடி அப்பறவைகள் இடம் மன்னிப்பு கேட்க அப்பறவைகள் நாங்கள் எங்களின் சந்தோசமான வாழ்க்கையை தொலைத்தோம்.... உனது, ஒருவனின் சுயநலத்தினால்....😒

இருந்தும், நாங்களும் இம்மலையும் உன்னை போல் இல்லை ஆபத்து என்று வருகையில் எங்கள் ஜீவன் போனாலும் சுற்றம் வாழ ஏது செய்வோம்!! 😍🙏 என்றது... ❤❤❤

வேடன் மிகவும் வெட்கி தனது தவற்றை உணர்ந்து அவ்விடத்திலேயே மலையரசியின் பாதுகாவலனாக தங்களானான்.... ❤🙏🙏🙏

முடிவுரை:

எதை , நீ கொடுக்கிறாயோ... அதையே, நீயும் பெறுகின்றாய்...😍🙏

திருக்குறள் :

🥰இன்னா செய்தாரை ஒருத்தல்
அவர்நான
நன்னையும் செய்து விடல்....!!!❤🥰


இவ்விடத்தில், எனக்கு கதை எழுதிட வாய்ப்பளித்த அனைத்து ❤🥰நல்லுள்ளங்களுக்கும்❤🥰

எமது, மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

என்றும், அன்புடன் உங்கள் ❤🥰 @Argus🥰
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
🥰மாலைபொழுதில் ஓர் வாழ்க்கை பயணம்❤🥰

ஒரு ஊரில், அன்பான கணவனும் மனைவியும் மாலைப்பொழுதில் நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினர். சற்று நேரத்திலேயே இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென சடசடவென மழையும் சாரலுமாக வீசத்தொடங்கியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் பிறகு ஓடத்தொடங்கினர்.... 😱😱

வழியில் பழுதடைந்த ஒரு கயிற்றுப்பாலம் மழைநீரில் அடித்துக் கொண்டு செல்லும் நிலையில் இருப்பதை கண்ட கணவன் முதல் ஆளாக வேகமாக ஓடி பாலத்தை கடந்துவிடுகிறான்...🙄🙄

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான் மனைவி பாலத்தின் நடுவே நின்றுகொண்டு மழைச்சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்துவிட்டதால் மனைவி மீதமிருக்கும் பாலத்தை கடக்க முடியாமல் பயந்து கொண்டாள், மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் மறுபக்கத்தில் இருக்கும் கணவனை துணைக்கு அழைத்தால்...!!!
😔😑

என்னங்க....!!! என்னங்க....!!! 🥺🥺 என்றே கூவிய வண்ணம் இருந்தாள் பயத்துடனே..... தவிப்புடனே.... 😓😓😓

இருட்டில் எதுவும் தெரியவில்லை, மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் எதிர் முனையில் நிற்பதை அறிந்தாள்... தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை உதவிக்கு அழைத்தாள்... கணவன் திரும்பிப் பார்க்கவுமில்லை, எந்த பதிலும் கொடுக்கவுமில்லை...😔😑

"என்ன இந்த மனுசன் பொண்டாட்டி ஆபத்தில் இருக்கும்போது சுயநலத்துடன் கண்டுகொள்ளாமல்..." என அவளுக்குள் ஆத்திரமும் அழுகையுமாய் வந்தது...😭😡😡😡😭

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள், பாலத்தை கடக்கும்போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை கடந்துவிடுகிறாள், கணவனை கோபத்தோடு பார்க்கிறாள்....❤🤨🤨

அங்கு கணவன் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப்பாலத்தை தனது வாயிலும், கையிலும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தான்...😑🥺🥺😑

மனைவியை கண்டு கயிற்றை விட்டுவிடுகிறான்... ❤🥰

வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் நான் உனக்கு பக்க துணையாக இருக்க இயலாது சில பிரச்சினைகளை நீயேதான் சமாளித்து கடக்க வேண்டும் என்கிறான், நீங்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை என்றவள் கட்டியணைத்து கண்ணீருடன் கணவனை முத்தமிடுகிறாள்...❤😘🥰😍😘

சில சமயம், நிறைய பெண்கள் கண்ணிற்கு தன் கணவன் தங்கள் குடும்பத்தைக் கண்டுகொள்ளாத போலத்தான் தெரியும், இதனால் நிறைய குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாகிறது... அதற்கு காரணம் புரிதல் இல்லாதவையே...!!!❤😒

உண்மையிலேயே, தன் மனைவி மற்றும் குடும்பத்தை நேசிக்கும் ஆண்மகன் தன் மகிழ்ச்சியை தொலைத்து பிறருக்காக வாழ ஆரம்பித்தவிடுகிறான் என்பதேதான் உண்மை... அவன் ஒவ்வொரு பொழுதிலும் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறான்!!!❤🥰

தூரத்தில் பார்ப்பவர்களுக்கு இவனென்ன பெரிதாக செய்துவிடப் போகிறான், சுயநலமுடையவன் என்றுதான் தோன்றும் அருகில் சென்று பார்க்கும்போதுதான் அவன் நிலை என்ன என்பது தெரியவரும்...😒

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை, நண்பர்களே...!!! 😊😊

தூரத்தில், இருப்பதுதான் நமக்கு முதலில் தெளிவாக தெரிகிறது, இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் காத்துக்கொண்டுதான் இருக்கிறது.... அந்த, பிரச்சினை அவனவனுக்கு வரும்போது மட்டும்தான் அதன் பொருள் என்னவென்பது புரிகிறது!!!


குறிப்பு :
உண்மையான அன்போடும், நிலையான நம்பிக்கையோடும் கிடைத்த இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்....!!!

இவ்விடத்தில், வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள் பல🙏🙏

என்றும் உங்களுடன் உங்கள் அடியேன்
🙏🥰🙏
@Argus
 
Last edited:

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,249
Points
133
வினையெச்சம்

அங்கே:

அது ஒரு விஞ்ஞானக்கூடம். பலவித அறிவியல் உபகரணங்கள் முக்கால்வாசி அறையை அடைத்திருக்க, ஒரு மூலையில் ஒரு சிறியக் கண்ணாடி அறை ஒன்று இருந்தது. அதன் உள்ளே மிக தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் அந்த விஞ்ஞானி. அவருடைய பல வருட கடின உழைப்பின் விளைவாக கிடைத்த அந்த பொருளை பார்த்து கொண்டிருந்த அவரின் முகத்தில் பெருமையுடன் சிறிது கவலையும் கலந்திருந்தது.

அவருடைய ஆராய்ச்சி பாறைகள் சம்மந்தப்பட்டது. பற்பல ஆண்டுகளின் ஆராய்ச்சிக்கு பிறகு, ஒரு குன்றில் ஒரு மிகக்கடினமான பாறையை கண்டுபிடித்தார். அதை சுக்கல் சுக்கலாக உடைத்து எடுத்த போது அந்த அரிய வகை கல் கிடைத்தது. மிகவும் கடினமாகவும் இல்லாமல் மிருதுவாகவும் இல்லாமல் கைக்கு அடக்கமான அளவில் பந்து போல இருந்தது அது. அதன் மேற்பரப்பில் அங்கங்கே தண்ணீர் திட்டுகளும் தோன்றி இருந்தன. அவ்வளவு கடினமான பாறையின் நடுவில் தண்ணீர் எப்படி தோன்றியது என்றும், அதன் மூலம் எதுவாக இருக்கக்கூடும் என்ற பரிசோதனையில் தான் விஞ்ஞானி ஈடுபட ஆரம்பித்தார் .

கடலின் நீலமும், மரகத பச்சையும், பளிங்கின் வெண்மையும், சிவப்பும் மஞ்சளும் கருப்பும் என எல்லா வண்ணங்களும் சரியான அளவில் சேர்ந்து கண்ணைப் பறித்தது அந்த அதிசய கல். இன்னும் ஆராய்ந்து பார்த்ததில் கனிமங்களின் சுரங்கமாக இருந்தது அது. இரும்பு, வெள்ளி, தங்கம், செம்பு ஆரம்பித்து இந்த உலகில் உள்ள அனைத்து கனிமங்களையும் அடக்கியிருந்தது அந்த கல். அதே பாறையில் கிடைத்த மற்ற பகுதிகளில் சில சிறப்புகள் இருந்த போதும் இந்த அதிசய கல்லைப் போன்ற பொலிவு மற்றவற்றில் இல்லை. அதன் சிறப்பு அதில் உள்ள தண்ணீரினால் வந்திருக்குமோ என்ற ஆராய்ச்சியில் மூழ்கினார் அவர்.

கவனத்துடன் அதை ஒரு கண்ணாடி பெட்டகத்தில் பாதுகாத்து தேவையான அளவு வெப்பம், வெளிச்சம், ஈரப்பதம் எனக் கொடுத்து ஒரு பொக்கிஷமாகவே பாதுகாத்து வந்தார். அல்லும் பகலும் அந்த கல்லை பற்றிய ஆராய்ச்சியிலேயே முழு கவனமாக இருந்தார். தூங்கும் நேரம் தவிர அவருடைய நேரம் முழுவதையும் பல வருடங்களாக அந்த கல்லினோடே செலவழித்தார். கல்லில் உள்ள ஈரம் போய்விட கூடாதென்று ஈரப்பதத்தை மிகவும் கவனத்துடன் கண்காணித்து கொண்டிருந்தார். சொல்லப்போனால் அவருடைய உலகமே அந்த கல்லாக தான் இருந்தது.

ஆனால் கவனக்குறைவு காரணமாகவோ, ஈரப்பதம் அதிகமானதோ, இல்லை அது தான் இயல்போ, சில நாட்களில் அதன் மேல் பாசி படர்ந்து வேகமாக வளர ஆரம்பித்தது. அந்த கல்லின் கனிமங்களின் வீரியம் இந்த பாசியின் துணையால் இன்னும் பெருகுவதுப் போலத் தோன்ற அது அவர் ஆர்வத்தை தூண்டியது. இந்த அதிசய நிகழ்வால் அவருடைய ஆராய்ச்சி நேரம் அதிகரித்து போனது. அவருடைய நண்பர்கள் அனைவரும் "கடவுளே!! எப்போ பார்த்தாலும் இதே ஆராய்ச்சியா? விட்டு விட்டு வேறு வேலையை பார்!!" என்று நொந்து போகும் அளவுக்கு ஆராய்ச்சி கூட்டத்திலேயே முழு நேரத்தையும் செலவிட ஆரம்பித்தார்.

இந்த நேரத்தில், திடீரென்று அந்த கல்லின் பளீர் தோற்றம் குறைய ஆரம்பித்து, அங்கங்கே திட்டு திட்டாக நிறம் மங்கலாக தெரிய ஆரம்பித்தது. பாசிப்படலத்தில் வாழும் நுண்ணியிரிகளால் முதலில் பாசியும் பின்னர் அதிசய கல்லும் பாதிக்கப்பட்டன. பல கிருமிநாசினிகளை அடித்து பார்த்தும் ஒரு பலனும் இல்லை. குறிப்பு புத்தகங்களிலும் இந்த வகையான கல்லைப் பற்றிய தகவல்கள் இல்லாததால் விஞ்ஞானிக்கு குழப்பாகவே இருந்தது. அந்த அதிசய கல்லுக்கும், மாய பாசிக்கும் பாதிப்பில்லாமல், இந்த சிக்கலில் இருந்து எப்படி விடுபடுவது என்பதிலேயே முழுநேரத்தையும் செலவிட்டார்.

நாளாக நாளாக கிருமியின் தாக்குதல் அதிகமாக, இதற்கு மேல் விட்டால் இன்னும் பரவி அந்த கல்லின் தன்மையையே நாசமாக்கிவிடும் என்பதால் விஞ்ஞானியின் கவலை அதிகரித்தது. இந்த முறை கொஞ்சம் அதிகமான வீரியமுடைய கிருமிநாசினி ஒன்றை வாங்கி வந்தார். சோதனை முறையில் மிகமிக சிறிய அளவில் அடித்துப் பார்த்து வெற்றிபெற்றால் அதையே உபயோகப்படுத்தலாம் என்று எண்ணி அதை கையில் எடுத்த பொது.. நண்பன் ஒருவனின் குரல் அருகில் கேட்டது "ஆண்டவா!!! இன்னுமா நீ கிளம்பல. விழாவுக்கு நேரமாச்சு!! சீக்கிரம் கிளம்பு!!".
அவசரமாக கிளம்பிய விஞ்ஞானி, கையிலிருந்த குப்பியை கீழே வைக்கும் பொது, அந்த மருந்தின் மிகச்சிறிய துளி ஒன்று அந்த கல்லின் மீது பட்டது...


இங்கே:

தூரத்தில் ஒரு தொலைக்காட்சி அவசர செய்திகளை நிதானமா சொல்லி கொண்டிருந்தது. "புதிதாக உருவாகியுள்ள கொரோனா தோற்று காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள்.... "
 
Status
Not open for further replies.
Top