• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Try பண்ணுவோம்...

மழை சாரல் வீசும் போது

உந்தன் நியாபகம் அன்பே...



உன்னை நானும் கண்டபின்பு

இதயம் தொலைந்து நின்றேன்..



காலம் நேரம் பார்க்க வேண்டாம்..

காதல் செய்வோம் அன்பே..



காதல் செய்து களைத்துவிட்டால்

மீண்டும் காதலிப்போம் அன்பே...



சரணம் -1



நீரினில் தவிக்கும் இலையை போல

நீயும் நானும்தான் அன்பே..



நீ தந்த காதலுக்கு பரிசு என்ன?

என் உயிர் மட்டுமே அன்பே..



நிஜங்கள் எல்லாம் தோற்று போகட்டும்..



நீ மட்டும் போதும் அன்பே..



நீயின்றி வாழ்ந்தால் நீரும் ஒருநாள்



தீப்பற்றி எரியும் அன்பே..



காலம் நேரம் பார்க்க வேண்டாம்..



காதலிப்போம் வா அன்பே...



காதல் செய்து களைத்து விட்டால்



மீண்டும் காதலிப்போம் அன்பே...



Bgm



சரணம் -2



பூவுக்குள் எத்தனை தேன்துளி..



அதை என் கண்ணீர் சொல்லிடும் அன்பே..



உன் பூவிரல் பிடித்திட நினைக்கிறேன்..



உன் கரம் கொண்டு அணைத்திடு அன்பே..



வாசக்கதவை திறந்து வைக்கிறேன்..

வாழ்ந்திட வேண்டும் வந்திடு அன்பே..



வாழ்க்கையில் வந்த உன் உறவு மட்டும்

வாழ்த்திட வேண்டும் அன்பே..



காலம் நேரம் பார்க்க வேண்டாம்..



காதலிப்போம் வா அன்பே..



காதல் சொல்ல காத்திருக்கிறேன்...



காலம் தாழ்த்தாமல் வா என் முன்பே..



மழை சாரல் வீசும் போது




உன்னை கண்டேன் அன்பே..
 
Last edited:
Back
Top