What's new

Vote for Best Poem considering the tone and relevant content , choice of words and rhyme scheme

Vote for Best Poem considering the tone and relevant content , choice of words and rhyme scheme

  • argus

    Votes: 9 45.0%
  • Maadhavan

    Votes: 3 15.0%
  • aaa2zzz

    Votes: 7 35.0%
  • Erwen

    Votes: 4 20.0%
  • Mathangi

    Votes: 10 50.0%
  • Jokerr

    Votes: 5 25.0%
  • BlueDiamond

    Votes: 2 10.0%
  • ThePopeye

    Votes: 10 50.0%

  • Total voters
    20
  • Poll closed .

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445
Points
133
POETRY CONTEST

On the Occasion of Tamil New Year!!! We are thrilled to announce the first C2F poetry contest entitled PEN & THE PAD The C2F users are asked to take part and present their valuable contribution. They can post their poems in the forum. The theme of the poetry contest is MILESTONES AND MEMORIES. The poem submitted should not exceed 20 lines. Grades will be given according to the tone, choice of words and rhyme scheme. The link(https://www.chat2friends.com/forum/index.php?threads/poetry-contest.1098/) will be open for a week till 09/04/2022. The winners will be awarded with a VIP/PRO badge.


1) Argus

✒️🖋️The Pen and The Pad📜🗒️

🥰ஓ... மனமே....!!!
எண்ணும்
எழுத்தும் கண்ணும் கருத்துமாய் மாற...🤔🤔
கடந்து வந்தான் புள்ளி கோட்டை நோக்கியே சுமந்து நின்றான் வாழ்வின் பாரத்தையே...🥰
படித்து வென்றான் பட்டமென்னும் ஞானத்தையே , பட்டுத் தெளிந்தான் வாழ்க்கையின் அரும்பாடத்தையே...🥰
வேலை புரிந்தான் விடாமுயற்சியுடன்
சோலை படைத்தான் மதிய கனாவினிலே...🥰
காதல் கொண்டான் சிறு மனதையே😒
மோதல் கொண்டான் அவன் மனதுடனே...🤣
கற்றது கல்லளவே கல்லா புலமையை தேடியே ஓடும் கூட்டத்திலே ஆயிரத்தில் ஒருவனானான்... 🥰
நினைக்கும் நினைவெல்லாம் நீங்காமல் நிலைத்திட, வாழ்வில் தூங்கா மைல்கல்லை படைத்திட வித்திட்ட அன்பு நெஞ்சங்களுக்கு சமர்ப்பணம்...❤

2) Maadhavan


📝
PEN AND THE PAD'' POETRY CONTEST
📚



📌
*மைல்கற்கள் மற்றும் நினைவுகள்*
📎


✒
ஆம்.. அது நான்தான்!..
🙏


📈
செல்லும் பாதை எங்கும் கரடுமுரடாகினும்..தடையின்றி பாய்ந்தோடும் காட்டாறு போல..
வாழ்க்கை பயணத்தில் பல தடைகளையும் தாண்டி நேர்வழி நடந்தேன்..

🚶
👍

ஒவ்வொரு 'அடியும்' எனக்கு வெற்றியின் 'மைல்கல்லாக' அமைந்த நினைவுகள்
என் நெஞ்சைவிட்டு அகலுமோ?

☺
💪

லட்சிய பாதைகளில் குறுக்கிட்ட அவநம்பிக்கைகள் என்னும்..
தடைக்கற்கள் அனைத்தையும் தகர்த்து.. 'நம்பிக்கை' என்னும்
படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறினேன்..
தடைக்கற்கள் அனைத்தும் வெற்றியின் 'மைல்கற்களாக' மாறிய..
நினைவுகள்தான் என் நெஞ்சைவிட்டு அகலுமோ?

🤗
👉

பல்வேறு பாதைகள்.. பல்வேறு பயணங்கள்..
வெற்றிக்கான தேடல்களையும் .. வாழ்க்கை பயணங்கள்
எனக்கு கற்றுத்தந்த பாடங்களையும் ..என்றும் நீங்காத நினைவுகளாக..
என் நெஞ்சில் நிலைநிறுத்தி.. இன்றும் ...
லட்சிய பாதையில் பயணித்து கொண்டிருக்கின்றேன்...
வெற்றிக்கான 'மைல்கற்களை' தேடி..


🙋
ஆம்.. அது நானே தான்!.
👊
👍



3) aaa2zzz


செங்கதிர் போலவே பூமியின் மேலே
சட்டென நானும் கால் பதித்தேனே
சிந்தையில் தோன்றும் செயல்கள் யாவும்
இச் - சந்தையில் செய்தே தடம் பதித்தேனே
கந்தலாய் எந்தன் எண்ணங்கள் எல்லாம்
நொந்து தான் போனால் வீழ்ந்திடுவேனா?
முந்தைய முயற்சி தோற்ற வகையில்
பிந்தைய செயலை நான் செய்திடுவேனே
வெற்றி என்னும் ஒற்றை சொல்லை
பற்றி பிடிக்க போராட்டம்
கற்ற யாவும் எனை பின்தொடர
சற்றே நானும் முன் சென்றேன்
விதி எனை துரத்தி தோற்றிட வைக்க
சதி வலை பின்னி பிடித்தே இழுக்கும்
கதி என வெற்றி அதை நான் கொள்வேன்
விளக்கிற்கு வரும் விட்டில் பூச்சியாய்
புழக்கத்தில் நானும் இருந்திட மாட்டேன்
ஞாலம் சுற்றிடும் சூரியன் போல
உயர சென்று என் தடம் பதிப்பேனே!


4) Erwen

கடந்து போனாலும் கனமாக
இருக்கிறது மனது.. கலைந்து
போனாலும் கனவாக
இருக்கிறது நினைவு..!

நினைவுகள் நல்லதாக
இருந்தாலும் சரி கெட்டதாக
இருந்தாலும் சரி நம்ம கூட
தான் இருக்கும்..
மறக்க முடியாது.

நினைவுகள் நிஜம் இல்லை
என்று தெரிந்தாலும்.. மனம்
என்னவோ நினைவுகளை
தான் நேசிக்கிறது..!

தொலைத்த இடமும்
தெரிகின்றது.. தொலைந்த
பொருளும் தெரிகின்றது..
வலியும் உணரப்படுகிறது..
ஆனால் திருப்பி மீட்கத்தான்
முடியவில்லை. எல்லாமே
நினைவுகளாக.

பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
பிடிக்காமல் போகிறது சிலரை..
வெறுப்பதற்கு காரணம்
இருந்தும் வெறுக்க
முடியவில்லை சிலரை..!

நிஜங்கள் தரும் சந்தோஷத்தை
விட நினைவுகள் தரும்
சந்தோஷம் அதிகம்..
அதனால் தான் நிஜங்கள்
நிலைப்பதில்லை நினைவுகள்
என்றும் அழிவதில்லை.


காலங்கள் கடந்தும் காலாவதி
ஆகிவிடாத மருந்து..
அன்பானவர்களின் அழகான
நினைவுகள் மட்டுமே..!

முகவரி இன்றி முடிந்து போன
உறவுகளிடம் தான் முடங்கி
விடுகிறது நம் நினைவுகள்.

மறதி உன்னை மனிதன்
ஆக்கும் ஆனால் நினைவுகள்
உன்னை கலைஞன் ஆக்கும்.

மீண்டும் மீண்டும்
நினைக்கத் தோன்றும் கடந்த
காலத்தின் சில நினைவுகள்
தான் நம் வாழ்வின்
வசந்த காலம்.

5) Mathangi



"மைல்கற்கள் மற்றும் நினைவுகள்"

தாய் ஈன்ற கருவிலே,
சேய்யாய் பல தடைகள் தாண்டி,
பெண் என்ற இனத்தில்
விண்ணுலகை எட்டி பிடிக்க
மண்ணுலகை எதிர்க்க வந்த மங்கை,
கடந்த வந்த பாதை
கண்ணீரின் ரணமாய்
காலம் கடந்த போதிலும்
நினைவின் எல்லை வரை நீங்கிடாமல்
ஒவ்வொரு துயரமும், சோதனையையும்
எதிர்த்து சாதனையை முன் வைத்து
மானிட வாழ்வில் வெற்றி படியை தொட்டு தொடர
தோல்வி வந்த போதிலும் துவண்டு வீழாமல்
எட்டிய தோல்வி யாவும்
லட்சிய பாதைக்கு எட்டும் போராட்டமாய் எண்ணி,
வெற்றி பாதைக்கு கற்று தந்த அனுபவமாய்,
என் முதல் வாகை பூவாய் அமைந்த நம்பிக்கை மைல்கல்.


6) Jokerr

தனியா இருந்தேன் நான் இங்கே
வழிதெரியாமல் திரிந்தேன் நானிங்கே
தென்றலாய் வந்தாய் நீ இங்கே
மனதின் சுமை இறக்க வழி தந்தாய் நீ இங்கே
உன் இசையால் கிறங்க வைத்தாய் நீ இங்கே
மனதில் படர வைத்தாய் உன் இசையை நீ இங்கே
வாழ்வைத் தொலைத்து நின்றேன் நான் இங்கே
கரம்பிடித்து வாழ்வின் துணை நிற்பேன் நான் என்றாய் நீ இங்கே
அணைந்த விளக்காய் நின்றேன் நான் இங்கே
சுடர் கொண்டுவந்தாய் துணையாக நீ இங்கே
வாழ்வின் மாற்றம் கண்டேன் உன்னால் நான் இங்கே
பட்டமரம் துளிர்த்தது உன்னால் தான் இங்கே
தென்றல் மறைந்தது இசையும் அகன்றது வெற்றிடம் ஆனது நெஞ்சம் பற்றிய கரமும் உதறிப் போனது துளிர்த்த மரமும் பட்டுப்போக தொடர்ந்தது இங்கே
கனவாய் போன நினைவுகளுடன்
நான் இங்கு
காத்திருக்கிறேன் ....Jokerr

7) BlueDiamond

Natpu illamal irupathu saathiyam endral andru ulagam alivathum saathiyamey !

Kadhalin valigalai vida, natpin vali athigam endru thozhi unnidam unarthen!

Kaaya padatha manamum illai kanneer sinthatha kangalum illai, kaayangalai agatravum kanneerai thudaikavum thozhi enaku nee indri veru yarum illai!

Pookkaluku pesa theriyathu therinthirunthaal solli vidum unnai pol oru thozhi enaku kedaithirunthaal naan thinam thinam vaadamal irunthirupen endru!!!

Etha kavithaiya eduthukonga illa kadithama eduthukonga poova pushmam nu sollalaam puipam nu sollalaam 🤪🤪


8) ThePopeye



எட்டுத்திக்கும் என் பேர் சொல்லி கொட்டு முரசே என்பேன்!
பட்டி தொட்டி யாவும் என்
பாட்டால் உறையும் என்பேன்!!

தோட்டம் யாவும் ஓர்நாள் எனக்காய்
பூக்கள் பூக்கும் என்பேன் !
தோகை மயிலும் என்னை கண்டால்
தோகை விரிக்கும் என்பேன் !!

கோட்டை கூட என் பேர் சொன்னால்
கூவி திறக்கும் என்பேன்!
தோல்விக்கெந்தன் பேரை கேட்டால்
தொடையும் நடுங்கும் என்பேன்!!

ஓர் நாள் எந்தன் எண்ணம்
யாவும் உள்ளபடியே பலிக்கும்!
தடைக்கல் யாவும் படிக்கல்லாகி
என் வாழ்வின் மைல்கல் பிறக்கும்!!!

நம்பிக்கையுடன் The Popeye🚬🚬
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Am very much glad and its a pleasure to be a part in this poetry contest 😍🥰 meeting all wise poems with some enhancing credits in their own creation... Thank U C2F TEAM for creating such a wonderful opportunity in this platform for showcasing our inner abilities 😍🥰WIN OR LOSE no matter for me in this contest.... Being a part, itself a great memorable moment in between famous poets is a previlage and happiest thing 😍🥰😘 i wish U all the partcipants very best for winning in this contest... I request our C2F TEAM to conduct such kinda contest more for exhibiting our users' skills and talents specifically ❤🥰😍

Thank U one and all for voting me too.... 😍🙏 tqsm C2F team.... Love U all 😍🥰 tc... Cheers❤🥰
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Dear mamz and C2F TEAM,
HAPPY TO SEE THIS ENCOURAGING ACTIVITIES!!! 🥰😍❤WE ARE GLAD AND OUR PLEASURE TO MAKE OURSELVES INDULGED AND OCCUPIED AS A PARTICIPANTS IN UPCOMING CONTESTS LIKE THIS.... VERY HAPPY TO SEE THE THIS POETRY CONTEST WINNERS 😍🥰... MY HEARTY CONGRATULATIONS TO BOTH THE WINNERS @Mathangi AND @Popeye ❤🥰😍
HAPPY FOR BOTH OF U MY DEARS!!❤🥰😍
I REQUEST OUR C2F CREW TO CONDUCT MORE INNOVATIVE CONTESTS LIKE THIS AND LET US BE A TOOL FOR EXHIBITING ALL OUR CHAT USERS SKILLS AND INDIVIDUALITY😍🥰
THANKS FOR CONDUCTING THIS CONTEST.... ❤🥰😍 AM SO PROUD TO BE A PARTICIPANT IN THIS POETRY CONTEST😍
TQSM C2F TEAM😍🥰 HATS OFF TO THE CREW, FOR THIS KINDA CONTESTS CONDUCTING IDEALOGY AT THE EARLIEST IN OUR C2F FORUM ❤🥰😍🙏 LOVE U ALL🙏😊🥰
 
M

Mathangi

Guest
என் அன்பார்ந்த c2f நண்பர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்,

இப்போட்டியில் பங்கேற்க வாய்பளித்த c2f Admin-க்கும் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்து ஊக்குவித்த என் அன்பார்ந்த தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல🙏🙏🙏🙏 🥰🥰🥰
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
844
Points
133
Dear mamz and C2F TEAM,
HAPPY TO SEE THIS ENCOURAGING ACTIVITIES!!! 🥰😍❤WE ARE GLAD AND OUR PLEASURE TO MAKE OURSELVES INDULGED AND OCCUPIED AS A PARTICIPANTS IN UPCOMING CONTESTS LIKE THIS.... VERY HAPPY TO SEE THE THIS POETRY CONTEST WINNERS 😍🥰... MY HEARTY CONGRATULATIONS TO BOTH THE WINNERS @Mathangi AND @Popeye ❤🥰😍
HAPPY FOR BOTH OF U MY DEARS!!❤🥰😍
I REQUEST OUR C2F CREW TO CONDUCT MORE INNOVATIVE CONTESTS LIKE THIS AND LET US BE A TOOL FOR EXHIBITING ALL OUR CHAT USERS SKILLS AND INDIVIDUALITY😍🥰
THANKS FOR CONDUCTING THIS CONTEST.... ❤🥰😍 AM SO PROUD TO BE A PARTICIPANT IN THIS POETRY CONTEST😍
TQSM C2F TEAM😍🥰 HATS OFF TO THE CREW, FOR THIS KINDA CONTESTS CONDUCTING IDEALOGY AT THE EARLIEST IN OUR C2F FORUM ❤🥰😍🙏 LOVE U ALL🙏😊🥰
Thank you so much argus ☺️😍😍❤️
 
Top