What's new

Unconditional... Undefinable....

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
கண்ணில் தெரிகிறாய்
காணும் காட்சியில்....

பண்ணில் உறைக்கிறாய்
வேணு கானமென...
கேட்கும் இசையில்...

உண்ணுதலில் நிறைகிறாய்
அமிழ்தெனும் சுவையாய்...
உட்கொள்ளும் நிவேதனத்தில்....

என்னில் பரவுகிறாய்
அழகிய சுகந்தமாய்....
உள்ளிழுக்கும் நாசிக் காற்றில் .....

எண்ணத்தில் உயிராகி....
ஆழமாய் ஆலிங்கனமிட்டு....
ஆடுகிறாய் உள்ளத்தில்.....

என்னூனில்...
உச்சம்பெற்று..
அதிர்ந்து...
உருக்குகிறாய்...
அங்கமெங்கும்....
அகமெங்கும்...
சிலிர்க்க சிலிர்க்க.....

ஒளியாய்.. ஒலியாய்...
சுவையாய்... சுவாசமாய் ...
நினைவாய்.. நானேயாய்..
நீயே....

காட்சியிலும், காற்றிலும்....
கானத்திலும், கவளச் சோற்றிலும்... கருத்திலும், காயத்திலும்...
காதலாகிக்
கசிந்து...
உருகி ...
உறைந்து..
உணர்வாகிறேன்...
உன்னில் உயிராய்....

பக்தனின் காட்சிக்காய்
தரிசனம் தரும்...
கோபுர காதல் சிற்பம்
போன்ற....

சித்திக்கும் முத்திக்கும்
சாட்சியாகும்....

காயம் கடந்த காதல் தரம்....
கருவறை தரிசனம் தரும்
காதல் வரம்....

கட்டுப்பாடற்ற காதல்
கண்ணனில் கொண்ட காதல்...
சைதன்ய அவதாரமாய்...

இரண்டற கலந்த ஒன்று....



Screenshot_20240106_124713_Instagram.jpg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கண்ணில் தெரிகிறாய்
காணும் காட்சியில்....

பண்ணில் உறைக்கிறாய்
வேணு கானமென...
கேட்கும் இசையில்...


உண்ணுதலில் நிறைகிறாய்
அமிழ்தெனும் சுவையாய்...
உட்கொள்ளும் நிவேதனத்தில்....

என்னில் பரவுகிறாய்
அழகிய சுகந்தமாய்....
உள்ளிழுக்கும் நாசிக் காற்றில் .....

எண்ணத்தில் உயிராகி....
ஆழமாய் ஆலிங்கனமிட்டு....
ஆடுகிறாய் உள்ளத்தில்.....

என்னூனில்...
உச்சம்பெற்று..
அதிர்ந்து...
உருக்குகிறாய்...
அங்கமெங்கும்....
அகமெங்கும்...
சிலிர்க்க சிலிர்க்க.....

ஒளியாய்.. ஒலியாய்...
சுவையாய்... சுவாசமாய் ...
நினைவாய்.. நானேயாய்..
நீயே....

காட்சியிலும், காற்றிலும்....
கானத்திலும், கவளச் சோற்றிலும்... கருத்திலும், காயத்திலும்...
காதலாகிக்
கசிந்து...
உருகி ...
உறைந்து..
உணர்வாகிறேன்...
உன்னில் உயிராய்....

பக்தனின் காட்சிக்காய்
தரிசனம் தரும்...
கோபுர காதல் சிற்பம்
போன்ற....

சித்திக்கும் முத்திக்கும்
சாட்சியாகும்....

காயம் கடந்த காதல் தரம்....
கருவறை தரிசனம் தரும்
காதல் வரம்....

கட்டுப்பாடற்ற காதல்
கண்ணனில் கொண்ட காதல்...
சைதன்ய அவதாரமாய்...

இரண்டற கலந்த ஒன்று....



View attachment 17392
செம 🥰@Nilaa வைட்டு 😍👌👌👌 sweet அருமை 😍💐
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
உருவற்ற உயிரிலேயே...
உள்ளத்தைக் கொடுக்கும்
உயரிய காதல்......

உருவாக உருவாக....
உணர்வினால் உச்சமடையும்
உன்னத காதல்......

எண்ணும் எண்ணங்களில்...
காணும் வண்ணங்களில்...
வாசிக்கும் எழுத்துகளில்..
பேசும் மொழிகளில்.....

நல்லதையே உருப்போட்டு உருப்போட்டு....
நம்பிக்கையை
உரமிட்டு...
துணிவை தூபம்போட்டு...
தூயதையே தீனியிட்டு...

உதிக்கும் முன்பே
உயர்விக்கும்...
மாசற்ற காதல்.....

வளர வளர வாஞ்சையாய் வார்த்தெடுக்கும்...
வார்த்தைகளில்....
வரைந்திட முடியா
வான் காதல்.....

அழகும் நிறமும்
அறியா ஆழமான நேசம்.....
அறிந்தும் மாறாத
மருவற்ற மட்டற்ற நேசம்....

கட்டுபாடற்ற காதல்...
கரை காணா காதல்..
அளக்க முடியா காதல்....

அன்னையின் காதல்...
 

Eraser

Beta squad member
Beta Squad
Joined
Jan 6, 2022
Messages
47
Points
73
விண்ணையும் மண்ணையும்
மட்டுமன்றி
தன்னையும் மறந்த‌
கண்ணனின்
உன்னத நிலை இது 🤍🖤🤍
 

Attachments

  • Screenshot_20240319_180753.jpg
    Screenshot_20240319_180753.jpg
    637.7 KB · Views: 1

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133

காற்றில் கரைகிறேன்.....


கண்களின் சிரிப்பு ....
எண்ணங்களை சிதறடிக்க .....

கன்னத்துச் சிவப்பு...
என்னைச் சிறைபிடிக்க ....

கருஞ் சுருள் சிகை
என்னுள் சிறகடிக்க ....

கவரும் இதழ் நகை
என்பிலும் சிலிர்த்திட ....

கார்மேக மேனியனோ....
கருநீல மாயோனோ.....

குழலூதும் குழந்தையின்...
கள்ளமிலா குறுஞ்சிரிப்பில்...
கவின்மிகு அருள் முகத்தில்.....

குதூகலித்து.....
குழம்பி....
கரைகிறேன் .....

காற்றில் ...
காணாமல் ....
மாயமாய் .....


மாயக் கண்ணனாய்
நானும் ....




PhotoGrid_Site_1712301281292.jpg
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
தூரல் நனைக்கும்
சாலையில்....


தேனீர் இனித்ததா....

திருமேனி சிலிர்த்ததா...

துடிப்பான
தோழனுடன்...

சிலாகித்துச் சிரிக்கும்

சின்ன கண்ணன் ....

download (28).jpeg
 
Top