• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

அளவில்லாதது..♥

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
காதல்.

காதலை விரும்பாத உயிர்கள் இவ்வுலகில் இல்லை என்றும் சொல்லலாம்.
காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது.
பல பரிமாணங்களில் உலாவி வருவது.
உண்மை காதலை உணர்ந்தவருக்கு அது உயிரானது. மெய்யான காதலில் மூழ்கியவர்களுக்கு அது உரிமையானது.
காதலை உணராமல் வெறுப்பவர்களுக்கு அது பொய்யானது.
ஒரு தலை காதலாக இருப்பவர்களுக்கு அது புதிரானது. காதலே செய்யாமல் வாழ்பவர்களுக்கு அது விசித்திரமானது.
காதலை ஆராய்பவர்களுக்கு அது வினோதமானது. எப்படி இருந்தாலும் காதல் வாழ்வானது சாகும் வரை அள்ள அள்ள குறையாமல் அளந்து கொண்டே போகும் அளவில்லாதது..♥
 
Back
Top